‘மதமாற்றம்’ தான் உலகம் எதிர்கொள்ளும் முதன்மையான பிரச்சனை என்றும், அதை போர்க்கால அடிப்படையில் எதிர்கொள்ள வேண்டும் என்றும் ஒரு எச்சரிக்கை உருவாக்கப்பட்டுள்ளது.
1. தெரிவில் மாற்றம்:
தேர்ந்தெடுக்கும் சுதந்திரத்தைப் பயன்படுத்த விரும்பும் சிலரால் இது ஒரு வகையான மாற்றமாகும். சில தனிநபர்கள் இந்த சுதந்திரத்தைப் பயன்படுத்தி அடக்குமுறைக்கு எதிராக தங்கள் உரிமைகளைப் பயன்படுத்த விரும்புகிறார்கள். தலித்துகளைப் போலவே, ‘மதமாற்றத்தை’ ‘அடக்குமுறைக்கு எதிரான கருவியாக’ பார்க்கிறார்கள்.
2. வற்புறுத்தலின் மூலம் மாற்றம்:
அச்சுறுத்தல், துன்புறுத்தல், வன்முறை மற்றும் அடக்குமுறையின் காரணமாக இந்த வகையான மதமாற்றம் நிகழ்கிறது. குரலற்ற அல்லது அதிகாரமற்ற ஒரு குழுவை இராணுவ வலிமை அல்லது ‘வாள் அல்லது துப்பாக்கி’ மூலம் அடிபணியச் செய்தல் ஆகும். வரலாற்றில், உலகில் பல இடங்களில் இது நடந்திருப்பதைக் காண்கிறோம்.
3. வசதிக்காக மாற்றம்:
இது பொதுவாக ஒரு தனிப்பட்ட சூழலில் நடக்கும். ஒரு பையன் அல்லது பெண் மற்றொரு மதத்தைப் பின்பற்றும் தனது காதலன் அல்லது காதலியை திருமணம் செய்து கொள்ள விரும்புகிறார் என்றால் திருமணம் மற்றும் குடும்ப வாழ்க்கைக்காக ஒரு நபர் மற்றொரு நபரை தனது மதத்திற்கு மாறுமாறு வற்புறுத்துகிறார்.
4. ஊழலால் மாற்றம்:
ஒரு நபர் சில மாய்மால வஞ்சக செயலுக்காக மதம் மாறுகிறார் என்ற குற்றச்சாட்டு உள்ளது; அதாவது உடைமை அல்லது செல்வம் அல்லது சொத்துக்கள் அல்லது உத்தரவாதமான மாத வருமானம் போன்றவையாகும். இருப்பினும், அது அரிதாகவே நடக்கலாம். ஒரு நபர் தனது மதம் மற்றும் அடையாளத்தை சிறிது பணத்திற்காக மாற்ற விரும்பினால், அந்த நபர் அதே பணத்திற்காக அதை மீண்டும் மாற்ற தயாராக இருப்பார். அத்தகைய நபரிடம் நேர்மை, நியாயம் அல்லது உண்மை இல்லை, மேலும் இது போன்ற நபர்களை நம்ப முடியாது. இதில் ஆச்சரியம் என்னவென்றால், இந்த குற்றச்சாட்டு மீண்டும் மீண்டும் வருகிறது, ஆனால் நீதிமன்றத்தில் இதுபோன்ற ஒரு மோசடிக்கு ஒரு தண்டனை கூட இல்லை.
5. உறுதியான நம்பிக்கையின் மூலம் மாற்றம்:
சத்தியத்தைத் தேடும் ஒரு நபர், அறிவுபூர்வமாக கர்த்தராகிய இயேசுவே அந்த சத்தியம் என்பதைக் கண்டுபிடிப்பார் அல்லது ஒரு நபருக்கு நோய் சுகமாகுதல் அல்லது மன அமைதி அல்லது அவரது வாழ்க்கையில் முன்னேற்றம் எனப் போன்ற அதிசயத்தை அனுபவிக்கும்போது, ஜெபங்களுக்கு பதிலளிக்கும் தேவனின் பண்பை அறிகிறார். மற்றொரு நபர் தரிசனம் பெற்று, கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவைப் பின்பற்றுபவராக மாறலாம். சீஷர்களை உருவாக்கும் கிறிஸ்தவ பணியானது, ஒரு நபர் தேவ ஆவியால் மாற்றம் ஏற்படும் போது நிகழ்கிறது.
நான், அவருடைய வார்த்தையினாலும் ஆவியினாலும் மாற்றமடைந்த ஒரு சீஷனா?
Author: Rev. Dr. J .N. மனோகரன்