அதிக அர்ப்பணிப்புடனும், தியாகத்துடனும், உண்மையுடனும் ஊழியம் செய்த ஒரு மிஷனரி, தனது ஊழியத்தில் கஷ்டங்கள், எதிர்ப்புகள் மற்றும் உழைப்புக்கேற்ற பலன் இல்லாததால் சோர்ந்து போனார். தன்னால் என்னவெல்லாம் செய்ய முடியும் என்பதை யோசிப்பதை விட்டு தன்னால் என்ன செய்ய முடியாதோ அதைப் பற்றியே அவர் அதிகம் யோசிக்கத் தொடங்கினார். இன்னும் ஒருபடி மேலே போய் தேவன் தனக்கு வைத்திருக்கும் திட்டத்தை மறந்து, ஊழியத்தில் இருந்த மற்றவர்களுடனும் கிறிஸ்தவர்களாக இல்லாத சக நண்பர்களுடனும் தன்னை ஒப்பிட்டுப் பார்க்க ஆரம்பித்தார், பொறாமை அவரைப் பற்றிக்கொண்டது. அதன் விளைவு விரக்தியடையந்தார, இது அவரை சிறிய பிரச்சினைகளுக்கு கூட அடிக்கடி முணுமுணுக்கவும் புலம்பவும் வைத்தது. அவருடைய இரண்டு பிள்ளைகளும் தங்கள் தந்தையின் உயர்ந்த அர்ப்பணிப்பு மற்றும் உண்மைத்தன்மைக்காக அவரை மதித்தார்கள், ஆனால் அவர் ஏன் எப்போதும் விரக்தியடைகிறார் என்பதை புரிந்து கொள்ள முடியாமல் தவித்தார்கள். இந்தச் சூழ்நிலையிலே வளர்ந்ததால் பிள்ளைகள் ஊழியத்தையும் அருட்பணியையும் வெறுக்க நேர்ந்தது. பின்னதாக முழுநேர ஊழியராக ஒருபோதும் ஈடுபடக்கூடாது என்று அவர்கள் தீர்மானித்தனர்.
ஆசாப்பின் தடுமாற்றம்:
ஆசாப் துன்மார்க்கனைப் பார்த்தபோது, அவனுடைய கால்கள் ஏறக்குறைய தடுமாறின, சறுக்கின. அவர்கள் ஆணவமும், பொல்லாத செழுமையும், ஆரோக்கியமும், கொழுத்தும், நேர்த்தியும், கர்வத்தை நகையாக அணிந்தும், வன்முறையை ஆடையாக மறைத்தும், கேலியும், தீமையை பேசவும், ஒடுக்கப்பட்டோரை அச்சுறுத்தவும், செல்வ செருக்காகவும் இருப்பதைக் கண்டான். மாறாக, ஆசாப் தான் உண்மையானவன், நேர்மையானவன், நீதியுள்ளவன் மற்றும் விருதாவாகவே இருதயத்தைச் சுத்தம்பண்ணி, குற்றமில்லாமையிலே கைகளை கழுவுகிறேனே என்று கவலைப்பட்டான் (சங்கீதம் 73: 1-14).
சந்ததியினருக்கு துரோகம்:
ஆசாப் எதிர்மறைகளில் மட்டுமே கவனம் செலுத்தி, தீயவர்களை மட்டுமே கவனித்தால், அவன் ஒரு சார்பாய் கவனித்தவனாகியிருப்பான். அதாவது, அவன் நாணயத்தின் ஒரு பக்கத்தை மட்டுமே பார்க்கிறான் என்றே அர்த்தம். அவனது அவதானிப்புகள் எல்லாம் முழுமை பெறாததாய் போய் விடும். "இவ்விதமாய்ப் பேசுவேன் என்று நான் சொன்னேனானால், இதோ, உம்முடைய பிள்ளைகளின் சந்ததிக்குத் துரோகியாவேன்" (சங்கீதம் 73:15) என்றான். எப்போதும் இதைப் பற்றி பேசுவதன் மூலமும் புலம்புவதன் மூலமும், அவனே பிள்ளைகளின் சத்தியத்தின் அறிவைப் பறிப்பது போலாகிடுமே.
சரியான கண்ணோட்டம்:
ஆசாப் தனது கவனம் அல்லது எண்ணச்சுழற்சி தவறானது மற்றும் எதிர்மறையானது என்பதை உணர்ந்தான், அவன் தனது கவனம், கண்ணோட்டம் மற்றும் உதாரணமாக எடுத்த விஷயங்களை மாற்ற முடிவு செய்தான். துன்மார்க்கன் அல்லது உலகம் அல்லது காணக்கூடிய விஷயங்களில் கவனம் செலுத்துவதற்குப் பதிலாக, அவன் தேவனின் பரிசுத்த ஸ்தலத்திற்குள் பிரவேசித்தான். தேவனின் சரியான கண்ணோட்டத்தில் கதையின் முடிவை அங்கே பார்க்க முடிந்தது (சங்கீதம் 73:17). அப்படி பார்க்கும் போது தான் அவனுக்கு துன்மார்க்கரும் தேவபக்தியற்றவர்களும் தண்டிக்கப்படுவார்கள், நியாயந்தீர்க்கப்படுவார்கள் என தெரிந்தது.
அழிந்துபோகும் ஜடவுலகின் மீது அல்லாமல், மேலான, நித்தியமான விஷயங்களில் தங்கள் மனதை செலுத்துமாறு விசுவாசிகளுக்கு பவுல் அறிவுறுத்துகிறார் (கொலோசெயர் 3:1).
தேவ கண்ணோட்டத்தையும் திட்டத்தையும் நான் என் பிள்ளைகளுக்கு இல்லாமல் செய்கிறேனா?
Author: Rev. Dr. J .N. மனோகரன்