ஞாயிறு பள்ளி வகுப்பில், ஆசிரியர் ஊதாரி மகனின் உவமையைக் கற்பித்தார் (லூக்கா 15:11-32). இளைய மகன் ஒரு கெட்ட பையன் என்பதனை விளக்க அவன் கீழ்ப்படியாதவன், கலகக்காரன், தாறுமாறானவன், பேராசை கொண்டவன் என்பதாக ஆசிரியர் கூறினார். அதைக் கேட்டுக் கொண்டிருந்த ஒரு இளம் வாலிபன் குழப்பத்துடன் காணப்பட்டான். ஆசிரியர் அவனிடம் என்னாயிற்று, என்ன குழப்பம் எனக் கேட்டபோது; அவன் இவ்வாறாக கூறினான். 'எனது பிறந்தநாளுக்கு எனது தந்தை எனக்கு பேட் பாய்ஸ் பிராண்ட் உடை வாங்கித் தந்தார். நான் ஒரு கெட்ட பையனும் அல்ல, அப்படி இருக்கவும் விரும்பவில்லை'.
மதிப்பிற்குரியது:
சமுதாயத்தில் எது மதிக்கப்படுகிறது, கனப்படுத்தப்படுகிறது, உயர்ந்ததாக காணப்படுகிறது என்பது முக்கியம். அது மக்களின் கலாச்சாரம் மற்றும் மத விழுமியங்களை பிரதிபலிப்பதாக இருக்கிறது. நன்மை, நேர்மை, நீதி, உண்மை, இரக்கம், உதவி, கருணையுள்ள செயல்கள், அன்பான வார்த்தைகள் போன்றவை சமூகங்களில் பொதுவாக மதிக்கப்பட வேண்டும். கடந்த சில ஆண்டுகளில், எது மதிக்கப்பட வேண்டுமோ அது மங்கலாகிவிட்டது, மேலும் பொல்லாத, ஒழுக்கக்கேடான மற்றும் சட்டவிரோத செயல்கள் கூட மதிக்கப்படுகின்றன.
பேட் (மோசம்) என்பது பிராண்ட்:
பல இசைக் குழுக்கள், ஆடைகள், பொம்மை வகைகள் போன்றவற்றின் பெயர்களாக இவை உள்ளன. இந்த பிராண்டுகள் மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றால், எது நல்லதல்ல என்பதற்கு ஒப்புதல் அளிக்கும் தந்திரமாகின்றது. இதேபோல், ஒரு மோட்டார் பைக்கின் விளம்பரம் 'பொல்லாத ரைடு’ என பயன்படுத்துகிறது.
நல்லது போல் கெட்டதா?
"தீமையை நன்மையென்றும், நன்மையைத் தீமையென்றும் சொல்லி, இருளை வெளிச்சமும், வெளிச்சத்தை இருளுமாகப் பாவித்து, கசப்பைத் தித்திப்பும், தித்திப்பைக் கசப்புமென்று சாதிக்கிறவர்களுக்கு ஐயோ!" (ஏசாயா 5:20) என ஏசாயா தீர்க்கதரிசி அறிக்கையிடுகிறார். சொற்களஞ்சியத்தில் குழப்பம் உள்ளதா? ஒருவேளை அப்பாவி, குறும்பு போன்ற வார்த்தைகள் தான் கெட்டது என்று வரையறுக்கப்படுகிறதா?
தோல்வியைக் குறித்ததான மதிப்புகள்:
ஆனால் உண்மையாகவே நல்லதை கெட்டது என முத்திரையிட்டு அதை விளம்பரமும் படுத்துவது என்பது மிகவும் வருத்தமான செயல். ஆம், ஆடைகளுக்கு ‘பேட் பாய்ஸ்’ என்ற பிராண்ட் இருந்தால், ஆடைகள் நல்லதாகவும் நீடித்ததாகவும் இருக்கும் என்று அர்த்தம்.
பகுத்தறிவு இல்லை:
சமூகம் அதன் தார்மீக திசைகாட்டியை இழந்துவிட்டதா என்ன? நினிவே நகரத்தில் உள்ள மக்களுக்கு வலது மற்றும் இடது வித்தியாசம் தெரியாது என்று கூறுவதின் அர்த்தம் என்னவென்றால், அவர்களுக்கு எது சரி மற்றும் எது தவறு என தெரியாது (யோனா 4:11).
குழப்பமான தலைமுறை:
நல்லவர்களுக்குப் பரிசளிக்காமல், தீயவர்களைத் தண்டிக்காத சமூகத்தில் வளர்ந்து வரும் குழந்தைகளும், இளைஞர்களும் குழம்பிப் போவார்கள். அதிலும் மோசம் என்னவெனில் அவர்களாகவே மோசமானதை தேர்ந்தெடுப்பார்கள் மற்றும் மோசமானது என்பது இயல்பான தெரிவு போலாகி விடும்.
தீர்க்கதரிசன சத்தம்:
குழப்பமான சத்தங்களுக்கு மத்தியில் சபை ஒரு தீர்க்கதரிசன, விவேகமான மற்றும் தனித்துவமான குரலாக இருக்க வேண்டும். கல்வி நிறுவனங்கள், குடிமை/பொது சமூகம், ஊடகங்கள் மற்றும் அரசாங்கம் மௌனமாக இருக்கும் போது, தீமை தொடர்ந்து மக்களை மயக்கி, தார்மீக ரீதியாகவும் ஆவிக்குரிய ரீதியாகவும் முடக்குகிறது.
தேவனின் வார்த்தையையும் தேவனின் ஆவியையும் நான் பகுத்தறிகிறேனா?
Author: Rev. Dr. J .N. மனோகரன்