ஒரு ஆதிவாசி மனிதன் மீது சிறுநீர் கழிக்கும் ஒரு பிராமணரின் மனிதாபிமானமற்ற செயலின் வீடியோ பதிவை சமூக வலைத்தளங்களில் காண முடியும். அவர் தனது ஊதியத்தை கோரியதற்காக இந்த தண்டனை எனக் கூறப்படுகிறது. மாநில முதல்வர், கட்சிக்கு ஏற்பட்ட கெட்ட பெயரை மனதில் கொண்டு, ஆதிவாசியை வீட்டுக்கு அழைத்து அதற்கு பிராயச்சித்தமாக கால்களை கழுவினார். ஆனால், மனிதாபிமானமற்ற செயலைச் செய்த குற்றவாளியை ஜாதி சங்கத் தலைவர் பாதுகாத்தார். சிறுநீர் கழிப்பதில் என்ன குற்றம்? என்று வேறு கேட்டார் (தி ஸ்டேட்ஸ்மேன், ஜூலை 11, 2023)
பாதிக்கப்பட்ட ஏழை:
ஆதிவாசி மனிதன் ஏழை மாத்திரமல்ல, சமூக, மத மற்றும் பொருளாதார நிலையிலும் செல்வாக்கு அற்றவனாக இருந்தான். அத்தகைய புரோகித வர்க்கத்தின் உலகக் கண்ணோட்டத்தில் ஏழை மனிதனுக்கு எந்த உரிமைகளும் சலுகைகளும் இல்லை. ஏழைகள் சமூகத்தின் உயர் அடுக்கில் உள்ளவர்களுக்கு கட்டாயமாக வேலை செய்ய வேண்டும், ஆனால் ஊதியத்திற்கான உரிமைகள் இல்லை அல்லது எந்த ஊதியத்தையும் நிர்ணயிக்கவோ அல்லது கோரவோ முடியாது. வேதாகமத்தில் பார்த்தோமேயானால் ஏழைகள் மீது தேவன் எவ்வளவு அக்கறை கொண்டுள்ளார் என்பதைக் காணலாம். "அவன் வேலைசெய்த நாளில்தானே, பொழுதுபோகுமுன்னே, அவன் கூலியை அவனுக்குக் கொடுத்துவிடவேண்டும்; அவன் ஏழையும் அதின்மேல் ஆவலுமாயிருக்கிறான்; அதைக் கொடாவிட்டால் அவன் உன்னைக்குறித்துக் கர்த்தரை நோக்கி முறையிடுவான்; அது உனக்குப் பாவமாயிருக்கும்" (உபாகமம் 24:15) ஆக, ஊதியம் சரியாக வழங்கப்பட வேண்டும் என்பது தேவனின் கட்டளை (உபாகமம் 24:15).
பெருமை:
சாதிப் பெருமிதம் தங்களை உயர்ந்தவர்களாகவும், மற்றவர்களை இழிவாகவும் கருத வைக்கிறது. மற்றவர்களை வெறுப்பதும், இழிவுபடுத்துவதும், குறிப்பாக படிப்பறிவில்லாத கிராமப்புற ஏழைகளை இப்படி இழிவுப்படுத்துவது பலரின் அன்றாடப் பழக்கமாகும். இந்த பெருமை மற்றவர்களை இழிவாக நடத்தும் துணிச்சலையும் கொடுக்கிறது.
முன்னுரிமை:
சலுகைகள் அவர்களால் மூலைப்படுத்தப்படுகின்றன, அதே நேரத்தில் பொறுப்புகள் அவர்கள் மீது திணிக்கப்படுகின்றன. சலுகைகள் முந்தைய பிறவிகளில் அவர்களின் தெய்வீக வாழ்க்கைக்கான வெகுமதிகளாகக் கருதப்படுகின்றன. பொறுப்புகள் நீதியான மத தர்மம் என்று அழைக்கப்படுகின்றன, இதனால் முன்னுரிமை பெற்ற சாதிக்கு சேவை செய்யும்படியாகிறது.
அதிகாரம்:
தாங்கள் உயர் சாதியினராக பிறந்ததின் நிமித்தம் அதிகாரத்தையும் செல்வாக்கையும் கோருகின்றனர். மேலும், அவர்களின் அதிகாரம் தெய்வீகமாக நியமிக்கப்பட்ட அல்லது அருளப்பட்டதாக விளக்கப்படுகிறது. இது அரசியல் அதிகாரிகளால் அங்கீகரிக்கப்பட்ட மத அதிகாரத்தை அவர்களுக்கு வழங்குகிறது.
பாதுகாப்பு:
இந்திய அரசியலமைப்பின் அடிப்படையில் ஒடுக்கப்பட்ட மக்கள் மன்றாடும் / போராடும் அதே வேளையில், அவர்களின் புனித நூலான மனுஸ்மிருதியால் உயர்ந்த சாதி பாதுகாக்கப்படுகிறது.
தண்டனை அல்லது வெகுமதி:
துரதிர்ஷ்டவசமாக, இத்தகைய கொடூரமான மற்றும் மனிதாபிமானமற்ற குற்றங்கள் தண்டிக்கப்படுவதில்லை, மாறாக வெகுமதி அளிக்கப்படுகின்றன. குற்றவாளி சிறையில் தள்ளப்பட்டதால், பிராமண சமாஜம் சட்ட வழக்குகளை எதிர்த்துப் போராடவும், அவரது குடும்பத்திற்காகவும் நிதி திரட்டியது.
நான் தீமையை எதிர்த்து, நீதியை நிலைநாட்டுகிறேனா?
Author: Rev. Dr. J .N. மனோகரன்