அவநம்பிக்கையின் விளைவுகள்

சீரியாவின் ராஜாவாகிய பெனாதாத் சமாரியாவை முற்றுகையிட்டான், ஒரு பெண் தன் பைத்தியக்காரத்தனத்திலும், துயரத்திலும், பசியிலும் தன் மகனை சமைத்து சாப்பிட்டாள் (2 இராஜாக்கள் 6:29). இஸ்ரவேலின் ராஜாவான யோராம் உண்மையில் எலிசாவைக் குற்றம் சாட்டினான்.  இருப்பினும், முற்றுகையில் முடிவடையும் என்று எலிசா தீர்க்கதரிசனம் கூறினார்.  "அப்பொழுது ராஜாவுக்குக் கைலாகு கொடுக்கிற பிரதானி ஒருவன் தேவனுடைய மனுஷனுக்குப் பிரதியுத்தரமாக: இதோ, கர்த்தர் வானத்திலே மதகுகளை உண்டாக்கினாலும் இப்படி நடக்குமா என்றான். அதற்கு அவன்: உன்னுடைய கண்களினாலே அதைக் காண்பாய்; ஆனாலும் அதிலே சாப்பிடமாட்டாய் என்றான்” (2 இராஜாக்கள் 7:2). துரதிர்ஷ்டவசமாக, தேவனின் வல்லமையினாலும் அற்புதத்தினாலும் முற்றுகை நீக்கப்பட்டபோது நகர வாயிலுக்கு விரைந்த கூட்டத்தால் அந்த பிரதானி மிதிக்கப்பட்டான்.  அவநம்பிக்கை என்பது சில உண்மைகள் அல்லது சான்றுகள் மற்றும் சத்தியத்தை நம்ப மறுப்பது ஆகும்.  நம்பிக்கையின்மை தேவனைக் கேள்வி கேட்கத் துணிகிறது.

நல்ல தேவன்:
தேவனை நம்பாதவர்கள் அவர் நல்லவர் என்று நம்ப மறுக்கிறார்கள்.  இரக்கமுள்ள, கிருபையுள்ள, நல்ல தேவன் அவர்களின் கிரகிப்பு அல்லது புரிதலுக்கு அப்பாற்பட்டவர்.  அவர்கள் உலகில் துன்பம் அல்லது வேதனையை பெரிதாக்குகிறார்கள், தேவனின் நன்மையை மறைக்கிறார்கள்.

தேவன் வாக்குறுதயைக் காப்பாற்றுவாரா?:
தேவன் அவர் கொடுத்த வாக்குறுதியைக் காப்பாற்ற முடியுமா என்று பிரதானி யோசித்தான்.  தேவனுக்கு அவருடைய வாக்குறுதிகளை நிறைவேற்றும் திறன் இருக்கிறதா?  தேவன் உடன்படிக்கையைக் கடைப்பிடிப்பவர்.  தேவனின் நேர்மை மற்றும் உண்மைத்தன்மை ஆகியவை சவாலிடப்பட்டன.  “கர்த்தாவே, உமது கிருபை வானங்களில் விளங்குகிறது; உமது சத்தியம் மேகமண்டலங்கள் பரியந்தம் எட்டுகிறது” (சங்கீதம் 36:5). பத்து வேவுகாரர்கள் அவிசுவாசமான பொல்லாத அறிக்கையைக் கொடுத்தார்கள் (எண்ணாகமம் 13:2).

வல்லமையுள்ள தேவன்:
அந்த பிரதானி, வானம் திறந்தாலும் அது சாத்தியமில்லை என சொன்னான்.  தேவன் தனது ஆசீர்வாதங்களைப் பொழிவதற்கு வானத்தைத் திறக்க முடியுமா?  ஆம், தேவனால் முடியாதது ஏதும் உள்ளதா என்ன?  (ஆதியாகமம் 18:14). அநேகர் தேவனை வரையறுக்கப்பட்ட கட்டமைப்புக்குள் எண்ணுகிறார்கள்.  தேவனின் வல்லமை, ஞானம், கிருபை, அன்பு எல்லையற்றது.

சிருஷ்டிப்பின் தேவன்:
படைப்பாளராகிய தேவன், மனித கற்பனைக்கும் புரிந்துகொள்ளுதலுக்கும் அப்பாற்பட்ட வல்லமையான, அதிசயமான மற்றும் அற்புதமான விஷயங்களைச் செய்ய முடியும்.  சீரிய சேனை எலிசாவை கைது செய்ய வந்தபோது தோற்கடிக்கப்பட்டது.  அவர்கள் தடியடி நடத்திய படையை தேவன் குருடாக்கினார் (2 இராஜாக்கள் 6:18-23). பிரதானி இதைக் கண்டாலும் தேவனை நம்ப முடியவில்லை.  முற்றுகையிட்ட அதே சேனை மற்ற தேசத்து இராணுவம் அணுகுவதைக் கேட்டு ஓடிவிடும் (2 இராஜாக்கள் 7:6).

அவிசுவாசத்தால் என் மனம் குருடாகிவிட்டதா?

Author: Rev. Dr. J .N. மனோகரன்



Topics: Daily Devotions bible study Rev. Dr. J .N. மனோகரன்

tamil bible, tamil Bible search,tamil bible online , tamil bible download, tamil bible study, tamil bible free download