வணிக தீர்க்கதரிசிகள்

தன்னைத் தானே தீர்க்கதரிசி என்று அறிவித்துக் கொண்ட ஒருவர் இந்தியாவில் உள்ள ஒரு நகரத்திற்கு வருகை தருகிறார்.  அவர் கிறிஸ்தவ சமூகத்தை குணப்படுத்துதல், தீர்க்கதரிசன வார்த்தைகள் மற்றும் அற்புதங்களைப் பெற அழைப்பு விடுக்கிறார்.  அதற்காக ஒவ்வொரு நபருக்கும் கட்டணம் ரூ. 12000 (இந்திய ரூபாய் பன்னிரண்டாயிரம் மட்டும்) என வசூலிக்கப்படுகிறது.  ஹோட்டல் நடன அரங்கில் வைத்து பிரம்மாண்ட திறப்பு விழா நடந்தது.  சில சமூகவிரோதிகள் அங்கு வந்து மதமாற்ற மோசடி நடப்பதாக கூறி சரமாரியாக தாக்கினர்.  அந்த தீர்க்கதரிசியோ பங்கேற்பாளர்களிடம் வாங்கிய பணத்தைக் கொடுக்காமல் வேறு வாசல் வழியாக தப்பி ஓடிவிட்டார்.

ஆதாயத்தை எதிர் நோக்கும் தீர்க்கதரிசிகள்:
கள்ள போதகர்கள் மற்றும் கள்ளத் தீர்க்கதரிசிகளைப் பற்றி பவுல் எச்சரித்தார்.  பணத்தைப் பற்றிய அவர்களின் அணுகுமுறையை வைத்து அவர்களை அறிய முடியும் (1 தீமோத்தேயு 6:1). கிறிஸ்துவின் சரீரமானவர்களுக்கு தேவன் ஆவிக்குரிய வரங்களை அளிக்கிறார்.  அந்த கிருபையான வரங்களைப் பெற்ற நபர்கள், சபையை வளர்க்க, விசுவாசிகளைக் கட்டியெழுப்ப என தேவ மகிமைக்காக அவற்றைப் பயன்படுத்த வேண்டும்.  கள்ளத் தீர்க்கதரிசிகள் தங்கள் சுயநலத்திற்காக அவைகளைப் பயன்படுத்துகிறார்கள், தேவ ராஜ்யத்தை அல்ல, தங்கள் தனிப்பட்ட சாம்ராஜ்யத்தை உருவாக்குகிறார்கள்.  மேலும், ஆவிக்குரிய மிரட்டலில் வேறு ஈடுபடுகிறார்கள்.

முட்டாள் ஆடு:
வேதாகமத்தை நன்கு புரிந்து கொண்ட பெரோயாப் பட்டணத்தாரைப்  போலல்லாமல், பெரும்பாலான கிறிஸ்தவர்கள் வேதாகம அறிவில்லாதவர்கள்.  பெரோயா ஜனங்கள் பவுலின் போதனைகளை வேதப்பூர்வ கண்ணோட்டத்தில் மதிப்பிடவும் ஆராயவும் முடிந்தது.  ஆர்வத்துடனும் உற்சாகத்துடனும், அவர்கள் வார்த்தையைப் பெற்றனர், அநுதினமும் வேதத்தைப் படிக்கும் மற்றும் தியானிக்கும் பழக்கத்தைக் கொண்டிருந்தனர், மேலும் சரியானதைக் கண்டறிய விவிலிய உலகக் கண்ணோட்டத்தையும் கொண்டிருந்தனர் (அப்போஸ்தலர் 17:1). ஆனால் கள்ளத் தீர்க்கதரிசிகளின் பின்னால் ஓடுபவர்கள் நல்ல மேய்ப்பனைப் பின்பற்றாத முட்டாள் ஆடுகள் என்றே சொல்ல வேண்டும்.

அடியாட்கள் மற்றும் மெய்க்காப்பாளர்கள்:
துரதிர்ஷ்டவசமாக, அரசியல்வாதிகளைப் போலவே, கிறிஸ்தவத் தலைவர்கள் என்று அழைக்கப்படுபவர்களும் அவர்களைப் பாதுகாக்க உடற்கட்டமைப்பாளர்களுடன் சுற்றி வருகிறார்கள்.  இது ஒன்று கூட்டத்தைக் கவர்வதற்காக அல்லது நம்பிக்கையின்மையை வெளிப்படுத்துவதாகும்.  இந்த வேலையாட்களுக்கு யார் பணம் கொடுப்பது?  ஏழை பரிசுத்தவான்கள் தியாகத்தோடு கொடுக்கும் பணம் இந்த களியாட்டங்களுக்கு பயன்படுத்தப்படுகிறது.  ராஜாவின் தயவைப் பெற்ற மாபெரும் வேதபாரகனான எஸ்ரா, பண்டைய உலகின் ஆபத்தான சாலைகளில் பயணிக்க பாதுகாப்பு கேட்க வெட்கப்பட்டார். "வழியிலே சத்துருவை விலக்கி, எங்களுக்குத் துணைசெய்யும்படிக்கு, நான் ராஜாவினிடத்தில் சேவகரையும் குதிரைவீரரையும் கேட்க வெட்கப்பட்டிருந்தேன்; எங்கள் தேவனுடைய கரம் தம்மைத் தேடுகிறவர்கள் எல்லார் மேலும் அவர்களுக்கு நன்மையாக இருக்கிறதென்றும், அவருடைய வல்லமையும் அவருடைய கோபமும் அவரை விட்டு விலகுகிறவர்கள் எல்லார்மேலும் இருக்கிறதென்றும், நாங்கள் ராஜாவுக்குச் சொல்லியிருந்தோம்" (எஸ்றா 8:22).  

கோழைகள்:
தீர்க்கதரிசி கூட்டியிருந்த இடத்தில் மதமாற்ற வேலையோ என நினைத்து அந்த இடையூறு செய்பவர்கள் வந்தபோது, ​​தீர்க்கதரிசி தனது பாதுகாப்புக் குழுவுடன் ஓடிவிட்டார்.  உண்மையில் "நல்ல மேய்ப்பன் ஆடுகளுக்காகத் தன் ஜீவனைக் கொடுக்கிறான்" (யோவான் 10:11). கள்ளத் தீர்க்கதரிசிகள் சுயநலவாதிகள் மற்றும் ஆதரவற்ற ஆடுகளை விட்டுவிட்டு தாங்கள் பாதுகாப்பான இடத்திற்கு ஓடிவிடுகிறார்கள்.

உண்மையான போதகர்களை நான் பகுத்தறிந்து, அவர்களிடமிருந்து கற்றுக்கொள்கிறேனா?

Author: Rev. Dr. J .N. மனோகரன்



Topics: Daily Devotions bible study Rev. Dr. J .N. மனோகரன்

tamil bible, tamil Bible search,tamil bible online , tamil bible download, tamil bible study, tamil bible free download