பரிமளதைலங்கள் - உன்னதப்பாட்டு 1:3

"உமது பரிமளதைலங்கள் இன்பமான வாசனையுள்ளவைகள்; உமது நாமம் ஊற்றுண்ட பரிமளதைலமாயிருக்கிறது; ஆகையால் கன்னியர்கள் உம்மை நேசிக்கிறார்கள்" (உன்னதப்பாட்டு 1:3).

அவருடைய பரிமள தைலங்களின் வாசனை மிக அற்புதமானது. அவரது நாமத்தை உச்சரிக்கும் போதே, வாசனைத் தைலத்தை கீழே கொட்டினால் எப்படி குபீரென்ற நறுமணம் எங்கும் வீசிக்கொண்டிருக்குமோ அத்தனை பரிமளமாயிருக்கும்! அவருடைய பரிமளங்கள் என்னவெனில், அன்பு, சமாதானம், பரிசுத்தம், விசுவாசம், நீடிய பொறுமை, தாழ்மை ஆகியவைகளே. நாம் அவரது அன்பிலே சோகமாயிருந்தால் உடனே அவரது பரிமள தைலமாகிய அன்பு நம்மேல் வீசப்படுகிறது. தனது வேத வாக்கியங்களின் மூலமாகவோ, சொப்பனத்தின் மூலமாகவோ , தேவமனிதர்கள் மூலமாகவோ, நாம் இந்த பரிமள வாசனையை உணருகிறோம்.

நம் தவறுகளுக்கு நாம் வருந்தாமலிருந்து அவரது ஆவியை துக்கப்படுத்தும் போது அவரது பரிமளத்தின் வாசனையான இரக்கத்தையும் நீடிய பொறுமையையும் நமக்கு அனுப்பி வைக்கிறார்! நாம் மிகுந்த மன வேதனையில் இருக்கும்போது அவருடைய பரிமளமாகிய சந்தோஷத்தை நம் ஆத்துமாவில் நிரப்புகிறார்! நாம் பாவம் செய்யும்போது அவரது பரிமளமாகிய பரிசுத்தம் நம்முன் வந்து நிற்கிறது! நம்மில் பெருமை காணப்படுகையில் அவருடைய பரிமளத்தின் வாசனையான அவரது தாழ்மை நம்முன் மணம் வீசிக்கொண்டிருக்கிறது! நாம் சமாதானம் இழந்து தவிக்கையில் அவரது பரிமளத்தின் வாசனையான அவரது சமாதானம் நம்முன் மணம் வீசிக்கொண்டிருக்கிறது! திரும்பத்திரும்ப தமக்கு வரும் தோல்விகளினால் நாம் மூர்ச்சித்து கிடக்கையில் அவரது வாக்குத்தத்த வார்த்தைகளாகிய பரிமளம் நமக்கு முன் மணத்துக்குக் கொண்டிருக்க செய்கிறார்!

அவருடைய மேலே சொல்லப்பட்ட நற்கந்தமான பரிமள தைலங்கள் அவரில் இருப்பதால், அவர் நாமம் ஊற்றுண்ட பரிமள தைலம் என்று சொல்லப்பட்டிருக்கிறது. இயேசு என்ற அவரது விலையேறப் பெற்ற நாமத்தை "கன்னியர்கள்" உச்சரிக்கையில் பரிமளதைலத்தின் வாசனை எங்கும் வீசி அவரது பிரசன்னத்தையே வெளிப்படுத்துகிறது. நாம் அவரது விலை யேறப் பெற்ற நாமத்தை அறிந்திருக்கிறோம். அவரது முற்றிலும் புதிதாக்கப்பட்ட தன்மையை அறிந்து நாம் அவரை நேசிக்கிறோம். அவருடைய முற்றிலும் புதிய பரிமள தைலங்களின் கிறங்கச் செய்யும் அற்புத மணத்தினால் நாம் கவரப்பட்டு அவருக்குள் இழுத்துக்கொள்ளப்படுகிறோம்! உன்னுடைய தனிப்பட்ட ஆத்துமாவில் அவருடைய பரிமள தைலங்களின் நீ கவரப்பட்டிருக்கிறாயா? அவரது நாமம் ஊற்றுண்ட பரிமள தைலம் அல்லவா? இந்த அற்புத நற்கந்ததினால் கவரப்பட்ட "கன்னியர்கள்" உலகெங்குமுண்டே !

Author Name: T. Job Anbalagan

(மொழியாக்கம் by Caroline Jeyapaul) 



Topics: உன்னதப்பாட்டு T. Job Anbalagan

tamil bible, tamil Bible search,tamil bible online , tamil bible download, tamil bible study, tamil bible free download