தன்னுடைய வாழ்க்கை முழுவதும் யோசேப்பு தேவனுடைய சித்தத்தின்படி ஜீவித்தான். அவன் உபத்திரவங்களை அனுபவித்தபொழுது களிகூர்ந்தான். "தாழ்ந்திருக்கவும் எனக்கு தெரியும், வாழ்ந்திருக்கும் எனக்குத் தெரியும் ; எவ்விடத்திலும் எல்லாவற்றிலும் திருப்தியாயிருக்கவும் பட்டினியாயிருக்கவும் பரிபூரணமடையவும் குறைவுபடவும் போதிக்கப்பட்டேன் " (பிலிப்பியர் 4:12) இப்பொழுது நீங்கள் இருக்கிற நிலைமையில் திருப்தியாக இருப்பது மிகப்பெரிய காரியம். " போதும் என்கிற மனதுடனே கூடிய தேவபக்தியே மிகுந்த ஆதாயம் " (1 தீமோத்தேயு 6:6)
நீ மகிழ்ச்சியோடு இருக்கும் பொழுதும் நீ பாடுகளை அனுபவித்துக்கொண்டிருக்கும் பொழுதும் நீ குறைவுள்ளவனாக இருக்கும் பொழுதும் நீ நிறை உள்ளவனாக இருக்கும் போது இருக்கும்பொழுதும் உன்னுடைய உள்ளம் திருப்தியுடன் இருக்குமானால் அதுதான் உண்மையான கிறிஸ்தவ வாழ்க்கை. யோசேப்பு தான் குழிக்குள் போடப்பட்டபொழுதும் குற்றம்சாட்டப்பட்டவனாக சிறைச்சாலைக்குள் இருந்தபொழுதும், எகிப்தின் சிங்காசனத்தில் இருந்த பொழுதும் கூட தேவனோடிருந்தான். தேவன் யோசேப்புடன் இருந்தார். யேசேப்பு தேவனுடன் இருந்தான். நீ தேவனுடைய சித்தத்தின்படி ஜீவித்தால் மட்டுமே தேவனுடன் இருக்க முடியும். அப்பொழுது நீ உன்னுடைய வாழ்க்கையிலும், பிறருடைய வாழ்க்கையிலும் புயல் காற்றுகளை வரவழைக்க மாட்டாய். ஆனால் நீ தேவனுடைய ஆசீர்வாதத்தின் பரிபூரணத்தைப் பரலோகத்திலிருந்து பூலோகத்திற்குக் கொண்டு வருவாய்.
தேவனுடைய சித்தத்தின்படி ஜீவிப்பது கடினமான ஒரு காரியம். " கர்த்தரோ அவரை நொறுக்க சித்தமாகி அவரைப் பாடுகளுக்குட்படுத்தினார். அவருடைய ஆத்துமா தன்னைக் குற்ற நிவாரண பலியாக ஒப்புக்கொடுக்கும் போது, அவர் தமது சந்ததியை கண்டு நீடித்த நாளாயிருப்பார். " கத்தருக்கு சித்தமானது அவர் கையினால் வாய்க்கும்". (ஏசாயா 53 : 10) தேவனுடைய சித்தத்தின்படி வாழ்கிறவர்கள் பிறருடைய பாவமன்னிப்புக்காக தேவனிடம் மன்றாடுவார்கள். அவர்களோடு சேர்ந்து அவர்களுடைய பாடுகளைத் தாங்களும் மகிழ்ச்சியுடன் சுமப்பார்கள். இந்த இராஜரீக நெடுஞ் சாலையில் நடந்து செல்கிறவர்களுக்கு தூதர்களின் மூலமாகவும் பிரதான தூதர்களின் மூலமாகவும் பாதுகாப்பு கிடைக்கும். பரலோகம் அவர்களோடு இருக்கும் . தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக ஆமென்.
Author: Pr.J.Sampaul MA., MSW,. M.Div., M.Th.