இருந்தாலும் இல்லாவிட்டாலும்

1. விடுவிக்காமற்போனாலும்
தானியேல் 3:17-29 நாங்கள் ஆராதிக்கிற எங்கள் தேவன் எங்களைத் தப்புவிக்க வல்லவராயிருக்கிறார்; விடுவிக்காமற்போனாலும்...

2. துளிர்விடாமற்போனாலும்
ஆபகூக் 3:17-19 அத்திமரம் துளிர்விடாமற்போனாலும், திராட்சச் செடிகளில் பழம் உண்டாகாமற்போனாலும், ஒலிவமரத்தின் பலன்  அற்றுப்போனாலும், வயல்கள் தானியத்தை விளைவியாமற்போனாலும், கிடையில் ஆட்டுமந்தைகள் முதலற்றுப்போனாலும், தொழுவத்திலே மாடுகள் இல்லாமற்போனாலும் நான் கர்த்தருக்குள் மகிழ்ச்சியாயிருப்பேன்

3. கொன்றுபோட்டாலும்
யோபு 13:15 அவர் என்னைக் கொன்று போட்டாலும், அவர்மேல் நம்பிக்கையாயிருப்பேன்;

4. சாய்ந்துபோனாலும்
சங்கீதம் 46:1-3 பூமி நிலைமாறினாலும், மலைகள் நடுச்சமுத்தி ரத்தில் சாய்ந்துபோனாலும், அதின் ஜலங்கள் கொந்தளித்துப் பொங்கி, அதின் பெருக்கினால் பர்வதங்கள் அதிர்ந்தாலும், நாம் பயப்படோம்.

5. அழிந்துபோனாலும்
2கொரிந்தியர் 5:1 பூமிக்குரிய கூடாரமாகிய நம்முடைய வீடு அழிந்துபோனாலும், தேவனால் கட்டப்பட்ட கைவேலையல்லாத நித்திய வீடு பரலோகத்தில் நமக்கு உண்டென்று அறிந்திருக்கிறோம்.

6. குடியிராமற்போனாலும்
2கொரிந்தியர் 5:7-9 நாம் சரீரத்தில் குடியிருந்தாலும் குடியிராமற் போனாலும் அவருக்குப் பிரியமானவர்களாயிருக்க நாடுகிறோம்.

7. வார்க்கப்பட்டுப்போனாலும் (ஊற்றப்பட்டு)
பிலிப்பியர் 2:17,18 மேலும், உங்கள் விசுவாசமாகிய பலியின் மேலும் ஊழியத்தின்மேலும் நான் வார்க்கப்பட்டுப்போனாலும், நான் மகிழ்ந்து, உங்களனைவரோடுங்கூடச் சந்தோஷப்படுவேன்.

Author: Rev. M. Arul Doss  



Topics: தமிழ் கிறிஸ்தவ பிரசங்கம் (Tamil Christian Sermon) பிரசங்க குறிப்புகள் Perasanga Kurippugal Tamil Sermon Outlines

tamil bible, tamil Bible search,tamil bible online , tamil bible download, tamil bible study, tamil bible free download