ஜெரால்டின் ஹாரிஸ் மற்றும் கிறிஸ்டன் மடோக்ஸ் ஒரு உவமை எழுதினார்கள். சாத்தான் தனது பேய் கூட்டத்தை எல்லாம் அழைத்து, ஒரு கிறிஸ்தவனை எவ்வாறு வீணானவனாகவும், பயனற்றவனாகவும் ஆக்குவது என்று விவாதித்தது. அந்த மூளைச்சலவை அமர்வு பல யோசனைகளைக் கொண்டிருந்தது. அவற்றில் ஒன்று; கிறிஸ்தவர்களை தேவையில்லாத விஷயங்களில் மும்முரமாக்குங்கள் (Busy). அவர்களை செலவழிக்கவும், செலவழிக்கவும், செலவழிக்கவும், பிறகு கடன் வாங்கவும், கடன் வாங்கவும், கடன் வாங்கவும் செய்யுங்கள். அவர்களின் வாழ்க்கை முறையைப் பராமரிக்க அவர்களை ஒரு நாளைக்கு 12 மணிநேரம் வேலை செய்யச் செய்யுங்கள். சமூக ஊடகங்கள், டிவி மற்றும் பிறவற்றில் அவர்களை மூழ்கடிக்கச் செய்யுங்கள். இதனால் அவர்களுக்கு குடும்பம், ஜெபம், வேதாகம வாசிப்பு என நேரம் இருக்காது என்றது.
பரபரப்பு மற்றும் வருத்தம்:
மார்த்தாளும் மரியாளும் கர்த்தருக்கும் அவருடைய சீஷர்களுக்கும் மிகுந்த விருந்தோம்பலைக் காட்டுவதில் மகிழ்ச்சியடைந்தனர். மரியாள் ஆண்டவரின் காலடியில் அமர்ந்து அவருடைய போதனைகளைக் கேட்டாள். மார்த்தாள் பல விஷயங்களைக் குறித்து பரபரப்பாகவும் (அலுவலாகவும்) வருத்தமாகவும் இருந்தாள். உண்மையில், தேவனின் குரலைக் கேட்கும் ஒரு உன்னதமான தெரிவு செய்யாததற்காக கர்த்தராகிய ஆண்டவர் அவளைக் கடிந்துகொண்டார் (லூக்கா 10:42). இன்று அநேகர் மிகவும் வீண் அலுவலாக இருப்பதால், அவர்கள் கர்த்தருடனான அமைதியான நேரத்தைக் கொண்டிருக்கவில்லை.
அங்கும் இங்கும் பரபரப்பு:
ஒரு உவமையில், தேவன் தீர்ப்பளித்த பெனாதாத்தைக் கொல்லும் கடமை தவறியதை தீர்க்கதரிசி ஆகாப் இராஜாவுடன் பகிர்ந்து கொள்கிறார். காவலாளி அங்கும் இங்கும் வேலையாக இருந்ததால், கைதி தப்பியோடினார் (1 இராஜாக்கள் 20:40). மரண தண்டனைக்குள்ளான கைதி பெனாதாத் தப்பிக்க அனுமதித்ததற்காக அதன் அதிகாரியான ஆகாப்பிற்கு தண்டனை கிடைத்தது.
பயனற்ற முயற்சிகள்:
சிலர் பயனற்ற அல்லது அற்பமான அல்லது பிரயோஜனமற்ற செயல்களில் பிஸியாக இருக்கிறார்கள் (நீதிமொழிகள் 12:11). பலர் தற்காலிக விஷயங்களில் மும்முரமாக உள்ளனர், இது இந்த வாழ்க்கையிலும் அல்லது மரணத்திற்குப் பின் வாழ்க்கையிலும் பயனளிக்காது. இந்த பிஸியான விஷயங்கள் ஆவிக்குரிய ரீதியில் மேம்படுத்துவதில்லை, மாறாக, நேரம் இழக்கப்படுகிறது. எதிலெல்லாம் என்றால் தேவையற்ற வாக்குவாதங்கள், வதந்திகள், அதிகப்படியான கேம்கள், பயனற்ற ரீல்களைப் பார்ப்பது அல்லது மொபைல் ஃபோன்களை இலக்கற்ற ஸ்க்ரோலிங் போன்றவையாக இருக்கலாம்.
சோதனை:
சிலர் சோம்பேறியாக இல்லாமல் பிஸியாக இருக்க விரும்புகிறார்கள். எனவே, அவர்கள் தங்களை பிஸியாகவும், புத்திசாலியாகவும், முக்கியமான விஷயங்களைச் செய்வதாகவும், உன்னதமான செயல்களில் ஈடுபடுவதாகவும் காட்ட விரும்புகிறார்கள். சமூக ஊடகங்களில் பயன்படுத்தப்படும் ஸ்மைலிகளை இடுவது, கருத்துகளை வழங்குவது மற்றும் பிஸியாக இருப்பதைக் காட்டும் ஸ்டேட்ஸ், ஆனால் உண்மையில் அவர்கள் வீண் அலுவலில் பரபரப்பாக இருக்கிறார்கள் (2 தெசலோனிக்கேயர் 3:11-12).
இளைப்பாறும் அனுபவம்:
உண்மையான ஆவிக்குரிய வாழ்வு என்பது தேவனுடைய வாக்குத்தத்ததில் தங்கியிருப்பதும், தேவ சித்தத்தைச் செய்வதும், அவர் அளிக்கும் சமாதானத்தை அனுபவிப்பதும் ஆகும்.
கர்த்தருக்காக நான் மும்முரமாக இருக்க அவரில் இளைப்பாறுகிறேனா?
Author: Rev. Dr. J .N. மனோகரன்