இடையூறுகளை எவ்வாறு கையாள்வது? பல முறை, சில இடையூறுகள் எரிச்சலூட்டுவதாகவும், வெறுப்பானதாகவும் மற்றும் விரக்தியை ஏற்படுத்துவதாகவும் இருக்கிறது. ஒரு குறிப்பிட்ட வரையறுக்கப்பட்ட உணர்வின் வலிமை மற்றும் முந்தைய ஆதாரங்களைக் கொண்டு, நாம் சில இடையூறுகளை எதிர்கொண்டாலும் அனைத்து வகையான இடைஞ்சல்களையும் கையாள முடிவதில்லை, மேற்கொள்ளவும் முடிவதில்லை. இருப்பினும், நமக்கு அருளப்பட்டிருக்கிற பரிசுத்த ஆவியினாலே ஏற்படுத்தப்பட்டிருக்கிற தேவஅன்பினால் எல்லாவற்றையும் நம்மால் மேற்கொள்ள முடிகின்றது (ரோமர் 5: 5). இப்படியாக நமக்கு ஊக்கமளிக்கும் உதாரணங்கள் வேதாகமத்தில் உள்ளன
யவீருவின் மகள் மரண அவஸ்தையின் வியாதியோடு போராடிக் கொண்டிருந்தாள், அவளை குணப்படுத்த இயேசு அவளின் வீட்டிற்கு அவசரமாக நெருக்கமான கூட்டத்தைத் தாண்டி செல்ல வேண்டியிருந்தது, ஆனால் அது மிக கடினமாக இருந்தது. அப்போது அவரைச் சுற்றி நிறைய பேர் இருப்பினும், கூட்டத்திற்குள்ளாக அவரது வல்லமை தன்னை விட்டு கடந்து செல்வதை உணர்ந்தார். உடனடியாக இயேசு அங்கே நின்று அதை கண்டறிய நினைத்தார். அப்போது பேதுரு கோபமடைந்தான், இக்கூட்டத்தில் அனைவரும் கர்த்தராகிய இயேசுவின் மீது விழுந்து நெருக்கும்போது அவரை தொட்டவரை எப்படி கண்டறிவது என்ற கோபம் பேதுருவுக்கு ஏற்பட்டது. ஆனால் அங்கு ஒரு பெண் இயேசுவின் ஆடையின் முனையைத் தொட்டு குணமடைந்தாள். பின்னர் அவள் முன் வந்து அவளுடைய விசுவாசத்தையும் அவளின் சாட்சியையும் பகிர்ந்துக்கொண்டாள், அவசரப் பணிகளுக்கு மத்தியில், பன்னிரண்டு வருட நோயால் பாதிக்கப்பட்ட பெண் குணமடைந்துவிட்டாள், இயேசு இரக்கத்துடன் அவ்வளவு இக்கட்டின் மத்தியிலும் அப்பெண் சுகமடைவதை விரும்பினார், பின்னர் இறந்த அந்த பன்னிரண்டு வயது சிறுமியான யவீருவின் மகளையும் உயிருடன் எழுப்பினார் (லூக்கா 8: 40-56).
கர்த்தராகிய இயேசுவுக்கும் அவருடைய சீஷர்களுக்கும் சாப்பிட கூட நேரம் இல்லை. அவர்கள் ஓய்வெடுக்கவோ அல்லது உணவுக்காகவோ சிறிது நேரம் ஓய்வெடுக்க ஓரிடத்தில் அமர்ந்தாலும் , ஒரு பெரிய மக்கள் கூட்டம் கூடிவிடும். அதுபோலவே மேய்ப்பன் இல்லாத ஆடுகளை இயேசு கண்டு விட்டாலும் உடனே இரக்கத்துடன் அக்கூட்டத்தைக் கூட்டி பிரசிங்கிக்க ஆரம்பித்திடுவார் (மாற்கு 6: 31-34).
மற்றொரு சம்பவமாக நல்ல சமாரியன் ஒரு முக்கியமான வேலையாக சென்று கொண்டிருந்தான். அந்நேரம் சாலையில் ஒரு மனிதன் கிட்டத்தட்ட இறந்து போகும் தருவாயில் இருப்பதைக் காண்கிறான். அது நான்கு வழி சாலை அல்ல, ஒரு நபர் மட்டுமே செல்லக்கூடிய குறுகிய பாதை. நல்ல சமாரியனுக்கு ஒரு மனதுருக்கம் இருந்தது. இரக்கம் நினைறந்தவனாய் அடிப்பட்டவனின் காயங்களை சுத்தம் செய்து அவன் காயங்களில் கட்டுகளைப் போட்டு அருகில் இருக்கும் மருத்துவமனையில் சேர்த்தான் (லூக்கா 10:33).
இடையூறுகளின் மத்தியிலும், காயமடைந்தவனுக்கு இரக்கமும், நற்போதனையும் மற்றும் கவனிப்பும் கிடைக்கப் பெற்றது
எனக்கேற்படும் இடையூறுகளின் மத்தியிலும் இரக்கத்துடன் செயல்படும் பரிசுத்த ஆவியின் அருள் எனக்கு உள்ளதா? என சிந்திப்போம்.
Author: Rev. Dr. J .N. மனோகரன்