விசித்திரமான பயம்

ஈரானிய நாட்டில் அமோவ் ஹாஜி என்ற ஒரு மனிதர் இருந்தார், அவர்  "உலகின் அழுக்கு மனிதர்" என்று அழைக்கப்பட்டார்; ஏனென்றால் பல தசாப்தங்களாக குளிக்காமல் இருந்தார், குளித்தால் நோய்வாய்ப்படுவேனோ என்று அவர் பயந்தார் (என்டிடிவி செய்தி அக்டோபர் 25, 2022).  அவர் 94 வயது வரை வாழ்ந்து மரித்தார், அவர் அப்படி நீண்ட காலம் வாழ்ந்தாலும், அவரது வாழ்க்கைக்கு அர்த்தமோ நோக்கமோ இல்லை.

சித்தப்பிரமை:
அதிகப்படியான அல்லது தேவையற்ற பயம் ஒரு நபரை சித்தப்பிரமை ஆக்கிவிடும். பலர் நாய்கள், பூச்சிகள், கொறித்துண்ணிகள் (எலி, அணில், முள்ளம்பன்றி) அல்லது ஊர்வனவற்றுக்கு பயப்படுகிறார்கள்.  சிலர் தண்ணீர், உயரம் அல்லது ரயில்/விமானப் பயணத்திற்கு பயப்படுகிறார்கள்.  சிலர் குறிப்பிட்ட தொழில் வல்லுநர்களைப் பார்த்து; அதாவது மருத்துவர்கள், காவல்துறை அல்லது அரசியல்வாதிகள் அல்லது ஆசிரியர்கள் போன்றோருக்கு பயப்படுகிறார்கள். 

முடக்கம்:
சிலர் தாங்கள் சிறிது நேரத்திலோ அல்லது குறுகிய காலத்திலோ அல்லது நீண்ட காலத்திலோ முடங்கி விட்டதாக பயப்படுகிறார்கள்.  கைது செய்ய வந்த வீரர்களிடம் நான் தான் இயேசு கிறிஸ்து என்று கர்த்தர் சொன்னதும் அவர்கள் ஒரு கணம் முடங்கிப் போனார்கள் (யோவான் 18:6).

மரண பயம்:
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுடன்  படகில் பயணம் செய்த சீஷர்கள் காற்றையும், அலையையும் மற்றும் படகின் உள்ளே தண்ணீர் வருவதையும் கண்டு பயந்தார்கள்.  போதியளவு விசுவாசம் அவர்களுக்கு இல்லையே எனக் கர்த்தர் அவர்களைக் கடிந்துக் கொண்டார், சீஷர்களுக்கு அந்த அவிசுவாசம் மரண பயத்தில் வெளிப்பட்டது (மாற்கு 4:39-40). ஆனால் கர்த்தராகிய இயேசுவை விசுவாசிக்கிறவர்கள் மரணத்திற்கு பயப்படுவதில்லை (எபிரெயர் 2:15).

சமூக சித்தப்பிரமை:
பலர் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை நேசிக்கிறார்கள், அவருடைய சுவிசேஷத்தை ஏற்றுக்கொள்கிறார்கள், இரட்சிப்புக்கான ஒரே வழி அவர்தான் என்பதை அறிவார்கள்.  இருப்பினும், அவர்கள் சமூகத்திற்கு பயப்படுகிறார்கள்.  ஒரு சமூகத்தில், மாறுபட்ட கருத்துக்கள் அல்லது எண்ணங்கள் கொண்ட ஒருவர் நிராகரிக்கப்படலாம்.  அத்தகைய புறக்கணிப்புக்கு பயந்து, அவர்கள் கர்த்தராகிய இயேசுவைப் பின்பற்ற விரும்பவில்லை.

ஆவிக்குரிய சித்தப்பிரமை:
பரிசுத்த வாழ்க்கைக்கு அஞ்சும் சிலர் இருக்கிறார்கள். பாவத்தின் இன்பத்தில் சுகமாக இருப்பதால், கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவைப் பின்பற்ற வேண்டுமானால் பாவங்களை அல்லது குற்றங்களை கைவிட வேண்டியிருக்குமே,  அவர்கள் அதை கைவிட விரும்பவில்லை. ஆம்,  இந்த உலகில் தற்காலிக இன்பமும் அதன் செளகரியங்களும் அவர்களுக்கு மிகவும் மதிப்புமிக்கதாகத் தெரிகிறது.

கலாச்சார சித்தப்பிரமை:
சிலர் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை அந்நியர் என்று கூறி நிராகரிக்கின்றனர்.  அவரே சிருஷ்டிகர், நம்மைப் படைத்தவர், இறையாண்மையாளர், ஆட்சி செய்பவர் மற்றும் அவரே நம் இரட்சகர் எனப் பார்ப்பதற்குப் பதிலாக, அவரை ஒரு யூதராக பார்ப்பது என்பது நமக்கு நாமே ஏற்படுத்திக் கொள்ளும் அழிவு என்றே சொல்ல வேண்டும்.  ஆம், இது சுய அழிவு.

 ஆரோக்கியமான பயம்:
கர்த்தருக்குப் பயப்படுதலே ஞானத்தின் ஆரம்பம் (நீதிமொழிகள் 9:10).

 எனக்கு ஆரோக்கியமான பயம் உள்ளதா அல்லது தேவையற்ற பயங்களைக் கொண்டிருக்கிறேனா?

Author: Rev. Dr. J .N. மனோகரன்



Topics: Daily Devotions bible study Rev. Dr. J .N. மனோகரன்

tamil bible, tamil Bible search,tamil bible online , tamil bible download, tamil bible study, tamil bible free download