அனைவருக்கும் சரீரத்தில் காது உள்ளது, ஆனால் ஒரு சிலர் காது கேளாதவர்களாக இருக்கலாம். மற்றவர்கள் தெளிவாகக் கேட்பதில்லை, அவர்கள் மனமில்லாமல் ஏனோதானோவென்று கேட்கிறார்கள். சிலர் புரிந்துகொண்டு கேட்பதை தங்கள் வாழ்வில் அப்பியாசப்படுத்துகிறார்கள்.
முழு செவிடு:
சிலருக்கு காது கேட்காது, அவர்களுக்கு எவ்வித சத்தமோ அல்லது ஒலியோ கேட்காது. பரிசுத்த ஆவியின் குரலை நிராகரிக்கும் முழு செவிடர்கள் சிலர் உள்ளனர், மற்றவர்களுக்கு சத்தமே கேட்காத அளவு குரலை உயர்த்தி உச்சத்தில் கத்துகிறார்கள்.
சுரச்செவிடு:
சிலருக்கு இசையின் தொனி அல்லது சுருதி புரியவில்லை. அதேபோல், பாவத்தின் தீவிரத்தையோ, நரகத்தின் உறுதியையோ, தேவ நீதியையோ மக்கள் புரிந்துகொள்வதில்லை. அவர்கள் தேவன் அன்பானவர் என அறிகிறார்கள், மற்ற பண்புகளை புறக்கணிக்கிறார்கள்.
செவித்திறன் குறைபாடுள்ளவர்கள்:
சிலரால் ஓரளவு அல்லது தேர்ந்தெடுக்கப்பட்ட முறையில் கேட்க முடியும். அவர்களால் சில அதிர்வெண்களைக் கேட்க முடியும் மற்றும் குறிப்பிட்ட வரம்புகளைக் கேட்க முடியவில்லை. மனிதனின் சாதாரண கேட்கும் திறன் 20 முதல் 20000 ஹெர்ட்ஸ் ஆகும். குழந்தைகள் அதிக அதிர்வெண்களுக்கு உணர்திறன் கொண்டவர்கள் ஆனால் படிப்படியாக அந்த திறனை இழக்கிறார்கள். தேவன் தம் மக்களுக்கு அளிக்கும் வாக்குறுதிகள், ஆசீர்வாதங்கள் மற்றும் முன்னுரிமைகளை மட்டுமே சிலர் கேட்க முடிகின்றது. அவர்கள் மனந்திரும்புதலுக்கான அழைப்பையும், சிலுவையை எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதையும், பரிசுத்த வாழ்க்கை வாழ வேண்டும் என்பதையும் புறக்கணிக்கிறார்கள்.
வெறுமனே கேட்டல்:
சிலர் வார்த்தைகளை எப்படி உச்சரிக்க வேண்டும் அல்லது எப்படி சொல்ல வேண்டும் என அறிந்திருப்பார்கள், ஆனால் அர்த்தத்தை அறிவதில்லை. பலர் சுவரில் எழுதுவதை வார்த்தைகளாகப் படிக்க முடியும், ஆனால் தானியேல் மாத்திரமே அதன் அர்த்தத்தையோ அல்லது தாக்கங்களையோ புரிந்துகொள்ள முடிகின்றது (தானியேல் 5:5-12).
கேட்டல் மற்றும் புரிந்து கொள்ளுதல்:
வார்த்தைகளின் ஒத்திசைவையும், வாக்கியங்களின் பொருளையும் கேட்கக்கூடிய மற்றும் தொடர்புபடுத்தக்கூடியவர்கள் அறிவுள்ளவர்கள். வேதாகமத்தைப் பற்றிய சிறந்த அறிவைக் கொண்ட இறையியலாளர்கள் உட்பட பலர் உள்ளனர். ஒரு தமிழ் பழமொழி உண்டு; ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது. அதே போல, புத்தக அறிவும் பயன்படாது
கேட்டல் மற்றும் கீழ்ப்படிதல்:
இருப்பினும், அறிவு போதுமானதாக இல்லை. கீழ்ப்படிதல் என்பது சத்தியத்தை ஏற்றுக் கொள்ளல் மற்றும் அறிவை ஒத்துக் கொள்ளலும் உண்மையான விளைவு ஆகும், இதை ஞானம் என்று அழைக்கலாம். கட்டுபவர்களின் உவமையில் விளக்கப்பட்டுள்ளபடி, கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் வார்த்தையைக் கேட்டு அதன்படி வாழ்பவர்கள் புத்திமான்கள் (மத்தேயு 7:24-27).
எனக்கு உணர்திறன் உள்ள மற்றும் ஆவிக்குரிய காது உள்ளதா?
Author: Rev. Dr. J .N. மனோகரன்