இது ஒரு பரபரப்பான ரயில்வே சந்திப்பு. வடக்கு மற்றும் தெற்கில் உள்ள இரண்டு நகரங்களை இணைக்கும் இரண்டு ரயில்கள் இந்த சந்திப்பில் கடக்கின்றன. இரண்டு ரயில்களும் கிட்டத்தட்ட ஒரே நேரத்தில் வரும். வடக்கு நோக்கிச் செல்ல வேண்டிய ஒருவர் தெற்கு நோக்கிச் செல்லும் ரயிலில் ஏறினார். அவர் தவறான ரயிலில் அமர்ந்து, எதிர் திசையில் செல்வதை சக பயணிகள் கண்டறிந்து, வேறு ரயிலில் செல்லும்படி அறிவுறுத்தினர். ஆனால் அந்த மனிதர் மறுத்துவிட்டார். வெகுதூரம் பயணித்த பின்பு, உணர்வடைந்தவராய் எப்படியாவது திரும்பி வர முயன்றார்.
சரியான இலக்கு:
ஒரு பயணி பயணத்தின் இலக்கையும் திசையையும் அறிந்திருக்க வேண்டும். இந்த மனிதனைப் போலிருந்தால், பயணம் தவறான இடத்தில் தான் முடிவடையும். வாழ்க்கையின் பயணம் நித்தியத்தை நோக்கி, நித்திய வீட்டை அடைகிறது, அங்கு சிருஷ்டிகரும், மீட்பவரும், நியாதிபதியும் வசிக்கிறார்கள். ஒரு பயணிக்கு இலக்கு இல்லை என்றால், எந்த ரயிலிலும் பயணிக்கலாம், அது பிரச்சனையில்லை. மனிதர்களுக்கு ஒரு வாழ்க்கை இருக்கிறது, அதற்குப் பிறகு தீர்ப்பு. எனவே, தேவனின் தீர்ப்பை எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும் (எபிரெயர் 9:27).
சரியான வழி:
பண்டைய ரோமானியப் பேரரசில் அனைத்து சாலைகளும் ரோம் நகருக்குச் செல்வது போல் அனைத்து சாலைகளும் பரலோகத்திற்கு அழைத்துச் செல்லும் என்று ஒரு கட்டுக்கதை உள்ளது. கர்த்தராகிய இயேசு கிறிஸ்து அறிவித்தார்; "நானே வழியும், சத்தியமும், ஜீவனுமாயிருக்கிறேன்” (யோவான் 14:6). இதற்கு மாற்று வழியோ, குறுகிய வழியோ, சுற்று வழியோ இல்லை.
சரியான தெரிவு:
“வழிகளிலே நின்று, பூர்வ பாதைகள் எவையென்று கேட்டு விசாரித்து, நல்ல வழி எங்கே என்று பார்த்து, அதிலே நடவுங்கள்; அப்பொழுது உங்கள் ஆத்துமாவுக்கு இளைப்பாறுதல் கிடைக்கும் என்று கர்த்தர் சொல்லுகிறார்; அவர்களோ, நாங்கள் அதிலே நடக்கமாட்டோம் என்கிறார்கள்” (எரேமியா 6:16) என்கிறார் கர்த்தர். பலர் சுவிசேஷத்தை நல்ல வழி என்றும் ஓய்வு பெற சரியான வழி என்றும் அறிவிக்கிறார்கள். பலர் அதில் நடக்க விரும்புவதில்லை.
சரியான கற்றல்:
கேட்டு கற்றுக் கொள்ளுங்கள். அதற்கு பணிவு அவசியம். தங்கள் கலாச்சாரம், சாதி, வர்க்கம், குலம், வழிபாட்டு முறை, சித்தாந்தம், மரபுகள், பழக்கவழக்கங்கள் போன்றவற்றில் பெருமைப்படுபவர்களால் சத்தியத்தைக் கேட்டுக் கற்றுக்கொள்ள முடியாது.
சரியான சக பயணிகள்:
சில சமயங்களில் இணைந்து பயணம் செய்வது நன்மை தரும். சபையில் ஒரே இலக்கு, தரிசனம் மற்றும் நோக்கம் கொண்ட இணை பயணிகள் உள்ளனர். இது சக விசுவாசிகளுடன் கூடிய ஒரு மகிழ்ச்சியான பயணம் என்றே சொல்ல வேண்டும்.
நான் சரியான நபர்களுடன், சரியான பாதையில், சரியான பயணத்தில் இருக்கிறேனா?
Author: Rev. Dr. J .N. மனோகரன்