கடைசி நாட்களில் விழிப்புடன் இருங்கள்

கர்த்தருடைய வருகை ஒரு கண்ணியைப் போல அல்லது திடீரென பொறியில் சிக்குவது போல அல்லது ஆச்சரியம் ஏற்படுத்துவதாக இருக்கும்.  இரவில் எதிர்பாராத நேரத்தில் வரும் திருடனைப் போல தேவன் வருவார்.  விழிப்புடனும், ஜாக்கிரதையுடனும், எதிர்பார்ப்புடனும் இருப்பவர்கள் பாக்கியவான்கள் (வெளிப்படுத்துதல் 16:15). கர்த்தருடைய எச்சரிப்புகளுக்கு செவிசாய்ப்பது இன்றியமையாதது, ஆகையால் வரப் போகும் உபத்திரவங்களில் சிக்காமல்  மனுஷகுமாரனுக்கு முன்பாக நிற்கப்பாத்திரவான்களாக எண்ணப்படுவதற்கு, எப்பொழுதும் ஜெபம்பண்ணி விழித்திருக்க வேண்டியது மிக மிக அவசியம் (லூக்கா 21:36).  

ஒழுக்க கேடான வாழ்க்கை:
சிற்றின்பங்களில் அதிக ஈடுபாடு காட்டுவதற்கு எதிராக தேவன் எச்சரித்தார்.  நித்திய கண்ணோட்டம் இல்லாமல், கண்களின் ஆசை, மாம்சத்தின் இச்சை மற்றும் ஜீவனத்தின் பெருமை ஆகியவற்றில் ஈடுபடுவது எளிது (1 யோவான் 2:16). உலகத்தின் இந்தக் கொள்கைகளில் அதிகமாக ஈடுபடுவது பேரழிவிற்கும் மரணத்திற்கும் தான் வழிவகுக்கும்.

 குடிப்பழக்கம்:
 அதிக ஆல்கஹால் கொண்ட ஒயின் உடல் ஆரோக்கியத்திற்கு ஆபத்தானது.  நமது சரீரம் பரிசுத்த ஆவியின் ஆலயம், எனவே நன்றாகக் கவனித்துக் கொள்ள வேண்டும் (1 கொரிந்தியர் 6:19-20). சிலர் தங்கள் உணர்வுடனான பிரச்சினைகளில் இருந்து மீளவும், ஏற்படும் மன அழுத்தத்தினாலும், உடல் வலியையும் சமாளிக்க குடிக்கிறார்கள்.  வேதாகம புரிதல், நம்பிக்கையை மேம்படுத்துதல் மற்றும் எளிய மருந்துகள் என இவற்றைக் கடக்க முடியும்.  இத்தகைய வழக்கமான தேவையற்ற குடிப்பழக்கம் மது சார்புக்கு வழிவகுக்கும்.  குடிபோதையில் இருப்பவர்கள் பெருந்தீனிகளாக மாறுகிறார்கள், இது அவர்களை வறுமைக்கு நேராக அழைத்துச் செல்லும் (நீதிமொழிகள் 23:20-21). குடிகாரர்கள் முட்டாள்தனமான முடிவுகளை எடுக்கிறார்கள், அது அவர்களை பாவத்தில் விழ வைக்கிறது.

மயக்க நிலை:
குடிகாரர்களுக்கு ஒருவித மயக்கம் வரலாம்.  அவர்கள் ஆவிக்குரிய ரீதியில் விழித்திருக்கவில்லை, எனவே பாவத்தில் சிக்கியுள்ளனர்.  மனதளவில் விழித்திருக்கவில்லை, அவர்களின் மனம் புதுப்பிக்கப்படுவதில்லை, எனவே உலகின் வடிவங்கள் அல்லது போக்குகளை அவர்களின் மனம் பின்பற்றுகிறது (ரோமர் 12:1-2). சிம்சோன் தூக்கத்தில் ஆழ்ந்து, தெலீலாவின் மடியில் உறங்கினான், அது அவனது அவமானகரமான தோல்விக்கு வழிவகுத்தது மட்டுமல்லாமல், பின்னர் அவனது மரணமும் நிகழ்ந்தது (நியாயாதிபதிகள் 16:19).

கவனச்சிதறல்கள்:
இந்த வாழ்க்கையில் உலகத்தில் உள்ள கவலைகள், தேவனுடைய வார்த்தையைக் கேட்டும் அதனை செயல்படுத்த முடியாதபடி நெருக்கிப் போடுவதால் பலனற்றுப் போகிறார்கள்  (மாற்கு 4:19). ஆகவே, அந்த நபர் பயனற்றவராகிறார் (2 பேதுரு 1:8). அதாவது, அவர்களின் விசுவாசம் சுறுசுறுப்பாகவும், திசையற்றதாகவும், நற்செயல்கள் மற்றும் பலன்கள் இல்லாமல் செல்வதற்கு சமமாகிறது (யாக்கோபு 2:14-26). மனிதர்கள் முட்டாள்கள், ஆம், ஆடுகளைப் போல வழி தப்பித் திரிந்து அவனவன் தன்தன் வழியிலே போகிறார்கள்  (ஏசாயா 53:6). ஆயத்தமில்லாத முட்டாள் கன்னிப்பெண்கள் சரியான இடத்தில், சரியான நேரத்தில், சரியான ஐக்கியத்துடன் இருந்தனர், ஆனால் கல்யாண விருந்தில் பங்கேற்க முடியவில்லை (மத்தேயு 25:1-12).

 நான் விழிப்புடனும் ஜாக்கிரதையுடனும் அவர் வருகைக்காகக் காத்திருக்கிறேனா?

Author: Rev. Dr. J .N. மனோகரன்



Topics: Daily Devotions bible study Rev. Dr. J .N. மனோகரன்

tamil bible, tamil Bible search,tamil bible online , tamil bible download, tamil bible study, tamil bible free download