ஒரு கிறிஸ்தவத் தலைவர் கோபமடைந்தவராக; நம் தேவன் அநியாயமான வசனத்தை மேற்கோள் காட்டுகிறாரே என்றார். "உள்ளவன் எவனுக்குங்கொடுக்கப்படும், இல்லாதவனிடத்தில் உள்ளதும் எடுத்துக்கொள்ளப்படும்" (லூக்கா 19:26). இந்த அறிக்கை கொஞ்சம் அபத்தமானதாகவும், சிறிது முரண்பாடானதாகவும் கூட இருக்கிறது. வேலையாட்கள் எஜமானரிடமிருந்து பத்து ராத்தல் (minas - எபிரெய வேதாகமத்தில், ஒரு மினா என்பது 570 கிராம்) (சுமார் மூன்று மாத ஊதியம்) பெறுகிறார்கள் மற்றும் வணிகத்தில் முதலீடு செய்யும்படி கட்டளையிடப்படுகிறார்கள். ஒருவன் கொடுத்த பத்து ராத்தலை வைத்து மேலும் பத்து ராத்தல் சம்பாதித்தான், அவனுக்கு 10 பட்டணங்களை ஆளும் வாய்ப்பு கிடைத்தது. மற்றொருவன் கொடுக்கப்பட்ட ஐந்து ராத்தலில் இருந்து மேலும் ஐந்து ராத்தல் சம்பாதித்தான், அவனுக்கு 5 பட்டணங்களை ஆளும் வாய்ப்பு கிடைத்தது. மற்றொருவன் எதையுமே செய்யவில்லை, வட்டி கிடைக்குமாறு வங்கியில் கூட டெபாசிட் செய்யவில்லை. அந்த எஜமானன் அவனிடம் இருந்து எடுத்து பத்து ராத்தல் கிடைத்தவனிடம் கொடுத்தார்.
ஒளியைப் பெறுதல்:
இறையியலாளர் மார்வின் பாரே விளக்குகிறார், ஒளி கிடைக்கும் போது அதிக வெளிச்சத்தைக் கொண்டுவருகிறது; ஒளியை மறுக்கும் போது, இரவை அல்லது இருளைக் கொண்டுவருகிறது. தேவனின் வரங்கள், கிருபை, ஞானம் மற்றும் அன்பு ஆகியவை ஆவிக்குரிய ஒளியைக் கொண்டுவருகின்றன. அந்த ஒளியை மறுப்பவர்கள் அல்லது புறக்கணிப்பவர்கள் இருளைத் தேர்ந்தெடுப்பார்கள். ஒளியை பணிவுடன், நன்றியுணர்வுடன் பெற வேண்டும்.
பயன்படுத்தாமல் தேங்கிய கிணறு:
ஒரு கிணற்றை பயன்படுத்திக் கொண்டே இருக்கும் போது தொடர்ந்து நீர் சுரக்கும், ஆனால் நாம் பயன்படுத்தாமல் விட்டால் தண்ணீர் தேங்கி நின்று விடும். அதற்கு பின்பு அத்தகைய கிணற்று நீர் பயன்படுத்துவதற்கு தகுதியற்றதாகவும், துர்நாற்றமாகவும், கருமையாகவும் மாறும். அதுபோல தான் தேவன் அளிக்கும் திறமைகள், வரங்கள் மற்றும் வளங்கள் ஒரு நோக்கத்திற்காக வழங்கப்படுகின்றன. அது பயன்படுத்தப்படாமல் இருந்தால், அது பயனற்றதாக அல்லது ஒன்றுமில்லாததாகவே போய் விடும்.
மறுப்பு முறை:
சிலர் தங்களிடம் உள்ளதை மறுக்கின்றனர். அவர்களைப் பொறுத்தவரை, அவர்கள் தொடர்ந்து மற்றவர்களுடன் ஒப்பிடுவதால், அது சிறியதாகவோ அல்லது மதிப்பு இல்லாததாகவோ தெரிகின்றது. அப்போது அந்த சிறியதும் அழிக்கப்படும். மோசேவும் அதை மறுத்திருந்தால், அவனிடம் எதுவும் இல்லை, ஆனால் அவனிடம் கோல் இருந்தது, தேவன் எவ்வாறு தனது வல்லமையை வெளிப்படுத்தி அடையாளம் காட்டாமல் இருக்க முடியும்?
விசுவாசம் இல்லாமை:
பல விசுவாசிகள் தேவனின் வாக்குத்தத்தங்களை நம்புவதில்லை. குழந்தை இல்லாத ஆபிரகாம் தன் சந்ததியினர் ஒரு தேசமாக மாறுவது பற்றிய தேவ வாக்குறுதியை விசுவாசித்தார். தேவ வாக்குறுதிகள் உத்தரவாதமான உடைமையைப் போலவே சிறந்தவை. நம்பிக்கையின்மையால், ஒரு விசுவாசி தேவ வல்லமையை மறுத்து, தேவ வாக்குறுதிகளை இழக்கிறான்.
இன்னும் அதிகம்:
உண்மையுள்ளவர்களும், விடாமுயற்சியுடன், தேவ சித்தத்தைச் செய்கிறவர்களும் பலன் பெறுவார்கள். அது மாத்திரமல்ல மேற்கொண்டு அதிக வாய்ப்புகள், அதிக பொறுப்புகள் மற்றும் அதிக சலுகைகள் அவர்களுக்கு வழங்கப்படும். மற்றவர்களைக் கண்டு பொறாமை கொள்வது எவ்வித சோம்பேறிக்கும் மற்றும் அலட்சியமான மக்களுக்கும் உதவாது.
நான் விசுவாசமுள்ள ஊழியக்காரனா?
Author: Rev. Dr. J .N. மனோகரன்