சீனாவில் உள்ள ஒரு ஷாப்பிங் மாலில், ஒரு பெண் அந்த கடையில் ஒவ்வொரு அறையையும் பார்த்துக் கொண்டே கடக்கும் பூமி பிளந்து அவளை விழுங்கியது (NDTV 31 மார்ச் 2024). வேதாகமத்திலும் இதே போன்ற ஒரு சம்பவத்தை நாம் வாசிக்கிறோம். பூமி தன் வாயைத் திறந்து மனிதர்களை விழுங்கியது (எண்ணாகமம் 16:32). ஏன் இப்படி இயற்கைக்கு மாறான விஷயங்கள் நடக்கின்றன? சிலோவாமிலே கோபுரம் இடிந்து விழுந்து பதினெட்டு பேர் இறந்தனர். காரணத்தை அறிய மக்கள் ஆர்வமாக இருந்தபோது, கர்த்தராகிய ஆண்டவர் மனந்திரும்ப வேண்டும் என்று போதித்தார் (லூக்கா 13:1-5).
விபத்துகள்:
பூரணமற்ற உலகில், விபத்துகள் நடக்கின்றன. இது நீதிமான்களையும் பொல்லாதவர்களையும், சாதாரண மக்களையும் பாதிக்கலாம். பரிசுத்தமானவர்களும் நீதிமான்களும் கூட விதிவிலக்கல்ல. இத்தகைய திடீர் நிகழ்வுகள் மரணத்தில் கூட முடியும்.
பெரிய மற்றும் சிறிய பாவிகள்:
சிலர் மோசமான பாவிகள் என்றும், சிலர் சாந்தமான பாவிகள் என்றும், பெரும்பான்மையானவர்கள் பாவிகள் இல்லை என்றும் மக்கள் எண்ணுகிறார்கள். எனவே, விபத்துகள் மற்றும் இறப்புகள் சாதாரண அல்லது நல்ல மனிதர்களுக்கு நிகழும்போது, இது போன்ற சம்பவங்கள் தீயவர்களை மாத்திரமே தண்டிக்க வேண்டும் என்று அவர்கள் குழப்பமடைகிறார்கள். இருப்பினும், எல்லாரும் பாவம் செய்து தேவ மகிமைக்குக் குறைவுபட்டதாக வேதாகமம் அறிவிக்கிறது (ரோமர் 3:23).
நெருங்கும் மரணம்:
பிறக்கும் மனிதர்கள் அனைவரும் இறப்பார்கள். மரணம் எந்த நேரத்திலும், எந்த வகையிலும், எங்கும் வரலாம். எனவே, மனிதர்கள் மரணத்தை எதிர்கொள்ள எப்போதும் தயாராக இருக்க வேண்டும். நன்றாக வாழ்வது என்பது மரணத்திற்கு எப்போதும் தயாராக இருப்பதுமாகும்.
சிந்தித்து மனந்திரும்பு:
இதுபோன்ற விபத்துகள், பேரழிவுகள் மற்றும் நஷ்டங்கள் நிகழும்போது, உயிரோடு இருப்பவர்கள் தங்களைத் தாங்களே சுய மதிப்பீடு செய்வது அவசியம். அவர்கள் தங்கள் பாவத்தை உணர்ந்து வருந்துவதற்கு இது ஒரு எச்சரிக்கை. காரணங்களை ஊகிப்பதோ, குற்றுயிர் கொலையுராக்குவதோ, புதிய கோட்பாடுகளை உருவாக்குவதோ என எதையும் செய்யாமல் மற்றும் யோசிக்காமல், உடனடியாக ஜனங்கள் மனந்திரும்ப வேண்டும்.
தண்டனையும் தீர்ப்பும்:
சில பேரழிவுகள், விபத்துக்கள் மற்றும் நஷ்டங்கள் தேவனின் நேரடி தண்டனை. நீதியுள்ள தேவன் தாம் விரும்பியபடி நியாயத்தீர்ப்பை நிறைவேற்றுகிறார். ஆம், “ஜீவனுள்ள தேவனுடைய கைகளில் விழுகிறது பயங்கரமாயிருக்குமே” (எபிரெயர் 10:31).
அழிதல்:
மனந்திரும்பாமல், மன்னிப்பைத் தேடி, பரிசுத்தமான வாழ்க்கை வாழத் தீர்மானிக்காதவர்கள், தேவ தீர்ப்பின் கீழ் வந்து அழிந்து போவார்கள். கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் தியாக மரணம், அடக்கம் மற்றும் உயிர்த்தெழுதல் மூலம் மட்டுமே மன்னிப்பு என்று வேதாகமம் தெள்ளத் தெளிவாக அறிவிக்கிறது.
விசித்திரமான விஷயங்கள் நடக்கும்போது நான் சிந்தித்து மற்றும் தற்பரிசோதனை செய்து மனந்திரும்புகிறேனா?
Author: Rev. Dr. J .N. மனோகரன்