பஞ்சாபில் ஒரு பழமொழி உள்ளது; குழந்தையை வளர்ப்பது என்பது ஒரு தங்கத்திலான செங்கலுக்கு சமம். என்னவென்றால் குழந்தையை வளர்ப்பதற்கு பொருட்செலவு அதிகம். பெற்றோர்கள், தாத்தா, பாட்டி, மாமாக்கள், அத்தைகள், ஆசிரியர்கள், அக்கம்பக்கத்தினர் தவிர; ஒரு குழந்தைக்கு நேரம், உணவு, ஆற்றல், கவனிப்பு, கற்பித்தல், பயிற்சி, ஒழுக்கம் ஆகியவற்றின் முதலீடு தேவை. ஆகையால் இவைகளையெல்லாம் சமுதாயத்திற்குப் பங்களிக்க போகும் ஒரு நபராக ஆவதற்காக அனைவரும் முதலீடு செய்கிறார்கள். ஒரு ஆப்பிரிக்க பழமொழி இவ்வாறாக கூறுகிறது; குழந்தை வளர ஒரு கிராமம் தேவை. இதேபோல், புதிதாகப் பிறந்த விசுவாசிக்கு உள்ளூர் சபையால் அக்கறை மற்றும் கவனம் மற்றும் நேரமுதலீடு தேவை.
ஊட்டிவிடுதல்:
ஒரு குழந்தை தனக்கு தானே உணவளிக்க முடியாது. தாய்மார்கள் குழந்தைகளுக்கு பால் ஊட்டுகிறார்கள், பிறகு படிப்படியாக திட உணவை எடுக்க குழந்தைக்கு உதவுகிறார்கள். குழந்தைக்குச் சிறந்த உணவைத் தாய் தீர்மானிக்கிறார்; எளிதில் ஜீரணிக்கவும், வலிமையடையவும், எதிர்ப்புச்சக்தியடையவும் மற்றும் ஆற்றல் கொள்ளவும் மற்றும் சமச்சீரான உணவை வழங்குகிறார். தேவனுடைய வார்த்தையை சரியான நேரத்தில் சரியான முறையில் புதிய விசுவாசிகளுக்கு வழங்குவது மிக அவசியம்.
சுத்தம் செய்தல்:
பச்சிளம் குழந்தை தன்னை தானே சுத்தம் செய்ய சாத்தியமில்லை. குழந்தைகள் துணிகளை துவைக்க மற்றும் ஆடை அணிவதற்கு மற்றவர்களை சார்ந்திருக்க வேண்டும். புதிதாகப் பிறந்த குழந்தைக்கு இரத்தம் மற்றும் பிற திசுக்களை சுத்தம் செய்ய வேண்டும். தொடர்ந்து, ஒரு குழந்தைக்கு 24/7 பல மாதங்களுக்கு கவனம் தேவை. சுகாதாரமான சூழல் மிக அவசியம். இறந்த லாசரு கல்லறையிலிருந்து வெளியே வந்த பின்பும், இன்னும் பிரேத ஆடைகளாலேயே கட்டப்பட்டிருப்பார், அதுபோல ஒரு விசுவாசி கலாச்சார, உலக மற்றும் தெய்வீகமற்ற கந்தல்களால் கட்டப்பட்டுள்ளார். கர்த்தர் ஜீவனைக் கொடுத்தார், ஆனால் சீஷர்களும் மற்றவர்களும் அக்கட்டுகளை அவிழ்க்க வேண்டியிருந்தது. அவ்வாறே, தேவன் புதிய வாழ்வைத் தருகிறார், ஆனால் விசுவாசிகளின் கூட்டம் பழைய வாழ்க்கையின் நினைவுச்சின்னங்களை, பழைய மரபுகளை அவிழ்க்க வேண்டும் (யோவான் 11:44).
கவனத்தை ஈர்த்தல்:
புதிதாகப் பிறந்த குழந்தை அழுவதன் மூலம் கவனத்தை ஈர்க்கின்றது. பின்னர் படிப்படியாக சைகைகள், பின்னர் எழுத்துக்கள் மற்றும் வார்த்தைகளுடன் தொடர்பு கொள்ள கற்றுக்கொள்கிறது. ஒரு தாய் குழந்தையைப் புரிந்துகொண்டு எல்லா தேவைகளையும் வழங்குகிறாள். அதுபோல புதிய விசுவாசி ஆண்டவரோடு ஆராதனை, ஜெபம், துதிகள், விண்ணப்பங்கள் மற்றும் நன்றி செலுத்துதல் மூலமும், தேவனுடைய வார்த்தையை கேட்பதற்கு மற்றும் தொடர்புகொள்வதற்கும ,உதவ உள்ளூர் சபை ஆயத்தமாக இருக்க வேண்டும்.
நடை பழகுதல்:
குழந்தை படி படியாக மெதுவாக எழுந்து நடக்கிறது. புதிய விசுவாசிகளும் ஞானத்திலும், அன்பிலும், அழைப்பிற்கு பாத்திரவானாக நடக்கப் பயிற்றுவிக்கப்பட வேண்டும் (எபேசியர் 5:2, 8,16).
பாதுகாப்பு:
ஒரு குழந்தைக்கு பாதுகாப்பு தேவை, அதுபோலவே விசுவாசிக்கும் பாதுகாப்பு தேவை.
புதிய விசுவாசிகளுக்காக நான் ,அக்கறை கொள்கிறேனா?
Author: Rev. Dr. J .N. மனோகரன்