1. உயிருள்ளவரைக் கர்த்தரைப் பாடுவேன்
சங்கீதம் 104:33 நான் உயிரோடிருக்குமட்டும் கர்த்தரைப் பாடுவேன்
சங்கீதம் 13:6 கர்த்தர் எனக்கு நன்மைசெய்தபடியால் பாடுவேன்
1கொரிந்தியர் 14:15 நான் ஆவியோடும் பாடுவேன், கருத்தோடும் பாடுவேன்
சங்கீதம் 89:1 கர்த்தரின் கிருபைகளை என்றென்றைக்கும் பாடுவேன்
சங்கீதம் 101:1 இரக்கத்தையும் நியாயத்தையும் குறித்துப் பாடுவேன்
சங்கீதம் 144:9 கர்த்தாவே, உமக்குப் புதுப்பாட்டைப் பாடுவேன்.
2. உயிருள்ளவரைக் கர்த்தரைத் துதிப்பேன்
சங்கீதம் 146:2 நான் உயிரோடிருக்குமட்டும் கர்த்தரைத் துதிப்பேன்
சங்கீதம் 34:1 கர்த்தரை நான் எக்காலத்திலும் ஸ்தோத்தரிப்பேன்; அவர் துதி எப்பொழுதும் என் வாயிலிருக்கும்.
சங்கீதம் 9:1 கர்த்தாவே, என் முழு இருதயத்தோடும் உம்மைத் துதிப்பேன்
சங்கீதம் 118:1; சங்கீதம் 136:1-26 கர்த்தரைத் துதியுங்கள், அவர் நல்லவர். அவர் கிருபை என்றுமுள்ளது.
ஏசாயா 6:3; வெளிப். 4:8 சர்வவல்லமையுள்ள தேவனாகிய கர்த்தர் பரிசுத்தர், பரிசுத்தர், பரிசுத்தர் என்று இரவும் பகலும் ஓய்வில்லாமல் சொல்லிக் கொண்டிருந்தன.
3. உயிருள்ளவரைக் கர்த்தரைத் தொழுவேன்
சங்கீதம் 116:2,13,17 நான் உயிரோடிருக்குமளவும் அவரைத் தொழுது கொள்வேன்
யோவேல் 2:32 கர்த்தருடைய நாமத்தைத் தொழுதுகொள்ளுகிறவன் எவனோ அவன் இரட்சிக்கப்படுவான்.
யோவான் 4:24 தேவன் ஆவியாயிருக்கிறார், அவரைத் தொழுது கொள்ளுகிறவர்கள் ஆவியோடும் உண்மையோடும் அவரைத் தொழுது கொள்ளவேண்டும்
ரோமர் 10:12,13 கர்த்தருடைய நாமத்தை தொழுதுகொள்ளுகிற எவனும் இரட்சிக்கப்படுவான்.
1நாளாகமம் 16:29; சங்கீதம் 29:2; சங்கீதம் 96:6 பரிசுத்த அலங்காரத்துடனே கர்த்தரைத் தொழுதுகொள்ளுங்கள்; பூலோகத்தாரே நீங்கள் யாவரும் அவருக்கு முன்பாக நடுங்குங்கள்.
Author: Rev. M. Arul Doss