தொடர் - 4
ஒரு நாள் திடீரென டேவிட் மாமா வந்தார் “என்ன தனராஜ் படகே கவிழ்ந்து போனது மாதிரி இப்படி இங்க வந்து அடைஞ்சு கிடந்தா எப்படி? பிள்ளைகள் படிப்பு என்னாவது?ஸ்கூலெல்லாம் திறக்கப் போறாங்களே?'”
“ஆமா. இதுக படிச்சு கலைக்டராகப் போகுதுக! அதான்பெயிலாயிட்டாளே விரக்தியாகப் பதிலளித்தார்.
“கவிதா பெயிலாயிட்டா எல்லாம் முடிஞ்சிருச்சா? அவ பெயிலானதுக்கு நீயும் காரணமில்லையா!
நானா! அதிர்ச்சியுடன் நிமிர்ந்தார் தனராஜ்.
ஆமா தனராஜ் அவளுக்கு அளவுக்கு மீறி செல்லம் கொடுத்து! சினிமா, டிரமா எல்லாத்துக்கும் பெர்மிஷன் கொடுத்த! பணம் தாராளமா அனுப்பின! கண்டிப்பு இல்லை! தனராஜ்! பிள்ளைகளைகண்டிச்சு வளர்க்கலைன்னா தரங்கெட்டுத்தான் போவாங்க, அதானாலதான் பிரம்பைக் கையாடாதவன் தன் மகனைப் பகைக்கிறான். அவன் மேல் அன்பாயிருக்கிறவனோ அவனை ஏற்கனவே தண்டிக்கிறான் என்று சாலமோன் ஞானி கூறியிருக்கிறார். சரி நடந்ததை மற நடப்பதை நினை! இப்ப இந்த விட்டைக்காலி பண்ணிட்டு பேசாம கடம்பவனம் வா. ஒரு சின்ன வீடு, நான் குடியிருக்கும் தெருவில் இருக்கு. அதை சொல்லி வைச்சிட்டுத்தான் வந்திருக்கேன் உன் வீட்டை பக்கத்து வீட்டுக்காரர் விலைக்குக் கேட்கிறார்ன்னு கேள்விப்பட்டேன் ரூ 8000க்கு கேட்கிறார் கூட ரூ2000 கேட்போம் என் கடையிலேயே ரூ20,000/-த்த முதலீடு செய் இருவரும் சேர்ந்து நடத்துவோம் இரண்டு மூன்று வருஷம் பொருள் சேர்ந்ததும், நீ தனியாவேனா கடை வச்சுக்க என்ன சொல்ற?”
துரைராஜாவால் நம்பமுடியவில்லை தான் லாட்டரி சீட்டாக வாங்கும் போது தன்னைக் கண்டித்தார் என்பதற்காக அவரோடு சண்டை போட்டுவிட்டுபேசாமல் இருந்தோமே, தன் ஏழ்மை கண்டு தன் நண்பர்கள் எல்லாம் விலகிய போதும் இவர் தன்னைத் தேடி வந்து வாழ வழி காட்டுகிறாரே, இதுதான் இவர் மனிதனா அல்லது... அதற்குமேல் தனராஜால் நினைக்க முடியவில்லை கண்கள் கலங்கின.
“டேவிட் கரங்களை இருகப் பற்றினார்”
“ஒரு நிபந்தனை !'' டேவிட் தனராஜைப் பார்த்தார்.
என்ன, என்பது போல் தனராஜாவும் நிமிர்ந்து பார்த்தார்.
"லாட்டரி சீட்டு ஒன்று கூட வாங்கக் கூடாது?".
டேவிட்! இப்படி. ஒரு பாடம் படிச்ச பின்னால் அந்த திசைப்பக்கம் தலை வைத்துக் கூட படுக்கமாட்டேப்பா! உறுதியாகக் கூறினார்.
காரியங்கள் துரிதமாக நடந்தேறின மீண்டும் கடம்பவனத்தில் தனராஜ் குடும்பம். குடியேறியது ஆசிரியப் பயிற்சி முடித்திருந்த டேவிட்டின் மகள் ஜாய்ஸியும் கவிதாவும் நெருங்கியதோழியர் ஆயினர். ஜாய்ஸியுடன் சேர்ந்து பல நற்செய்திக் கூட்டங்களுக்குச் சென்றாள் கவிதா! கடவுளின் ஜீவனுள்ள வார்த்தைகள் கவிதாவின் இதயத்தைப் பிளந்தன. தன்னை முற்றிலுமாக தேவனுக்கு அற்பணித்தாள் “கவிதாவின் ஆவிக்குரிய வளர்ச்சிக்கு சரியான வழிகாட்டியானாள் ஜாய்ஸி. கவிதாவை விட்டு கதைப்புத்தகங்கள், சினிமா, வீண் அரட்டை, வீண் அலங்காரங்கள் அனைத்தும் படிப்படியாகவிலகின..
