சமூக சேவகரும், அரசியல்வாதியுமான ஒருவர், இந்தியாவில் கிறிஸ்தவ நம்பிக்கையானது அதன் நடைமுறையில் சாதி அமைப்பின் படிநிலைக்கு இடமளிப்பதால் வளைந்து தரும் கிறிஸ்தவமாக மாறியுள்ளது என கருத்து தெரிவித்தார். (தி இந்து, 6 ஜனவரி 2024) துரதிர்ஷ்டவசமாக, நல்ல காரணங்களுக்காக அந்தியோகியாவில் ‘கிறிஸ்தவர்கள்’ என்று அழைக்கப்பட்ட சீஷர்களைப் போல இல்லை. (அப்போஸ்தலர் 11:26) வேறு வார்த்தைகளில் கூறுவதானால், இந்தியாவில் உள்ள நவீனகால கிறிஸ்தவர்கள், கிறிஸ்தவ விழுமியங்களை சமரசம் செய்திருக்கிறார்கள் அல்லது கிறிஸ்தவமில்லாத விழுமியங்களால் கெட்டுப்போயுள்ளனர்.
சிருஷ்டிப்பு: ஒரு ஆணோ/பெண்னோ தான் குறிப்பிட்ட சாதியில் பிறந்ததைக் கொண்டாடும் போது அல்லது பெருமிதம் கொள்ளும் போது, வேதாகமம் சிருஷ்டிப்பைப் பற்றிக் கூறுவதை நிராகரிக்கிறார்கள். ஆதாமும் ஏவாளும் முதல் மனித ஜோடி, அவர்கள் தேவனின் சாயலில் படைக்கப்பட்டவர்கள், எல்லா மனிதர்களும் அப்படித்தான். தேவன் ஒரு குழந்தையை அவனது/அவளது தாயின் வயிற்றிலே காப்பாற்றுகிறார் (உருவாக்குகிறார்). (சங்கீதம் 139: 13-14)
சமத்துவம்: எல்லா மனிதர்களும் ஆதாம் மற்றும் ஏவாளின் சந்ததியினர் என்பதால், தேவனின் பார்வையில் அனைவரும் சமம். இனவாதம், சாதிவெறி, வர்க்கப் படிநிலை, மொழியியல் பேரினவாதம் மற்றும் பிற பாகுபாடுகளுக்கு இடமில்லை. யூதனென்றும் கிரேக்கனென்றுமில்லை, அடிமையென்றும் சுயாதீனனென்றுமில்லை, ஆணென்றும் பெண்ணென்றுமில்லை; நீங்களெல்லாரும் கிறிஸ்து இயேசுவுக்குள் ஒன்றாயிருக்கிறீர்கள். (கலாத்தியர் 3:28)
வெளிச்சத்தில் நடப்பது: கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் விசுவாசிகள் ஆவிக்குரிய வெளிச்சத்தில் நடக்கிறார்கள் மற்றும் ஒருவருக்கொருவர் ஐக்கியத்தில் இருக்கிறார்கள். சீஷர்களின் பின்னணி, பொருளாதார நிலை, தேசியம் எதுவாக இருந்தாலும் அனைவரும் ஒன்றுதான். (I யோவான் 1:7) கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தால் அனைவரும் கழுவப்பட்டதால் இது சாத்தியம். சீஷர்கள் இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தினால் விலைக்கு வாங்கப்பட்டுள்ளனர் எனவே உலகின் கொள்கைகள், சடங்குகள், பழக்கவழக்கங்கள், மூடநம்பிக்கைகள் மற்றும் கலாச்சார மரபுகளின் அடிமைகளாக மாறக்கூடாது. (I கொரிந்தியர் 7:23)
சுதந்திரம்: அப்போஸ்தலன் பேதுரு உட்பட பல ஆரம்பகால யூத கிறிஸ்தவர்கள் யூத கலாச்சார மரபுகளின் அடிமைத்தனத்தில் இருந்தனர். யூதர் அல்லாத, ஒரு ரோமானிய குடிமகனான கொர்னேலியுவின் வீட்டிற்குச் செல்ல கர்த்தர் பேதுருவைத் தூண்ட வேண்டியிருந்தது. (அப்போஸ்தலர் 10, 11 அதிகாரங்கள்) தேவதூதன் ஒரு புறஜாதியான கொர்னேலியுவின் வீட்டிற்குச் செல்ல முடியுமானால், அவனும் செல்ல முடியும் என்பதை பேதுரு புரிந்து கொள்ள வேண்டியிருந்தது. ஆனாலும், பின்னர் பேதுரு பழைய பழக்கங்களுக்குச் சென்று, இளைய அப்போஸ்தலரான பவுலால் பகிரங்கமாக கண்டிக்கப்பட்டார். (கலாத்தியர் 2:11-14) இந்தியர்கள் உட்பட பல நவீன கிறிஸ்தவர்கள் கலாத்தியாவில் இருந்த விசுவாசிகளைப் போல முட்டாள்களாகிவிட்டனர். (கலாத்தியர் 3:1)
நான் சாதி எனும் வைரஸால் பாதிக்கப்பட்டிருக்கிறேனா?
Author: Rev. Dr. J .N. மனோகரன்