உலகில் மக்கள் ஆசீர்வாதங்களைத் துரத்துகிறார்கள், தங்களால் முடிந்தவரை பிடுங்கவும், மற்றவர்களிடமிருந்து பறிக்கவும், அதை தங்கள் வாழ்நாள் முழுவதுக்காக சேமிக்கவும் முயற்சிக்கிறார்கள். ஆனாலும், வெறுமை அவர்களை ஆட்கொள்கிறது. துரதிர்ஷ்டவசமாக, ஆவிக்குரிய ஐக்கியம், ஆவிக்குரிய பாதுக்கப்பு மற்றும் ஆபிரகாமுடன் இருப்பதன் பாதுகாப்பைக் காட்டிலும் பூமிக்குரிய செழுமைக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்று அநேகர் நினைத்தார். துரதிர்ஷ்டவசமாக ஆபிரகாம் தனது மனைவி மற்றும் சபிக்கப்பட்ட மரபு உட்பட அனைத்தையும் இழந்தான். (ஆதியாகமம் 13 & 19) ஆசீர்வாதங்கள், தேவனுக்காக வாழ்பவர்களையும் அவரது வார்த்தைக்கு கீழ்ப்படிந்தவர்களையும் துரத்திப் பிடிக்கின்றன.
நியாயப் பிரமாணமும் கீழ்ப்படிதலும்: தேவனின் பிரமாணங்களுக்குக் கீழ்ப்படிவது ஆசீர்வாதங்களைக் கொண்டுவருகிறது. கீழ்ப்படிதலுள்ள ஜனங்கள் மேல் ஆசீர்வாதங்கள் வந்து பலிக்கும் என்று மோசேயின் நியாயப் பிரமாணம் கூறுகிறது. (உபாகமம் 28:2-6) இது ஒரு சுவாரஸ்யமான ஒப்புமை; ஆசீர்வாதங்கள் பின்னால் இருந்து ஓடிவந்து முந்திவிடும். அதாவது ஆசீர்வாதங்களின் ஓட்டம் அதிகமாகவும், வலுவாகவும், வேகமாகவும், உயர்ந்ததாகவும் இருக்கும். சீஷ்ர்களையும் மூழ்கடிக்கும் என்றும் பொருள். மனித கற்பனையை மிஞ்சியத ஆசீர்வாதங்களால் ஆச்சரியப்படுவோம். ஆசீர்வாதங்கள் வாழ்க்கையின் அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கியது. இதில் குடும்பம், தினசரி உணவு, வேலை அல்லது தொழில், பயணம் மற்றும் வசிக்கும் இடம் ஆகியவை அடங்கும்.
எல்லா இடங்களிலும்: தேவனுக்குக் கீழ்ப்படிதலுள்ள மக்கள் தாங்களாகவே நகரத்திலும் புலத்திலும் ஆசீர்வாதமானவர்களாக இருப்பார்கள்: அவர்கள் எங்கிருந்தாலும். விசுவாசிகள் பரிசுத்த ஆவியின் ஆலயம் என்று பவுல் எழுதுகிறார். (I கொரிந்தியர் 6:19-20)
குழந்தைகள்: தேவ ஜனத்தின் குழந்தைகள் ஆசீர்வதிக்கப்படுவார்கள். அவர்கள் தங்கள் குழந்தைகளின் குழந்தைகளையும் பார்க்க முடியும். (சங்கீதம் 128:1)
உடைமைகள் மற்றும் தொழில்: லேவியர்களைத் தவிர அனைத்து இஸ்ரவேலர் குடும்பங்களுக்கும் நிலத்தை உரிமயாகப் பெற்றிருந்தனர். நிலம் கனிதரும்படி ஆசீர்வதிக்கப்படும். அவர்களின் கால்நடைகள், ஆட்டு மந்தைகள் மற்றும் தொழுவங்களும் ஆசீர்வதிக்கப்படும். அவர்கள் விவசாயிகளாகவும், மேய்ப்பர்களாகவும் பணிபுரியும் போது, அவர்களின் முயற்சிகளும் ஆசீர்வதிக்கப்பட்டு வெகுமதியைப் பெறும்.
உணவு: சமையலறை ஆசீர்வதிக்கப்படும். கூடை பழங்கள் அல்லது அதில் வைக்கப்பட்டுள்ள அப்பங்களைக் குறிக்கலாம். மாப்பிசைகிற கிண்ணம் சமைக்கும் செயல்முறையைக் குறிக்கிறது, அதுவும் ஆசீர்வதிக்கப்படும். உணவில் குணப்படுத்தும் பண்புகள் இருக்கும்.
பயணம்: வரும்போதும் வெளியே செல்லும் போதும் தேவ பிள்ளைகள் ஆசீர்வதிக்கப்பட்டிருப்பார்கள். கர்த்தர் உன் போக்கையும் உன் வரத்தையும் இதுமுதற்கொண்டு என்றைக்குங் காப்பார். (சங்கீதம் 121:8) நவீன உலகில் பெரும்பாலான மக்கள் வேலைக்காகவும் பிற நோக்கங்களுக்காகவும் பயணம் செய்கிறார்கள்.
கர்த்தரின் ஆசீர்வாதங்கள் என்னை பிந்தொடர்ந்து முந்தியுள்ளனவா?
Author: Rev. Dr. J .N. மனோகரன்