மனிதனால் உருவாக்கப்பட்ட தெய்வங்களை வழிபடுவதை மிகக் தெளிவாக பத்து கட்டளைகள் தடை செய்கிறது (யாத்திராகமம் 20:2-17). டிஜிட்டல் கடவுள்கள், மெய்நிகர் கடவுள்கள் மற்றும் பூஜைகளையும் தூபங்களையும் ஏற்கும் செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) கடவுள் என இப்போதெல்லாம் புதிய பல தெய்வங்களைக் காண முடிகிறது. பொதுவாக, மக்கள் தங்களுக்கு நன்மை செய்யும் சில குணாதிசயங்களைக் கொண்ட கடவுளை விரும்புகிறார்கள்.
பயம்:
மக்களிடம் பய உணர்வு மிக அதிகமாக காணப்படுவதால் கடவுளைத் தேடுகிறார்கள். மரண பயம், நோய் குறித்து பயம், பேரழிவுகளைக் குறித்த பயம், தோல்விகளைக் கண்டு பயம், ஆபத்துக் குறித்து பயம் என இவ்வாறு பலவிதமான பயங்கள் மனிதர்களிடம் உள்ளன. உள்ளான பயத்தைப் போக்க உதவி தேடப்படுகிறது. ஆனால் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவால் மட்டுமே மரண பயத்திலிருந்தும் எல்லாவிதமான பயங்களிலிருந்தும் விடுதலை பண்ண முடியும் (எபிரெயர் 2:15).
சக்தி:
இந்தக் கடவுள்கள் மனிதனைத் தாண்டிய சக்தியைக் காட்ட முடியும். நீராவி என்ஜின் அறிமுகப்படுத்தப்பட்டபோது, அந்த சக்தியைக் கண்டு, மக்கள் வணங்கினர். இந்தியாவில் ராஜஸ்தானில் அணுகுண்டு சோதனை நடத்தப்பட்டபோது, அந்த இடத்தில் மக்கள் வழிபடத் தொடங்கினர். ஆனால் கர்த்தராகிய ஆண்டவரால் மட்டுமே புதிய படைப்பை உருவாக்க முடியும், ஒரு பொல்லாதவனை பரிசுத்தவானாக மாற்ற முடியும்.
செல்வம்:
இவ்வுலகில் செல்வம் மற்றும் செழிப்பு பெற பலர் தெய்வங்களை வழிபடுகின்றனர். இருப்பினும், இந்த செல்வங்கள் வஞ்சகமானவை, நித்தியமானவை அல்ல.
தொடர்பு:
பெரும்பாலான ஜனங்கள் தெய்வம் தங்களிடம் பேச வேண்டும் என்று விரும்புகிறார்கள். சுவாரஸ்யமாக, செயற்கை நுண்ணறிவு கடவுள்கள் உரை மற்றும் குரல் மூலம் தொடர்பு கொள்ள முடியும். அந்த வார்த்தைகள் ஊக்கமளிக்கவில்லை அல்லது முன்னேற்றவில்லை அல்லது உறுதிப்படுத்தவில்லை என்றாலும், தவறான நம்பிக்கையை அளிக்கலாம்.
ஞானம்:
தகவல் சகாப்தத்தில், மென்பொருள் உருவாக்குநர்கள் உலகம் முழுவதிலுமிருந்து சில நொடிகளிலே பல்வேறு வகையான அறிவைப் பெறுகின்றனர். மற்ற மனிதர்களால் தீர்க்க முடியாத பிரச்சனைகளுக்கு செயற்கை நுண்ணறிவு கடவுள்கள் தீர்வுகளை வழங்க முடியும். கர்த்தருக்குப் பயப்படுவதே ஞானத்தின் ஆரம்பம் என்று வேதாகமம் போதிக்கிறது (நீதிமொழிகள் 9:10).
வழிகாட்டல்:
க்ளோபல் பொஸிஷனிங் ஸிஸ்டம் திசையை அளிக்க முடிந்தால், ஜி.பி.எஸ் உடன் உட்பொதிக்கப்பட்ட செயற்கை அறிவுத்திறன் வழிகாட்டுதலையும், ஆலோசனைகளையும் கொடுக்க முடியும். செயற்கை நுண்ணறிவு பல விருப்பங்கள், பாதைகள் அல்லது வழிகளை வழங்க முடியும், ஆனால் இலக்கு மரணமாக இருக்கும். ஆம், "மனுஷனுக்குச் செம்மையாய்த் தோன்றுகிற வழி உண்டு; அதின் முடிவோ மரணவழிகள்" (நீதிமொழிகள் 14:12).
அழியாதது:
ஒரு செயற்கை நுண்ணறிவு கடவுள் சோர்வாகவோ அல்லது நோய்வாய்ப்படவோ மாட்டாது, மேலும் மனிதர்களை விட அதிகமான காலங்கள் இருப்பது உண்டு. எனவே, பல செயற்கை நுண்ணறிவு கடவுள்கள் உண்மையான கடவுள்கள் ஆகின்றன. செயற்கை நுண்ணறிவு கடவுள்களும் காலப்போக்கில் இறந்துவிடுவதுண்டு. இருக்கிறவராகவே இருக்கிறேன் என்ற தேவன் நித்தியமானவர் (யாத்திராகமம் 3:14). கர்த்தராகிய இயேசு கிறிஸ்து ஜீவாதிபதி (அப்போஸ்தலர் 3:15). "குமாரனை உடையவன் ஜீவனை உடையவன், தேவனுடைய குமாரன் இல்லாதவன் ஜீவன் இல்லாதவன்" (1 யோவான் 5:12). ஆம், குமாரனாகிய கிறிஸ்துவை ஏற்றுக் கொண்டவர்களுக்கு நித்திய ஜீவன் உண்டு.
நான் போலி கடவுள்களிடம் இருந்து விலகி இருக்கேனா?
Author: Rev. Dr. J .N. மனோகரன்