உலகம் முழுவதும் 'சத்தமிடும் பெண் குழுக்கள்' (Scream Groups) உருவாகின்றன, பெண்கள் பூங்காக்கள் மற்றும் பொது இடங்களில் கூடி தங்கள் ஏமாற்றங்களை அதிக சத்தமிட்டு வெளியேற்றுகிறார்கள். பெண்கள் எல்லாம் இணைந்து தங்களின் கோபம், விரக்தி, ஏமாற்றம் மற்றும் மன அழுத்தம் என எல்லா கோபதாபங்களையும் வெளியேற்றும் ஒரு வடிகாலாக இந்த சத்தமிடும் அல்லது 'அலறும் கருத்து' உலகம் முழுவதும் வளர்ந்துள்ளது. பெண்கள் தங்கள் கோபத்தை தடையின்றி கத்துவதினால் கட்டவிழ்த்து விடுகிறார்கள். விரக்தி, ஏமாற்றம் மற்றும் மன அழுத்தம் ஆகியவை பெண்கள் பங்கேற்க பொதுவான காரணங்கள். இது ஆஸ்திரேலியாவின் சிட்னியில் தொடங்கியது மற்றும் உலகின் பல பகுதிகளில் பரவி வருகிறது. ஆண்களுக்குக் கத்தவோ அல்லது குரல் எழுப்பவோ இடங்கள் உள்ளன, ஆனால் பெண்களுக்கு இல்லை என்று ஏற்பாட்டாளர்கள் கூறுகின்றனர். எனவே, அவர்கள் தங்கள் ஆத்திரத்தையும், கோபத்தையும், புலம்பலையும் வெளிப்படுத்த இது ஒரு இடம். இது ஒரு வகையான சிகிச்சையாக மற்றும் தன்னை தானே அக்கறை கொள்ளுதல் போன்றும் காணப்படுகிறது (சமந்தா லாக், தி கார்டியன், நவம்பர் 19, 2022). ஆனால் வேதாகமம்; “அவர் உங்களை விசாரிக்கிறவரானபடியால், உங்கள் கவலைகளையெல்லாம் அவர்மேல் வைத்துவிடுங்கள்" (1 பேதுரு 5:7); "கர்த்தர்மேல் உன் பாரத்தை வைத்துவிடு, அவர் உன்னை ஆதரிப்பார்; நீதிமானை ஒருபோதும் தள்ளாடவொட்டார்" (சங்கீதம் 55:22) என்று கூறுகிறது.
சுமைகள்:
உங்கள் பிரச்சனைகளை அவரது தோள்களில் குவியுங்கள் என்பதாக ஒரு மொழிபெயர்ப்பு கூறுகிறது. தேவன் சுமைகளை அனுமதிக்கிறார், சில சமயங்களில் சீஷர்களின் வாழ்க்கையில் சுமைகள் மிகவும் கனமானதாக இருக்கும். ஆனால் அவர்கள் எப்படி நடந்து கொள்கிறார்கள் என்பதை கர்த்தர் கவனிக்கிறார்.
மாற்றம்:
சுமைகள், கவலைகள், துன்பங்கள், தோல்விகள், மன அழுத்தம் என சுமைகளை மாற்றுவது அல்லது இறக்குவது ஒரு ஆவிக்குரிய செயல். இது மனத்தாழ்மையுடனும், நம்பிக்கையுடனும், தேவனை அழைப்பதோடும் செய்யப்படுகிறது. ஆனால் பிரச்சனையை தீர்க்க முடியாத இயலாமையை ஒப்புக்கொண்டு, வேறு வழி தெரியாமல், தேவனை முழுமையாக நம்பி அவர் சமூகத்தில் செல்வதாகும்.
நன்றி:
சுமையை அல்லது பாரத்தை இறக்கி வைப்பது என்பது நன்றியுடன் இருக்க வேண்டும் என்று பவுல் கூறுகிறார். "நீங்கள் ஒன்றுக்குங்கவலைப்படாமல், எல்லாவற்றையுங்குறித்து உங்கள் விண்ணப்பங்களை ஸ்தோத்திரத்தோடே கூடிய ஜெபத்தினாலும் வேண்டுதலினாலும் தேவனுக்குத் தெரியப்படுத்துங்கள்" (பிலிப்பியர் 4:6). இது கர்த்தர் சிறந்ததைச் செய்வார் என்ற எதிர்பார்ப்பில் முன்னோக்கி நகரும் நன்றியுணர்வாகும்.
தாக்குபிடித்தல்:
பேதுரு தாவீதின் வார்த்தைகளை மேற்கோள் காட்டி, அந்த கவலையான சூழலில் கர்த்தர் தாங்குவார் என்று கூறுகிறார். அந்த சூழ்நிலையை தாங்கிக் கொள்வது என்பது பாதுகாப்பாகவும், மன அமைதியுடனும் வைத்திருப்பதாகும். இதற்கு மற்றொரு அர்த்தம் நிலைமை மோசமடைவதை அனுமதிக்கக்கூடாது என்பதாகும்.
சமாதானம்:
புரிந்து கொள்ள முடியாத சமாதானம் இதயங்களிலும் மனங்களிலும் ஆட்சி செய்யும் அல்லது நிலைத்திருக்கும் என்று பவுல் மேலும் கூறுகிறார்.
தாழ்த்த வேண்டாம்:
ஆண்டவர் கைவிடமாட்டார், நீதிமான்களை உயர்த்துவார். கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தால் சுத்திகரிக்கப்படுபவர்கள் தேவனுக்கு முன்பாக நீதிமான்கள் என்றே அழைக்கப்படுகிறார்கள். அப்படிப்பட்டவர்கள் கர்த்தரை நேசிக்கிறார்கள், அப்படி தேவனிடத்தில் அன்பு கூருகிறவர்களுக்கு எல்லாமே நன்மைக்கு ஏதுவாக அவர் எல்லாவற்றையும் ஏற்பாடு செய்வார்.
நம்பிக்கையற்ற அலறல்:
கதறும் அல்லது அலறும் சகோதரிகள் தேவனுடன் உறவு கொள்ளவில்லை, துரதிர்ஷ்டவசமாக அவர்களின் அலறல் மாற்றத்தை கொண்டு வர முடியாது, தற்காலிக நிவாரணம் மட்டுமே. ஆனால், நீதிமான்களின் முணுமுணுப்பு கூட, அவர்களின் கூக்குரலிடுதல் மற்றும் உச்சரிக்கப்படாத வார்த்தைகள் கூட சர்வவல்லமையுள்ள தேவனின் சமூகத்தில் மனுக்களே.
என் ஜெபங்கள் கேட்கப்படும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறதா?
Author: Rev. Dr. J .N. மனோகரன்