நுண்ணறி பேசி (smartphone) சகாப்தத்தில், சாத்தானும் ஸ்மார்ட்டான (கெட்டிக்காரத்தனமான) சோதனைகளைக் கொடுக்கிறான். கையில் ஒரு ஸ்மார்ட்போன் இருந்து விட்டால் போதும் உலகமே கையில் இருப்பது போலான ஒரு ஒய்யாரமான உணர்வை அளிக்கிறது. இதில் விசித்திரம் என்னவெனில், பெரும்பாலானவர்களுக்கு அவர்களின் வாழ்க்கை மீதோ அல்லது எண்ணங்கள், வார்த்தைகள், செயல்கள் என எதன் மீதும் பிடிப்பு இல்லை அல்லது உஷாராக இல்லை. உலகத்தையே அல்லது பட்டணம் முழுமையையும் கைக்குள் கொண்டு வருபவனைக்காட்டிலும் சுய கட்டுப்பாடும், பொறுமையும் மற்றும் சாந்தமாய் இருப்பவர்களுமே நல்ல கெட்டிக்கார நபர்கள். ஆம், "பலவானைப்பார்க்கிலும் நீடிய சாந்தமுள்ளவன் உத்தமன்; பட்டணத்தைப் பிடிக்கிறவனைப்பார்க்கிலும் தன் மனதை அடக்குகிறவன் உத்தமன்" (நீதிமொழிகள் 16:32).
1) நீங்கள் பசியுடன் இருக்கிறீர்களா?:
நாற்பது நாட்கள் உபவாசமாயிருந்த ஆண்டவரிடம் சாத்தான் பசியோடு இருக்கிறீரா என்று கேட்டான். கற்களை அப்பங்களாக மாற்றும் அதிசயத்தைச் செய்ய அவரைத் தூண்டினான். இன்று ஸ்மார்ட்போன் செயலிகளான ஸ்விக்கி அல்லது யூபர் ஈட் போன்றவைகள் பசியை அல்லது சாப்பிட தூண்டும் வகையில் செய்திகளை அனுப்புகின்றன. அச்செய்தி என்னவென்றால்; "கொண்டாட எதுவும் இல்லையெனில் ஸ்விக்கியுடன் கொண்டாடுங்கள்". இது ஸ்மார்ட்போனால் தூண்டப்பட்ட பசி. ஆண்டவராகிய இயேசு சாத்தானை எதிர்த்தார், அதாவது "மனுஷன் அப்பத்தினாலேமாத்திரமல்ல, தேவனுடைய வாயிலிருந்து புறப்படுகிற ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான்" என்றார் (மத்தேயு 4:4).
2) உலகளாவிய பார்வையாளர்களுக்கு காட்டு:
தேவாலயத்து உப்பரிகையின் மேல் அவரை நிறுத்தி அதன் உச்சியிலிருந்து குதித்தால் எருசலேமில் உள்ள அனைத்து மக்களிடமும் உடனடியாக பரபரப்பாகவும் பிரபலமாகவும் மாறும் என சாத்தான் ஆண்டவரிடம் கூறினான். அது மட்டுமல்ல, அப்படி குதிக்கும்போது மக்கள் கைதட்டுவார்கள் மற்றும் தேவதூதர்கள் கைகளில் ஏந்துவார்கள் அதனால் உங்களுக்கு காயம் எதுவும் ஏற்படாது என சாத்தான் கூறினான். இன்ஸ்டாகிராம், முகநூல் போன்ற செயலிகளும் இப்படிதான் உங்களை தூண்டி உலகத்தின் பார்வையாளர்களுக்கு முன்பதாக உங்களைக் காட்ட அழைக்கிறது.
3) உலக மகிமை:
சாத்தான் அடுத்ததாக ஒரு உயர்ந்த மலையின் மேல் கொண்டு போய் ஆண்டவராகிய இயேசுவை நிறுத்தி அனைத்து ராஜ்யங்களின் மகிமையையும் காட்டினான். அதைப் பெற வேண்டுமென்றால் ஆண்டவர் சாத்தானின் முன் பணிந்து கொள்ள வேண்டும் என்று ஆசைப்பட்டான். இன்றும் உலகத்திலுள்ள உடைமைகளெல்லாம் ஃப்ளிப்கார்ட் அல்லது அமேசான் போன்ற செயலிகள் மூலம் மகிமையாக காட்டப்படுகிறது. நமக்கு தேவையில்லாத அல்லது நம் வாழ்வில் தேவையில்லாததை விரும்புவதே சபலம் (தூண்டல்) எனப்படுகிறது. ஸ்மார்ட்போன் பயன்பாடுகள் இதர சில விஷயங்களையும் கூட வழங்குகின்றன, நீங்கள் சொந்தமாக வைத்திருக்க தேவையில்லை, ஆனால் அதன்மீது ஈடுபாடு இல்லாமல் அனுபவிக்கவும். உங்கள் பயணத்தை அனுபவிக்க ஓலா அல்லது ஊபர் செயலி மூலம் பல வகையான ஆடம்பர கார்களை கூட நீங்கள் தேர்வு செய்யலாம்.
நாம் கவனமாக இருக்க வேண்டும் மற்றும் சுயக்கட்டுபாட்டுடன் இருக்க வேண்டும். சாத்தான் நம்மை விஞ்சக்கூடாது, ஏனென்றால் அவனுடைய உத்திகள் அல்லது சாதனங்கள் அல்லது கருவிகள் பற்றி நாம் அறியாதவர்கள் அல்ல. நாமும் நுண்ணறி பேசி (smartphone) மற்றும் சாத்தானை விட புத்திசாலிகளாக இருப்போம்.
நான் சாத்தானை விஞ்சி வெற்றிபெற முடியுமா?
Author : Rev. Dr. J. N. Manokaran