டாக்டர். வெய்ன் டயர் என்பவர் ஒரு நல்ல ஊக்கமளிக்கும் பேச்சாளர்; அவர் "நீங்கள் என்ன நினைக்கிறீர்களோ அப்படிதான், நீங்களும் இருப்பீர்கள்" என்று ஒருமுறை கூறினார். மக்கள் தங்கள் கற்பனையில் அல்லது மாயையான எண்ணங்களில் என்ன ஆக விரும்புகிறார்கள் என்று நினைக்கிறார்களோ; பின்பதாக அவர்கள் விரும்பியபடி ஆகிவிடுவார்கள். இருப்பினும், கிறிஸ்தவ மனம் புதுப்பிக்கப்பட்ட மனம் என்று வேதாகமம் கற்பிக்கிறது (ரோமர் 12:2). கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுக்கு எதிரான அனைத்து எண்ணங்களும், வாதங்களும், கருத்துக்களும் சிறைபிடிக்கப்பட்டதாக பவுல் எழுதுகிறார். "அவைகளால் நாங்கள் தர்க்கங்களையும், தேவனை அறிகிற அறிவுக்கு விரோதமாய் எழும்புகிற எல்லா மேட்டிமையையும் நிர்மூலமாக்கி, எந்த எண்ணத்தையும் கிறிஸ்துவுக்குக் கீழ்ப்படியச் சிறைப்படுத்துகிறவர்களாயிருக்கிறோம்" (2 கொரிந்தியர் 10:5). "மனுஷனுடைய வழியெல்லாம் அவன் பார்வைக்குச் செம்மையாகத் தோன்றும்; கர்த்தரோ இருதயங்களை நிறுத்துப்பார்க்கிறார்" (நீதிமொழிகள் 21:2). மாறாக, சீஷர்கள் இரவும் பகலும் கர்த்தருடைய வார்த்தையை தியானிக்க வேண்டும். (சங்கீதம் 1:1-3). பவுல் பிலிப்பியர்களுக்கு எழுதும் போது எண்ணங்களின் எட்டு அம்சங்களைக் கொடுக்கிறார்.
1) உண்மை:
கர்த்தராகிய இயேசுவே சத்தியம் (யோவான் 14:6). சீஷர்கள் சத்தியத்தை வாங்க வேண்டும், அதை விற்கக்கூடாது (நீதிமொழிகள் 23:23). சாத்தான் நம் மனதில் பொய்களை விதைக்க விரும்புகிறான். அவன் ஏவாளுக்கு செய்ததைப் போலவே தேவனைப் பற்றியும், அவருடைய பண்புகள் பற்றியும் மற்றும் அவருடைய வார்த்தையைப் பற்றியும் சந்தேகத்தைத் தூண்டுகிறான் (ஆதியாகமம் 3:1-5). துரதிர்ஷ்டவசமாக, தற்கால சமூகம் சத்தியத்தைப் பற்றி மிகக் குறைவாகவே கருதுகிறது. எனவே தான் இது சத்தியத்திற்கு பிந்தைய சமூகம் என்று அழைக்கப்படுகிறது.
2) மரியாதை:
கௌரவமான அல்லது உன்னதமானவர்கள் உள்ளனர்; அதாவது அவர்கள் தார்மீக ரீதியாகவும், ஆவிக்குரிய ரீதியாகவும் மற்றும் நெறிமுறை ரீதியாகவும் சரியானவர்கள். கோணலான அல்லது கிரிமினல் (குற்றவாளி) மனநிலைக்குப் பதிலாக, எது சரி என்று நாம் சிந்திக்க வேண்டும்.
3) நீதி:
சிந்தனைகள் நீதி, சன்மார்க்கம் பற்றியதாக இருக்க வேண்டும். பழிவாங்குதல், கசப்பு போன்ற அநீதியான எண்ணங்கள் ஆவிக்குரிய ஆரோக்கியத்திற்கு ஆபத்தானவை.
4) அருமை:
மகிழ்ச்சியான, இணக்கமான மற்றும் ஈர்க்கக்கூடிய எண்ணங்கள் அழகான எண்ணங்கள் மற்றும் அருமையான எண்ணங்கள் ஆகும்.
5) தூய்மை:
தீய நோக்கத்துடனும் பாலியல் எண்ணங்களுடனும் பார்க்கும் பார்வை பாவம் ஆகும் (மத்தேயு 5:28). எண்ணங்கள் பரிசுத்தமாகவும், தேவனுக்குப் பிரியமானதாகவும் இருக்க வேண்டும்.
6) பாராட்டு:
பாராட்டுக்களைப் பெற்ற நல்ல எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ளும் போது மற்றவர்களுக்கு முன்நடத்துதலையும், உத்வேகத்தையும் மற்றும் ஊக்கத்தையும் தருகின்றது.
7) சிறந்தது:
சிறந்த எண்ணங்கள், உயர்ந்த எண்ணங்கள், நல்ல எண்ணங்கள் என மேலானதையே நாம் நாட வேண்டும் (கொலோசெயர் 3:1). இத்தகைய எண்ணங்கள் தேவனிலும் அவருடைய வார்த்தையிலும் உள்ள விசுவாசத்தில் வேரூன்றியுள்ளன.
8) துதி:
நல்எண்ணங்கள் தேவனுக்கு துதியைக் கொண்டு வருகின்றன. இந்த எண்ணங்கள், கருத்துக்கள் மற்றும் படைப்புகள் துதிக்கு தகுதியானது என்பதை உலகம் கூட அங்கீகரிக்க வேண்டும்.
என் எண்ணங்கள் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவிடம் சிறைபிடிக்கப்பட்டதா?
Author: Rev. Dr. J. N. Manokaran