போர் நடந்து கொண்டிருந்ததால், ஒரு போர்க் கைதியை (POW) காவலில் வைத்திருக்கும் பணி ஒரு சிப்பாய்க்கு வழங்கப்பட்டது. அப்படி காவலில் இருக்கும்போது போர்க் கைதி தப்பித்து விட்டதால், தளபதி சிப்பாயை வரவழைத்து விசாரணை நடத்தினார். அதற்கு சிப்பாய்; "அங்கும் இங்கும் வேலையாக இருந்ததால், அவன் தப்பித்து விட்டான்" என்றார். அப்படி பொறுப்பற்று இருந்த ராணுவ வீரனுக்கு மரண தண்டனை விதித்தார் தளபதி. "உன் பிராணன் தப்பித்த போர்க்கைதிக்கு ஈடானது" என்பதாகவும் கூறினார் (I இராஜாக்கள் 20: 38-43).
அங்கும் இங்கும் பரபரப்பாக (busy) இருப்பது எந்த நோக்கத்திற்கும் உதவாது; வாய்ப்புகளும் நேரமும் தான் வீணாகி விடும். நல்ல விஷயங்களுக்காக, அவசரமாக செய்து முடிக்க வேண்டிய காரியங்களுக்காக, தார்மீக ரீதியாக மற்றும் சட்ட ரீதியாக சரியான விஷயங்களில் வேலையாக பரபரப்பாக இருப்பவர்கள் இருக்கிறார்கள். பொதுவாக, நமக்களிக்கப்பட்ட தரிசனங்கள், இலக்குகள் மற்றும் முதன்மை பணிகள் என கவனத்தைச் செலுத்தக் கற்றுக் கொள்ளும் போது பெரிய காரியங்களைச் செய்து சாதிக்க உதவும்.
1) உடைமைகள்:
ஜீவனைப் பற்றியோ நித்தியக் கண்ணோட்டமோ இல்லாத ஏசா தன் சேஷ்ட புத்திர பாகத்தை ஒரு வேளை உணவுக்காக பரிமாற்றிக் கொண்டான். ஒரு வேளை உணவில் மும்முரமாக இருந்த அவனுக்கு உரிமைகள், ஆசீர்வாதம் மற்றும் மரபுரிமை என அனைத்தும் போய்விட்டன (ஆதியாகமம் 25:29-34).
2) தெள்ளுப்பூச்சியின் மேல் கவனம்:
சவுல் ராஜா தனது தேசத்துக்காக எதிரிகளை எதிர்த்து போராடுவதை விட்டு, எந்த காரணமும் அல்லது நோக்கமும் இல்லாமல் மேய்ப்பனாகிய தாவீதைப் பின்தொடர்ந்தான் (I சாமுவேல் 26:20).
3) தவறான முன்னுரிமை:
சாலெமோன் ராஜா தேவனுடைய ஆலயம் உட்பட கட்டிடங்களை கட்டுவதில் மும்முரமாக இருந்தானே தவிர, விசுவாச நாயகர்களின் பட்டியலில் தனது பெயர் இடம் பெற வேண்டும் என்பதை அறியத் தவறிவிட்டான்.
4) நம்பிக்கையற்ற கருத்தோட்டம்:
யோசேப்பின் சகோதரர்கள் அவனுடைய கனவுகளில் மகிழ்ச்சியடையவில்லை. கனவு காண்பவனைக் கொன்று கனவையும் கொல்ல நினைத்தார்கள். இதில் வருத்தம் என்னவெனில், தாங்கள் எதிர்ப்பது கனவைக் கொடுக்கும் தேவனுக்கு எதிராக என்பது அவர்களுக்கு புரியவில்லை.
5) வேசித்தனப் போக்கு:
சிமியோன் தேவனுக்காக நசரேயனாக தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தான். தன் பிரதிஷ்டையையும் நோக்கத்தையும் மறந்து பல பெண்களுடன் தொடர்பு கொண்டான். தேவ ஆவி அவனை விட்டு வெளியேறியது கூட தெரியாமல், அவன் மயக்கத்தில் இருந்தான், பின்னர் வரலாற்றில் தற்கொலைக் கொலையாளி என்பதான அடையாளத்தை அடைந்தான் (நியாயாதிபதிகள் 16:20)
6) தற்செருக்கு:
அப்சலோம் தன்னை தானே முற்றிலுமாக நேசித்தான். "அப்சலோம் உயிரோடே இருக்கையில் என் பேரை நினைக்கப்பண்ணும்படியாக எனக்குக் குமாரன் இல்லை என்று சொல்லி, ராஜாவின் பள்ளத்தாக்கிலே தனக்கென்று ஒரு தூணை நிறுத்தி அந்தத் தூணுக்குத் தன் பேரைத் தரித்திருந்தான்; அது இந்நாள்வரைக்கும் அப்சலோமின் அடையாளம் என்று சொல்லப்படும்" (2 சாமுவேல் 18:18).
7) உருவ வழிபாடு:
ஆகாஸ் ராஜா சிரீயா ராஜாவை தோற்கடிக்க அசீரியா ராஜாவிடம் உதவி கோரினான். அவன் தமஸ்கு சென்றபோது, அங்கு கண்ட பலிபீட வழிபாடுகளை அதாவது பொய்க் கடவுள்களின் விசித்திரமான வழிபாட்டை எருசலேமிற்கு கொண்டு வந்தான் (2 இராஜாக்கள் 16:10).
நம் கவனம் அங்கும் இங்கும் சிதறி கிடக்கின்றதா அல்லது ஒரே நோக்கத்துடன் காணப்படுகிறதா?
Author : Rev. Dr. J. N. Manokaran