ஒளியின் பிள்ளைகள்

வேதாகமத்தில் புரிந்துகொள்ள கடினமான உவமைகளில் ஒன்று புத்திசாலித்தனமான உக்கிராணக்காரரைப் பற்றிய உவமை (லூக்கா 16:1-9)

பார்வையாளர்கள் மற்‍றும் சூழல்:
இது ஒளியின் பிள்ளைகளுக்கு ஒரு பாடமாகும். கர்த்தர் இஸ்ரவேல் புத்திரரை ஜாதிகளுக்கு ஒளியின் புத்திரராகத் தெரிந்துகொண்டார். அப்போஸ்தலர்கள் கர்த்தராகிய இயேசு சொல்வதைக் கேட்போராக இருந்தனர், மேலும் அவர்கள் சபையின் பிரதிநிதிகளாக இருந்தனர்  அதாவது ஒளியின் பிள்ளைகள். எஜமானரின் சார்பாக சட்டப்பூர்வ ஒப்பந்தங்களை நிறைவேற்றும் சட்டப்பூர்வ அதிகாரம் உக்காராணக்காரர்களுக்கு அதாவது எஜமானன் நியமித்த நிர்வாகிக்கு உள்ளது. தன் நல் நடத்தையின் மூலம் தன் எஜமானனின் மரியாதையை கட்டியெழுப்ப முடியும். நிர்வாகியைப் பொறுத்து பணக்கார எஜமான் தீயவனாகவோ அல்லது நன்மை செய்பவனாகவோ கருதப்படலாம்.  எனவே, அவர் சூழ்நிலையை மதிப்பீடு செய்ய அதிகாரியோடு உட்கார விரும்பினார்.  இந்த உவமையில், எஜமானன் தனது நற்பெயர் கெடுக்கப்படுவதாக சில அறிக்கைகளைப் பெறுகிறார்.  எனவே, அவர் நிலைமையை அறிந்துக் கொள்ள விரும்பினார்.

புத்திசாலித்தனமான நிர்வாகியிடமிருந்து பாடம்:
முதல் , சுய பாதுகாப்பு.  அவன் தனது வேலையை இழக்க நேரிடும் என்று பயந்தான், மேலும் குழிகளைத் தோண்டவோ அல்லது கடினமான வேலை செய்யவோ விரும்பவில்லை.  ஆனால் தான் இறக்கும் வரை சுயமரியாதையோடு வாழ விரும்பினான்.  இரண்டாவது , இருண்ட எதிர்காலத்தைப் பற்றி பயந்து, அவன் விரைவில் பரிகாரம் செய்கிறான்.  மூன்றாவது , ஒரு நல்ல மேலாளராக, அவன் ஒரு உண்மையான சோதனை அல்லது ‘சுவொட்’ பகுப்பாய்வு செய்தான்; அதாவது பலங்கள், பலவீனங்கள், வாய்ப்புகள், அச்சுறுத்தல்கள் என்பவற்றை அடிப்படையாகக் கொண்டதே ‘சுவொட்’ (SWOT) பகுப்பாய்வு ஆகும். இப்போது, ​​சிலருக்கு உதவ முடிந்த வாய்ப்பை அவன் உணர்கிறான்.  மேலும், கடன்களை தள்ளுபடி செய்து, ஏழை மக்களின் சுமையை குறைத்தான்.  வேறு வார்த்தைகளில் கூறுவதானால், அவன் அவர்களுக்கு நியாயம் செய்கிறான், இது ஒரு நீதியான செயல்.  நான்காவது, நல்லதைச் செய்ய வளங்களைப் பயன்படுத்தத் தொடங்கினான்.

பாராட்டு:
 அந்த நிர்வாகி வேகமாகவும் சாதுர்யமாகவும் செயல்பட்டான்.  நிர்வாகியின் தன்னிச்சையான செயல்களாலும், அநீதி, சுரண்டல், ஒடுக்குமுறை மற்றும் உணர்வற்ற தன்மை ஆகியவற்றால் எஜமானருக்கு கெட்ட பெயர் கிடைத்ததாலும், எஸ்டேட்  அமைதியற்றதாக இருந்தது. இருப்பினும், நிர்வாகியின் விரைவான நடவடிக்கை மக்களை அமைதிப்படுத்தியது மற்றும் எஜமானரின் நற்பெயர் நியாயமானவர், இரக்கமுள்ளவர் மற்றும் தாராள பிரபு என மேம்பட்டது.  எனவே, நேர்மையற்ற நிர்வாகியின் புத்திசாலித்தனமான செயலை எஜமானன் பாராட்டுகிறார்.

உணர், வருந்து, மீட்டெடு:
 புத்திசாலியான நிர்வாகி, ஆபத்தை உணர்ந்து, மனந்திரும்பி, சேதக் கட்டுப்பாட்டின் மூலம் மீட்டெடுத்தான்.  ஒருமுறை அவன் அநியாயமாகவும், முட்டாள்தனமாகவும், அலட்சியமாகவும், அடக்குமுறையாகவும், பொறுப்பற்றவனாகவும், செல்வத்தால் உந்தப்பட்டவனாகவும், உணர்வற்றவனாகவும் இருந்தான்.  ஆனால் இப்போது, ​​அவன் புத்திசாலியாகவும், விவேகமுள்ளவனாகவும் ஆனான்.

நான் ஒரு புத்திசாலியான, விவேகமுள்ள மற்றும் ஞானமுள்ள ஒளியின் பிள்ளையா?

 Author: Rev. Dr. J .N. மனோகரன்

 



Topics: Daily Devotions bible study Rev. Dr. J .N. மனோகரன்

tamil bible, tamil Bible search,tamil bible online , tamil bible download, tamil bible study, tamil bible free download