நாம் ஏன் தேவன் மீது இவ்வளவு நம்பிக்கையோடு (விசுவாசமாக) இருக்கிறோம் என்ற காரணத்தைப் பகிர்ந்து கொள்ள எப்போதும் தயாராக இருக்க வேண்டுமென்று விசுவாசிகளுக்கு பேதுரு தெரிவிக்கிறார். "கர்த்தராகிய தேவனை உங்கள் இருதயங்களில் பரிசுத்தம்பண்ணுங்கள்; உங்களிலிருக்கிற நம்பிக்கையைக்குறித்து உங்களிடத்தில் விசாரித்துக் கேட்கிற யாவருக்கும் சாந்தத்தோடும் வணக்கத்தோடும் உத்தரவுசொல்ல எப்பொழுதும் ஆயத்தமாயிருங்கள்" (1 பேதுரு 3:15). ஆம், மூன்று அம்சங்களில் நாம் ஆயத்தமாயிருக்க வேண்டும்.
1) தனிப்பட்ட சாட்சியம்:
அனைத்து சீஷர்களும் தங்கள் சாட்சியை ஆயத்தம் செய்ய வேண்டும். சாட்சியம் மூன்று பகுதிகளைக் கொண்டிருக்க வேண்டும். அதற்கான வார்ப்புரு (template) மாதிரி; கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை அறிவதற்கு முன்னிருந்த வாழ்க்கை; கிறிஸ்துவிடம் வந்தது எப்படி; மற்றும் மாறிய வாழ்க்கை. ஆம், எருசலேமில் இருந்த யூத மக்களிடம் பவுல் பேசியபோது பின்பற்றப்பட்ட மாதிரி இதுதான் (அப்போஸ்தலர் 22: 1-21). மூன்று கூறுகளும் சம எண்ணிக்கையிலான வார்த்தைகளாகவும் அல்லது தொடர்பு கொள்ள எடுக்கும் நேரமும் சரியான அளவில் இருக்க வேண்டும். விசுவாசிகள் மூன்று வாக்கியங்களில் பகிர்ந்து கொள்ள வேண்டும். டெம்ப்ளேட்டில் உள்ள ஒவ்வொரு பகுதிக்கும் ஒரு வாக்கியம். ஒவ்வொரு பகுதியையும் ஐந்து அல்லது பத்து வாக்கியங்களாக விரிவுபடுத்தலாம்.
2) நற்செய்தி அத்தியாவசியங்கள்:
சீஷர்கள் கீழ்ப்படிதல் உள்ளவர்களாக இருக்க வேண்டும் மற்றும் ஒரு ஒத்திசைவான முறையில் சுவிசேஷத்தை பகிர்ந்து கொள்ள தெரிந்திருக்க வேண்டும். முதலாவதாக, நற்செய்தி நிகழ்வுகள் இரட்சகர் மற்றும் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை அடிப்படையாகக் கொண்டவை. கன்னிப் பிறப்பு முதல் ஊழியம், சிலுவை, மரணம், அடக்கம், உயிர்த்தெழுதல் மற்றும் பரமேறுதல் வரை ஆண்டவரின் வாழ்க்கையைப் பகிர்ந்துகொள்ள வேண்டும். இரண்டாவதாக, நற்செய்தி சத்தியங்கள், ஆண்டவரின் பாவமற்ற மனிதநேயம், அவரது மரணத்தின் நோக்கம், அவரது உயிர்த்தெழுதலின் முக்கியத்துவம், பரமேறுதலின் முக்கியத்துவம் மற்றும் அவரது மகிமையான வருகையின் நம்பிக்கை ஆகியவற்றைப் பற்றியது ஆகும். அவரே உலகத்தின் ஒளி, வழி, சத்தியம், ஜீவன், உயிர்த்தெழுதல், நல்ல மேய்ப்பன், வாசல் என ஆண்டவராகிய இயேசு கூறுவதை தெளிவாக விளக்க வேண்டும். மூன்றாவதாக, ஒரு நபர் பிரதியுத்தரம் அளிக்க வேண்டும் என்று நற்செய்தி கோருகிறது. ஒரு நபர் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை விசுவாசிக்க வேண்டும்; தன் சிலுவையை எடுத்துக்கொண்டு கர்த்தராகிய இயேசுவைப் பின்பற்ற தயாராக இருக்க வேண்டும். மனந்திரும்புதல், பாவங்களை விட்டு விடுதல், மறுசீரமைப்பு மற்றும் ஒப்புரவாகுதல் கற்பிக்கப்பட வேண்டும். நான்காவதாக, நற்செய்தியின் வாக்குத்தத்திற்குள் பாவங்களிலிருந்து மன்னிப்பு, நீதிமானாகுதல் மற்றும் அவருடைய பிள்ளைகளாக மாறுதல், அவரின் குடும்பத்திற்குத் தழுவல், பரிசுத்த ஆவியால் சீல் வைக்கப்படுதல் மற்றும் பரலோக ராஜ்ஜிய உறுதிப்பாடு ஆகியவை அடங்கும்.
3) பாதுகாப்பு - ஆட்சேபனைகள்:
பணியிடத்தில் பலவிதமான மனிதர்கள் இருப்பார்கள். மதப்பற்றுடையவர்கள், பெயரளவு கிறிஸ்தவர்கள், நாத்திகர்கள், அஞ்ஞானவாதிகள், பொருள்சாரார்... எனப் போன்று இருக்கலாம். இந்த நபர்களால் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகளுக்கு பதில் அறிந்திருக்க வேண்டும் மற்றும் அவர்கள் கேட்கக்கூடிய கேள்விகளுக்கான பதில்கள் ஆயத்தமாக இருக்க வேண்டியது மிக அவசியம். வேலை செய்யும் இடங்களின் சுவிசேஷம் பயனுள்ளதாகவும் / நல் செயல் விளைவுகளை ஏற்படுத்த வேண்டுமென்றால் ஆயத்தமான மனமும், கேள்விகளை எதிர்கொள்ள தயாராக இருப்பதும் மிக அவசியம்.
எனது விசுவாசத்தைப் பகிர்ந்துகொள்ள நான் எப்போதும் தயாராக இருக்கிறேனா?
Author: Rev. Dr. J. N. Manokara