ஒரு பிரிட்டிஷ் லெப்டினன்ட் ஜெனரல், சர் ஃபிரெட்ரிக் ஸ்டான்லி மௌட் 1917 இல் பாக்தாத்தை கைப்பற்ற பணிக்கப்பட்டதைப் பற்றிய ஒரு சுவாரஸ்யமான கதை உள்ளது. அவர் தனது மொழிபெயர்ப்பாளருடனும் சில வீரர்களுடனும் நாடு முழுவதும் சுற்றித் திரிந்து ஒரு மேய்ப்பனைச் சந்தித்தார். மந்தையின் பாதியை வாங்கக்கூடியவளவு பணத்தைக் கொடுத்து, அவரது மந்தையைக் காவல் காத்த நாயைக் கொல்லச் சொன்னார். ஒரு நாய் ஒரு மேய்ப்பனுக்கு இன்றியமையாத துணையாக இருக்கிறது, அது ஆடுகளையும் மேய்ப்பனையும் தன் உயிரைப் பணயம் வைத்து எச்சரித்து பாதுகாக்கிறது. அப்படிப்பட்ட நாயை மேய்ப்பன் லெப்டினன்ட் ஜெனரலின் காலடியிலேயே கொன்றான். சமமான தொகைக்கு, ஜெனரல் மேய்ப்பனிடம் நாயின் தோலை உரிக்கச் சொன்னார், அதை அவன் உடனடியாக செய்தான். மூன்றாவது முறையாக, அதே தொகையை கொடுத்து, மேய்ப்பனிடம் நாயை துண்டு துண்டாக வெட்டச் சொன்னார். இப்போது, நாயை சாப்பிட்டால் அதே அளவு தருவீர்களா என்று மேய்ப்பன் கேட்டான். அதற்கு ஜெனரல் பதிலளித்தார், நான் மக்களைப் பற்றி அறிய விரும்புகிறேன், அவர்கள் எப்படி விசுவாசமாக இருக்கிறார்கள். பணத்துக்காக விசுவாசமான ஒரு ஜீவனைக் கொன்று, தோலை உரித்து, வெட்டினாய். வீரர்களின் பக்கம் திரும்பிய அவர், "இதுதான் தற்போதைய மனநிலையாக இருந்தால், யாரையும் விலைக்கு வாங்கி இந்த நாட்டை தோற்கடிக்க முடியும்" என்றார் (Amandala - பெலிஸின் செய்தித்தாள், ஜூலை 3, 2023). அநேக தலைவர்கள் இந்த மேய்ப்பனைப் போல தான் நேர்மை, உத்தமம் மற்றும் விசுவாசம் இல்லாமல் இருக்கின்றார்கள்.
ஓடிப்போன மேய்ப்பர்கள்:
கர்த்தராகிய இயேசு கிறிஸ்து பொய்யான மேய்ப்பர்களைப் பற்றி போதித்தார், அவர்கள் கூலி வேலைக்காரர்களைப் போல நடந்துகொள்கிறார்கள், உண்மையுள்ள உக்கிராணக்காரர்களாக அல்ல.
ஊழல் மேய்ப்பர்கள்:
"மேய்ப்பனாயிராதவனும், ஆடுகள் தனக்குச் சொந்தமல்லாதவனுமான கூலியாள் ஓநாய் வருகிறதைக் கண்டு ஆடுகளை விட்டு ஓடிப்போகிறான்; அப்பொழுது ஓநாய் ஆடுகளைப்பீறி, அவைகளைச் சிதறடிக்கும்" (யோவான் 10:12). தன்னுடைய காவல் நாயைக் கொன்ற மேய்ப்பன் கூலியாளை விட மோசமாக இருந்தான்.
சுயநல மேய்ப்பர்கள்:
மேய்ப்பன் மிகவும் சுயநலவாதி. அவனுக்கு தன்னை, தனது நலன் மற்றும் முன்னேற்றத்தைப் பற்றி மட்டுமே சிந்திக்க முடிந்ததேயன்றி, விசுவாசமான துணையை பற்றி எண்ணமில்லை.
பணத்தை வழிபடுபவன்:
மேய்ப்பனுக்கு நட்பை விட பணம் தான் முக்கியம். விசுவாசத்தை விட பணம் மேலானது. அவன் நெறிமுறை, தார்மீக மற்றும் ஆவிக்குரிய ரீதியில் தோல்வியடைந்தான்.
யூதாஸின் தடயம்:
கிறிஸ்தவ தலைவர்களில் கூட, யூதாஸ் போன்ற ஒரு சிலர் ஆண்டவராகிய இயேசுவை முப்பது வெள்ளிக்காசுகளுக்கு விற்கிறார்கள்.
நான் உத்தமமான நபரா, உண்மையுள்ள நபரா மற்றும் நேர்மையான நபரா?
Author: Rev. Dr. J .N. மனோகரன்