ஒரு சிறுவன் பொம்மை வடிவிலான பலூனை ஊதி ஊதி பெரிதாக்க விரும்பினான். காற்றடைக்கும் பம்பைப் பயன்படுத்தி அதை ஊதினான். அவன் அதை ஊதிப் பெருக்கினான். பெரிதாக ஊத வேண்டாம் என்று எச்சரித்தாலும், அவன் அதையே செய்தான். இறுதியில் பலூன் வெடித்ததில் அவன் பயங்கரமாக காயப்பட்டான். பலர் சுயத்தை மேலோங்கி பிடித்துள்ளனர். அதிக காற்று செலுத்தப்படும்போது அது வெடிக்கிறது. பெருமை என்பது மக்களின் அகங்காரத்தை உயர்த்த சாத்தானின் ஒரு சிறந்த கருவியாகும், இது அவர்களை வீழ்ச்சிக்கு அழைத்துச் செல்கிறது (நீதிமொழிகள் 16:18-19). தாழ்மையுள்ளவர்களுக்கு தேவன் கிருபை அளிக்கிறார் (யாக்கோபு 4:6).
இனத்தின் பெருமை:
சிலர் தங்கள் குலம் அல்லது இனம் அல்லது சாதி அல்லது கோத்திரம் பற்றி ஒரு மேன்மையான எண்ணம் கொண்டிருக்கின்றனர். சரி தங்கள் குலம் அல்லது இனம் பற்றி மகிழ்ச்சி அடைவது ஒரு குற்றமல்ல; அதற்காக அவர்கள் மற்றவர்களை தாழ்ந்தவர்கள் அல்லது நாகரீகமற்றவர்கள் என பார்ப்பது அல்லது நடத்துவது தவறல்லவா, அது பெருமை மற்றும் அகந்தையும் மேலோங்கி நிற்க வழிவகுக்கும்.
கலாச்சாரத்தின் பெருமை:
பலர் தங்கள் கலாச்சாரம் தெய்வீகமானது, தவறில்லாதது மற்றும் உயர்ந்தது என்று நினைக்கிறார்கள். கலாச்சாரத்தின் மதிப்புகளில், தவறான காரியங்கள் இருந்தாலும் பாதுகாக்கப்பட்டு நிலைநிறுத்தப்படுகின்றன. சமூக தீமைகள், மூடநம்பிக்கைகள், கட்டுக்கதைகள் மற்றும் இதிகாசங்கள் கூட போற்றப்படுகின்றன. துரதிர்ஷ்டவசமாக, கிறிஸ்தவர்கள் கூட வேதாகம மதிப்புகளை விட கலாச்சார விழுமியங்களை உயர்த்துகிறார்கள்.
வெளித்தோற்றப் பெருமை:
பல்வேறு கலாச்சாரங்களில் அழகு வித்தியாசமாக உணரப்படுகிறது. துரதிர்ஷ்டவசமாக, கருமையான அல்லது மஞ்சள் நிற சருமத்தை விட வெள்ளையான சருமம் உயர்ந்ததாக கருதப்படுகிறது. தங்களை அழகாகக் கருதுபவர்கள் கூட, மற்றவர்களை மனிதர்களை விட குறைவானவர்கள் என்று கேலி செய்கிறார்கள்.
இடத்தின் பெருமை:
ஒரு குறிப்பிட்ட நாட்டின் குடிமகனாக இருப்பது சாதகமாக இருக்கும். பிறந்த இடம், படிக்கும் இடம் அல்லது வேலை செய்யும் இடம் (உலகளாவிய கார்ப்பரேட்டுகள்) போன்றவற்றில் பெருமைப்படுவர்கள் மற்றவர்களை இழிவுபடுத்தக் கூடாது. சில நகரங்கள் புனித நகரங்களாகக் கருதப்படுகின்றன, அங்கு வாழும் மக்களுக்கு பெருமை உண்டு.
கிருபையைக் குறித்த பெருமை:
ஆவிக்குரிய ஆசீர்வாதங்களைப் பற்றிய பெருமை மிகவும் ஆபத்தானது. மீண்டும் பிறந்தவர்கள், மற்றவர்களை குறைவாக மற்றும் தவறாக நடத்துகிறார்கள். அவர்களைப் பிசாசின் பிள்ளைகள் என்று முத்திரை குத்துவது அகந்தை, அது தேவனால் ஒருபோதும் அங்கீகரிக்கப்படாது. சிலர் தங்கள் ஆவிக்குரிய வரங்கள் மற்றும் ஊழிய சாதனைகளைப் பற்றி பெருமை பேசுகிறார்கள், இருப்பினும், பவுல் சிலுவையைப் பற்றி மட்டுமே பெருமை பேசுகிறார் (கலாத்தியர் 6:14). ஸ்தாபனத்தைப் பற்றி பெருமிதம் கொள்வது, தாங்கள் புதிய ஏற்பாட்டு சபை என்று சொல்வதும் பாவமே.
நான் தாழ்மையான ஜீவியத்தை நடத்துகிறேனா?
Author: Rev. Dr. J .N. மனோகரன்