எதையாவது இலவசமாகக் கொடுத்தால், மக்கள் அதை மதிக்க மாட்டார்கள் அல்லது அதன் மதிப்பைப் புரிந்து கொள்ள மாட்டார்கள் என்பதாக பொதுவான பழமொழி உள்ளது. சிலர் தங்களுக்கு கிடைக்கும் வரங்களை துஷ்பிரயோகம் செய்வதும் மற்றும் அவமதிப்பு செய்வதுமாக இருக்கின்றனர். ஒரு சிலர் நன்றியுடன் அதைப் பெறுகிறார்கள் மற்றும் சிறந்த முறையில் அதைப் பயன்படுத்துகிறார்கள். பவுல் தனக்கு அளிக்கப்பட்ட கிருபை சரியாகப் பயன்படுத்தப்பட்டதாகவும், அவர் நன்றாக உழைத்ததாகவும் எழுதுகிறார் (1 கொரிந்தியர் 15: 9-10).
நன்றி:
பவுல் தனக்கு வழங்கப்பட்ட கிருபைக்கு நன்றி தெரிவித்தார். பணிவுடனும், நன்றியுடனும், சிரத்தையுடனும் தேவ கிருபையைப் பெற்றார். கிருபை என்பது சம்பாதிப்பது அல்ல, ஈவாக வழங்கப்படுகிறது.
வீண்?
ஒரு நபர் தனக்கு அளிக்கப்பட்ட கிருபையை முட்டாள்தனமாக வீணாக்க முடியும் என பவுலின் கூற்று தெளிவாக உள்ளது. சோம்பல் மற்றும் அலட்சியம் ஆகியவை கிருபையை, பயன்படுத்தப்படாத அல்லது குறைவாகப் பயன்படுத்தப்படுவதற்கான காரணங்களாக இருக்கலாம்.
அதிக பிரயாசம்:
தேவக் கிருபையை ஏராளமாகப் பயன்படுத்தியதாக பவுல் கூறுகிறார். "பின்னும் நான் சொல்லுகிறதென்னவெனில், சிறுக விதைக்கிறவன் சிறுக அறுப்பான், பெருக விதைக்கிறவன் பெருக அறுப்பான்" (2 கொரிந்தியர் 9:6). ஒருவேளை, மற்றவர்களை விட பவுல் அதிக முயற்சி எடுத்திருக்கலாம்; அவரைக் கொல்லக்கூடிய அபாயங்கள் நேர்ந்தது; ஓய்வோ இளைப்பாறுதலோ இல்லை மற்றும் எதிர்ப்பின் மத்தியிலும் ஓயாது பயணித்தார்.
சோம்பேறியா?
சில அப்போஸ்தலர்கள் சோம்பேறிகளாக இருந்தார்களா? ஆம், அது சாத்தியமே. மூன்று முக்கிய அப்போஸ்தலர்கள் கெத்செமனே தோட்டத்தில் வெறுமனே தூங்கினர் (மத்தேயு 26:36-46). "வழியிலே சிங்கம் இருக்கும், நடுவீதியிலே சிங்கம் இருக்கும் என்று சோம்பேறி சொல்லுவான்" (நீதிமொழிகள் 26:13).
செயலற்றதா?
சில அப்போஸ்தலர்கள் தங்கள் அணுகுமுறையில் செயலற்றவர்களாக இருந்தனர். பவுல் தனது நற்செய்தி அறிவிப்பில் உறுதியாகவும் ஆக்ரோஷமாகவும் இருந்தார். அகஸ்து இராயன் முன்பான கூட்டத்தில் "இந்தக் கட்டுகள் தவிர, முழுவதும் என்னைப்போலாகும்படி தேவனை வேண்டிக்கொள்ளுகிறேன்" (அப்போஸ்தலர் 26:29) என்றார் பவுல் துணிச்சலாக.
உடைந்த கூட்டணி:
நாம் இல்லாமல் தேவனால் செய்ய முடியும். ஆயினும்கூட, அவர் தனது மக்களைக் கொண்டு அருட்பணி செய்வதைத் தேர்வு செய்கிறார். இந்த கூட்டணியில், அவர் உண்மையுள்ளவராக இருக்கும்போது நாம் அலட்சியமாக இருப்பது நியாயமாகுமா. அப்படி உடைந்த கூட்டு என்பது தேவனுடைய ராஜ்யத்திற்கு ஒரு இழப்பாக இருக்கும்.
ஒப்பீடு:
பவுல் இன்னும் அதிகமாக பணி செய்ய மற்ற சீஷர்களுடன் போட்டியிட்டார். அதில், பவுல் வெற்றி பெற்றார். சத்தியத்தைச் சொல்வதில் அவருக்குப் பெருமையும் இல்லை, வெட்கமும் இல்லை.
மன்னிப்புகள்?
மற்ற அப்போஸ்தலர்கள் குறைவான செயல்பாட்டிற்கு சாக்கு போக்கு சொல்வார்களா? மற்றவர்களைக் குறை கூறுவதும், சூழ்நிலைகளும் அருட்பணி செய்ய முன்முயற்சி எடுப்பதையோ வைராக்கியத்தையோ ஒருபோதும் தவிர்க்க முடியாது, தடுக்க முடியாது.
நான் தேவ கிருபையின் உண்மையுள்ள உக்கிராணக்காரனா?
Author: Rev. Dr. J .N. மனோகரன்