சில தீர்க்கதரிசிகள் கவனித்து கேட்பவர்கள் மீது அக்கினியையும் கந்தகத்தையும் அறிவித்தனர். அதில் சிலர் வேறுபட்டவர்கள், எரேமியா ஒரு புலம்பல் மற்றும் கண்ணீர் தீர்க்கதரிசி. யூதாவின் பாவங்கள், அவர்களின் கலகம் மற்றும் பாபிலோனில் எழுபது ஆண்டுகள் நாடுகடத்தப்படுவதற்கு தேவன் உத்தேசித்துள்ள தண்டனைக்காக அவர் அழுதார். புலம்பல் புத்தகத்தில் நாம் பார்க்கிறபடி, எருசலேம் அழிக்கப்பட்டபோது, அவர் நகரத்திற்காக புலம்பினார். "அப்பொழுது எரேமியா எல்லாப் பிரபுக்களையும், எல்லா ஜனங்களையும் நோக்கி: நீங்கள் கேட்ட எல்லா வார்த்தைகளையும் இந்த ஆலயத்துக்கும் இந்த நகரத்துக்கும் விரோதமாகத் தீர்க்கதரிசனமாய்ச் சொல்லக் கர்த்தர் என்னை அனுப்பினார். இப்பொழுதும் நீங்கள் உங்கள் வழிகளையும், உங்கள் கிரியைகளையும் சீர்ப்படுத்தி, உங்கள் தேவனாகிய கர்த்தருடைய சத்தத்தைக் கேளுங்கள்; அப்பொழுது கர்த்தர் உங்களுக்கு விரோதமாய்ச் சொன்ன தீங்குக்கு மனஸ்தாபப்படுவார். நானோவெனில், இதோ, உங்கள் கையில் இருக்கிறேன்; உங்கள் பார்வைக்கு நன்மையும் நியாயமுமாயிருக்கிறதை எனக்குச் செய்யுங்கள். ஆகிலும் நீங்கள் என்னைக் கொன்றுபோட்டால், நீங்கள் குற்றமில்லாத இரத்தப்பழியை உங்கள்மேலும் இந்த நகரத்தின்மேலும் இதின் குடிகளின்மேலும் சுமத்திக்கொள்வீர்களென்று நிச்சயமாய் அறியுங்கள்; இந்த வார்த்தைகளையெல்லாம் உங்கள் செவிகளிலே சொல்லக் கர்த்தர் மெய்யாகவே என்னை உங்களிடத்திற்கு அனுப்பினார் என்று சொன்னான்" (எரேமியா 26:12-15).
தேவன் சார்பில் :
எரேமியா தேவனை உண்மையாக பிரதிநிதித்துவப்படுத்தினார். ஜனங்களுக்கு ஏற்ப அவர் செய்தியை மாற்றவில்லை. பிரபுக்களைக் காட்டிலும் தேவனைப் பிரியப்படுத்த விரும்பினார்.
மனந்திரும்புவதற்கான அழைப்பு:
ஒரு உண்மையான தீர்க்கதரிசி மக்களை மனந்திரும்பச் செய்து தேவனுடன் ஒப்புரவாக செய்ய அழைக்க வேண்டும். எரேமியா ஒரு உண்மையான தீர்க்கதரிசி, தேவனின் சத்தத்திற்கு கீழ்ப்படியுமாறு ஜனங்களைக் கேட்டுக் கொண்டார், அதனால் அவர்களின் வாழ்க்கை முறை மற்றும் நடத்தையில் ஒரு மாற்றம் ஏற்படும், அவர்களின் வாழ்வும் சாட்சியாக மாறும் அல்லவா. ஜனங்கள் தேவனிடம் திரும்ப வேண்டும், பேரழிவைத் தவிர்க்க வேண்டும் என்றும் எரேமியா விரும்பினார்.
தாழ்மை:
எரேமியா, யூத பிரபுக்களுக்கு தனக்குத் தீங்கிழைக்கவும், தன்னை கொல்லவும் அதிகாரம் இருப்பதாகக் கூறினார். இருப்பினும், தேவன் அவர்களுக்கு அதிகாரம் வழங்காத வரை தங்களால் ஒன்றும் செய்ய இயலாது என்பதை அவர்கள் உணர வேண்டும் என்றும் அறிக்கை செய்தார்.
எச்சரிக்கை:
ஆயினும்கூட, தனது மரணத்திற்கு தேவன் பழிவாங்குவார் என்று எரேமியா அறிவித்தார். எரேமியா உயிருக்கு பயந்து தர்க்கம் பண்ணவும் இல்லை, தப்பி ஓடவும் இல்லை, ஆனால் தேவனிடம் தன்னை முழுமையாக அர்ப்பணித்தார்.
மரணத்திற்கு அஞ்சாதவர்
எரேமியா மரணத்திற்கு பயப்படவில்லை, ஏனென்றால் கர்த்தர் தன்னை அனுப்பினார் என்ற நம்பிக்கையின் காரணமாக, அவர் உண்மையை மட்டுமே பேசினார்.
தாழ்மையுள்ள தீர்க்கதரிசிகளின் வார்த்தைகளை நாம் பகுத்தறிந்து, அவர்கள் சொல்வதை கேட்கிறோமா?
Author: Rev. Dr. J .N. மனோகரன்