காலம் வேகமாக உருண்டோடியது, தட்டெழுத்து சுருக்கெழுத்து அனைத்திலும் முதல்தரமாகத் தேறினாள் கவிதா ஜாய்ஸிக்கு ஆசிரியை வேலை கிடைத்தது. ஆனால் கவிதாவிற்கு வேலை கிடைக்கவில்லை நேர்முகத் தேர்விற்குச் சென்று சென்று அலுத்துப்போய் விட்டாள். டேவிட் - தனராஜ் கூட்டு வியாபாரம் நன்முறையில் நடைபெற்றது. லாபம் வர, வர தனராஜின் மனம் ஆசையில் மூழ்கியது தரமான சரக்கு நியாமானலாபம் என்ற பாதையில் டேவிட் நடந்தர். தனராஜோ லாபம் பெருக வழிவகை தேடினார். கடையில் பணியாற்றும் சிப்பந்திகளை தம் பிள்ளைகளைப் போல் நேசித்து, அவர்கள் கஷ்ட நேரத்தில் உதவுவது அந்தத் தொகையை அவர்களுடைய சம்பளத்தில் பிடிக்காமல் விடும் டேவிட்டின் போக்கு தனராஜ்க்கு பிடிக்கவில்லை.
கலப்படம் நாம் செய்ய வேண்டாம் மற்றவர்கள் செய்வதை வாங்கி விற்றால் அதிக லாபம் கிடைக்குமே மற்றவர்கள் செய்யாததையா நாம் செய்கிறோம்”'. என டேவிட்டுடன் வாதாடத் தொடங்கினார்.
““அநியாயத்தின் திரவியங்கள் ஒன்றுக்கும் உதவாது?” என்னும் அநியாய வட்டியினாலும், ஆதாயத்தினாலும் தன் ஆஸ்தியைப் பெருகப் பண்ணுகிறவன் தரித்திரன் பேரில்: இரங்குகிறவனுக்காக அதைச் சேகரிக்கிறான் என்னும் சாலமொன் ஞானி கூறுகிறாரப்பா! நியாயமாக வாழ்ந்தால் போதும்! என்றெல்லாம் உண்மைக் கிறிஸ்தவரான டேவிட் அறிவுரை கூறிப் பார்த்தார் “நண்டு கொழுத்தால் வளையிலிருக்காது என்பார்களே அதுபோல் தனராஜ்க்கு டேவிட்டுடன் இணைந்திருக்க விருப்பமில்லை.
டேவிட்டைவாயாரப் புகழ்ந்தார். ஒரு காலத்தில் இப்பொழுது தன் அதிஷ்டவாழ்வுக்கு முட்டுக்கட்டையாக இருக்கிறார். என வசைமாரிப் பொழிந்தார். அதனால் தான் வேதமும் “நாவை நெருப்பு என்றும் நாசியில் சுவாசமுள்ள மனிதனை நம்புவதைப் பார்க்கிலும் கர்த்தர் பேரில் பற்றுதாலயிருப்பதே நலம்” என்றும் வேதம் கூறுகிறது. ஒரு நாள் டேவிட்! நாம் என்றும் நண்பர்களாகவே இருக்க வேடுண்ம் என நினைக்கிறேன் நமக்குள் மனஸ்தாபம் வருவதற்கு முன் நாம் பிரிந்து வியாபாரம் செய்வோம் நீயும் ஆரம்பத்தில் சிலவருடங்களில் பிரிந்துகொள்வோம் என்று கூறினாயல்லவா அதன்படி செய்வோம்”? என தன் எண்ணத்தை வெளியிட்டார்.
டேவிட் தடை ஒன்றும் சொல்லவில்லை. சொன்னால் கேட்கக்கூடிய நிலையில் தனராஜ் இல்லை. விளைவு இருவரும் பிரிந்தனர் மிக ஆடம்பரமாகக்கடை வைத்தார். தனராஜ் விளம்பரங்கள் சக்க போடு போட்டன. கண்டோர் வியக்கும் வகையில் வியாபாரம் வெற்றி நடைபோட்டது, தனராஜின் போக்கு கவிதாவிற்கு கொஞ்சமும் பிடிக்கவில்லை.
