தேவ அன்பிற்கு தாழ்மையான பதில்

என் எதிரிகளையும் சேர்த்து நேசிக்கும் கடவுள் எனக்கு வேண்டாம்; என்னை மட்டுமே நேசிக்கும் ஒரு பிரத்தியேகமான கடவுள் தான் வேண்டும் என்பதாக ஒருவர் கூறினார். இப்படிதான் யூதர்கள் கூட தேவன் யூதர்கள் அல்லாதவர்களையோ அல்லது புறஜாதிகளையோ நேசிக்கக் கூடாது என்று நினைத்தார்கள். ஆனால் உலகம் முழுவதையும், அனைத்து மனிதகுலத்தையும் தேவன் நேசிக்கிறார் என்று வேதாகமம் போதிக்கிறது, அவர் தனது குமாரனாகிய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை மனிதகுலத்தை மீட்க அனுப்பினார் (யோவான் 3:16).  

உயர்வான மனப்பான்மை: 
சிலர் பெரிய அற்புதமானவர்கள் அல்லது புத்திசாலிகள் என்பதால் தேவன் அவர்களை மிகவும் நேசிக்கிறார் என்று கருதுகின்றனர். அதுபோல தாங்கள் உயர்ந்த சாதியைச் சேர்ந்தவர்கள் அதனால் தேவன் தங்களை நேசிக்கிறார்; எனவே அனைத்து சலுகைகளும் தங்களுக்கு சொந்தமானது என்று கூட கருதுகின்றனர். பணக்காரராக இருப்பவர்கள் தாங்கள் ஆசீர்வாதமானவர்கள்; ஏனெனில் தேவன் தங்களை நேசிக்கிறார் மற்றும் ஆடம்பரமான வாழ்வைத் தந்துள்ளார்  என்று நினைக்கிறார்கள்.   மற்றவர்களை ஆசீர்வதிக்க அவர்கள் தங்கள் ஆசீர்வாதங்களைப் பயன்படுத்துவதில்லை.   பரிசேயர்களும் தங்கள் ஜெபத்தில் அப்படிப்பட்ட மனநிலையைக் கொண்டிருந்தனர் (லூக்கா 18:9-14). அவர்கள் மற்றவர்களைக் கண்டனம் செய்யும் பழக்கத்தைக் கொண்டிருந்தனர், அவர்கள் தங்களின் உபவாசத்தையும் தசமபாகத்தையும் பெருமையாக எண்ணுவதுண்டு; அதனால் தான் தேவன் தங்களை அதிகம் நேசிப்பதாக நினைக்கிறார்கள். 
பரிசேயன் இப்படிதான் தன்னை நியாயப்படுத்தினான்; பின்பதாக நிராகரிக்கப்பட்டான். 

தாழ்வு மனப்பான்மை:  
தேவன் தங்களைப் போன்ற ஒரு பாவியை நேசிக்க முடியுமா என்று பலர் சந்தேகிக்கிறார்கள் மற்றும் ஆச்சரியப்படுகிறார்கள்.  அவர்களாலேயே தங்களை நேசிக்க முடியவில்லையே, ஆனால் தேவன் அவர்களை நேசிக்கிறார் என்பது அவர்களுக்கு ஆச்சரியமான உண்மை.  உவமையில் உள்ள சாமானியனோ அல்லது பாவியோ தொலைவில் நின்று, மார்பில் அடித்து, இரக்கத்திற்காக மன்றாடினான்.  தேவனின் அன்பையும், இரக்கத்தையும், கிருபையையும் பெறுவதற்காகத் தங்களைத் தாங்களே சித்திரவதை செய்யும் உச்சகட்டத்திற்குச் செல்லும் சிலர் உண்டு. 

குற்ற மனப்பான்மை:
துரதிர்ஷ்டவசமாக, தேவன் தங்களை நேசிக்கிறார் என்றும் அவர்கள் ஒரு பொல்லாத வாழ்க்கையை நடத்தலாம் என்றும் கருதும் சில மோசமானவர்கள் உள்ளனர்.   "கடவுள் இவை அனைத்தையும் தான் அனுபவிப்பதற்காகத் தந்திருக்கிறார்" என்று அவர்கள் கூறுகிறார்கள்.   அவர்களின் இன்பம் மற்றவர்களின் அடக்குமுறை மற்றும் சுரண்டலுக்கும் காரணமாகிறது.   வரலாற்றில் கொடுங்கோலர்களும் சர்வாதிகாரிகளும் அட்டூழியங்களை உள்ளடக்கிய தங்கள் ஆட்சிக்கு ஒரு தெய்வீக ஆணையைக் கோரியுள்ளனர். 

அறிந்து நம்புதல்: 
தேவனையும், அவருடைய அன்பையும் அறிந்து, மனத்தாழ்மையுடனும் நன்றியுடனும் அனுபவிப்பதே பொருத்தமான பதிலாக இருக்க முடியும். தேவ அன்பு பாவங்களிலிருந்து மனந்திரும்புதலுக்கு அழைக்கிறது மற்றும் தேவனை விசுவாசிப்பதால் மன்னிப்பு பெறப்படுகிறது.  தேவ அன்பின் உயரம், ஆழம், அகலம், நீளம் ஆகியவற்றை அறிந்துகொள்ளும்படி விசுவாசிகளுக்கு பவுல் சவால் விடுகிறார் (எபேசியர் 3:18).

தேவனின் அன்பை நான் எப்படி அனுபவிக்கிறேன்? 

 Author: Rev. Dr. J .N. மனோகரன்



Topics: Daily Devotions bible study Rev. Dr. J .N. மனோகரன்

tamil bible, tamil Bible search,tamil bible online , tamil bible download, tamil bible study, tamil bible free download