உன் தேவனாகிய கர்த்தர் உன் மேல் அன்பு கூர்ந்த படியினால், உன் தேவனாகிய கர்த்தர் அந்தச் சாபத்தை உனக்கு ஆசீர்வாதமாக மாறப்பண்ணினார்..உபாகமம் 23:5
சாபம் என்ற வார்த்தையை யாரும் விரும்பாத வார்த்தை..செய்கிற பாவச்செயல் மூலம் வருகிற பிரதிபலன் சாபம்..சாபம் என்பது சில காரியங்கள் தொடர்ச்சியாக குடும்பத்தில் நடக்கும்..
சாபம் ஆசீர்வாதத்தையோ, சமாதானத்தையோ, சந்தோஷத்தையோ கொண்டு வராது.. சாபம் சில நேரங்களில் பெற்றோர் வாழ்க்கையில் நடந்த துக்கமான விஷயம் பிள்ளைகளுடைய வாழ்க்கையிலும் நடக்கும்..யாருடைய சாபத்திற்கும் ஆளாகாதீருங்க.உங்க சந்ததிக்கு ஆசீர்வாதத்தை சேர்க்கிறீர்களோ இல்லையோ சாபத்தை மாத்திரம் சேர்த்து வைத்திடாதீங்க.. உங்க செயலில் கவனமாக இருங்க..
மூன்றாம் நான்காம் தலைமுறையாக இருக்கிற சாபத்தை ஆண்டவர் மாற்றுவார்..ஆண்டவர் உங்க மேல் அன்பாக இருப்பதால் உங்க சாபத்தை மாற்றுவார்.. நிச்சயமாக ஆசீர்வாதம் உண்டாகும்.. சாபம் மாறும்..நீங்க அநேகருக்கு ஆசீர்வாதத்தின் பாத்திரமாக இருப்பீங்க...ஆண்டவரை பிடித்து கொள்ளுங்கள்..!!!
ஜெபம்:
ஆண்டவரே, நீங்க என் சாபத்தை மாற்றும்..சாபத்தினால் இழந்த எல்லாவற்றையும் மறுபடியும் பெற்றுக்கொள்ள இரக்கம் செய்யும்..என் துணிகரத்தினால் என் வாழ்வில் வந்த சாபத்தை மாற்றும் ஆண்டவரே.நீர் என் மேல் அன்பு வைத்து என் வாழ்க்கையில் இருக்கிற சாபத்தை மாற்றி என்னை ஆசீர்வதியும்.. நன்றி இயேசுவே..ஆமென்..!!!
Pr.Mrs.Kirubai Anthony