இன்று ஒரு இன்டர்வியூவிற்குப் போக வேண்டும். புறப்பட்டுக் கொண்டிருந்த கவிதாவை தந்தையின் கர்ணகடூர சொற்கள். ஒரு கணம் ஸ்தம்பிக்க வைத்தது. இந்த பார் கவிதா! இந்தக் காலத்தில் லஞ்சம் கொடுக்காமல் வேலை வாங்க முடியாது அது பாவம் இது பாவம் என்று பார்த்தால் இந்த உலகிலேயே வாழமுடியாது. உன்னை ஜாய்ஸியோடு பழகவிட்டது பெரிய தப்பாகப்போய்விட்டது. உனக்கு வேலை பார்க்க இஷ்டம் என்றால் சொல் லஞ்சம் கொடுக்க ஏற்பாடு செய்யறேன். வேலை கிடைக்கும் இல்லையென்றால் இண்டர் வியூவிக்கே போக வேண்டாம் உன் தங்கையும், தம்பியும் காலேஜ் படிக்கும்போது நீ வேலை பார்த்து சம்பாதித்து தரலைன்னாலும் வீண் செலவு வைக்காமலாவது இரு” பொரிந்து தள்ளினார்.
கவிதாவிற்கு என்ன பதில் கூறுவதென்றே தெரியவில்லை
“என்ன சொல்ற இண்டர்வியூக்கு போகலையா” மீண்டும் உறுமினார்.
தன் மீது பாசத்தைப் பொழிந்து வளர்த்த தந்தையா இவர்? கேட்டவுடன் எதையும் வாங்கித் தரும் அன்புத் தந்தையா இவர்? என்றெண்ணிய கவிதாவின் மனம் மிகவும் புண்பட்டது எல்லா அன்புமே மாயைதானோ?
ஒருவாறு தைரியத்தை வரவழைத்துக் கொண்டவள் மனதில் ஜெபித்தபின், அப்பா! இந்த ஒரு இண்டர்வியூக்கு மாத்திரம் அனுமதி கொடுங்க நிச்சயமா உங்க இலஞ்சம் இல்லாமலேயே எனக்கு வேலைகிடைக்க என் பரம தகப்பன் கிருபை செய்வார். அப்பொழுதாவது லஞ்சமில்லாமல் வேலை கிடைக்கும் என்பதையும் கர்த்தர் தம்மை நம்பியவர்களை கைவிட மாட்டார் என்பதையும் புரிந்து கொள்வீர்கள் இந்த ஒரு தடவை மாத்திரம் பெர்மிஷன் கொடுங்கப்பா உறுதியான குரலில் பேசினாள்.
நீ ரொம்ப பேசப்படிச்சிட்டே சரி போய்த் தொலை! இதந்த ஒரு தடவைதான் அந்த இடத்தை விட்டு அகன்றார் தனராஜ்.
“கேளுங்கள் அப்பொழுது உங்கள் சந்தோஷம் நிறைவாயிருக்கும்படி பெற்றுக்கொள்வீர்கள் என்று சொன்ன எம்பெருமான் வாக்கு மாறாதவர் என்பதையுணர்ந்தவள் அல்லவா கவிதா.
இயேசப்பா! நீ எனக்குக் கொடுத்த வேலைக்கு
ஸ்தோத்திரமப்பா! என்று தனக்குவேலை கிடைத்ததாகவே கருதி ஸ்தோத்திரம் சொல்லிக்கொண்டே நடந்தாள்!
ராம் அன் கோ கம்பெனியின் வெளியே அநேகர் காத்துக்கொண்டிருப்பது தெரிந்தது உள்ளே நுழைந்தான். உள்ளே பலர் பலவிதமாக இருந்தனர்! இண்டர்வியூ என்ற படையெடுப்பில் அனுபவசாலிகள் இங்கேயாவது கிடைக்காதா? என்ற ஏக்கப்பெருமூச்சுடனும் புதியவர் இண்டர்வியூ எப்படி இருக்குமோ? என்ற பயத்துடன் காத்திருந்தனர்! "டாண்”' டாண்:' என்று மணி 10 அடித்தது? இண்டர்வியூ ஆரம்பமானது. கவிதாவின் முறை வந்தது, “ஸ்தோத்திரம் என மனதில் கூறியபடி, மேனேஜர் அறையினுள் நுழைந்தாள். வணக்கம், எனக் கூறியவளின் பார்வை மேஜைக்குக் கீழே கிடந்த ஒரு வெள்ளைக் கவரில் விழுந்தது. குனிந்து எடுத்தவள் வெயிட்டை அதின் மேல் வைத்தாள், அவளுடைய சான்றிதழ்களைப் பார்வையிட்ட மேனேஜர், உனக்கு ஒரு ஆர்டர் அடி பார்ப்போம்” என்றார். குட்டெழுத்து மிஷின் அருகே சென்றாள் (ஜெபித்தாள் பேப்பரை சொருகினாள். விரல்கள் கீ போர்டில் (Key Board) நடனமாடின.
இதன் தொடர்ச்சி முகையவிழ்ந்த முல்லை! என்ற தலைப்பில் உள்ளது.
இந்தக் கதை மாயாபுரிச் சந்தையிலே என்ற புத்தகத்திலிருந்து Sis. Vanaja Paulraj அவர்களின் அனுமதியுடன் போடப்பட்டுள்ளது.