ஒரு நபர் தனது குழந்தைக்கு பால் வாங்க தனது வீட்டை விட்டு வெளியே செல்கிறார். அப்படி அவர் தெருவில் நடந்து செல்லும்போது, ஒரு வாலிபர் ஓட்டிச் சென்ற பைக் அவர் மீது மோதி, அவர் சம்பவ இடத்திலேயே இறந்துவிடுகிறார்; எந்த முகாந்திரமும் இல்லாமல் தற்செயலாக இறக்கிறார். இது கிட்டத்தட்ட ஒவ்வொரு நாளும் நடக்கிறது. இது மற்றவர்களின் தவறு, மற்றவர்களின் தீய பாவங்கள், இயந்திரங்களின் செயலிழப்பு மற்றும் இயற்கை பேரழிவுகள் காரணமாக இருக்கலாம். வேதாகமத்தில் ஏத்தியனான உரியா, வீதியில் இறந்த இந்த பாதிக்கப்பட்டவர் போன்றே, உரியாவின் மனைவி மயக்கப்பட்டு, கற்பழிக்கப்பட்டாள், அதுமட்டுமின்றி தாவீதின் சதியால் உரியா போரில் கொல்லப்பட்டான், தளபதி யோவாப் மூலமாக இது நடந்தது. தேவன் தாவீதை எதிர்கொள்ள நாத்தான் தீர்க்கதரிசியை அனுப்பினார், தாவீது ஒப்புக்கொண்டு மன்னிப்பு கோரினான் (2 சாமுவேல் 11&12). இருப்பினும், அவனது விபச்சாரம் பாவம் மற்றும் கொலைப் பாவத்தின் காரணமாக, அவனது நான்கு மகன்களும் அழிந்தனர். விபச்சாரம் மற்றும் கொலை வழக்கைத் தவிர, தாவீது பல விஷயங்களில் தேவனைப் பிரியப்படுத்தினான் (1 இராஜாக்கள் 15:5).
உரியாவின் தோற்றம்:
தாவீது அதைக் கைப்பற்றுவதற்கு முன்பு எருசலேம் பகுதியில் குடியேறிய ஏத்தியர்களின் வழித்தோன்றல்களில் அவன் ஒருவன் என்று நம்பப்படுகிறது. அவன் எருசலேமில் இருந்த எபூசிய ஆட்சியாளரின் கடைசி வாரிசாக இருந்திருக்கலாம். அவன் படையில் இருந்த வலிமைமிக்க மனிதர்களில் ஒருவன் என்று வேதாகமம் பதிவு செய்கிறது (2 சாமுவேல் 23:39). ஒருவேளை, தாவீதின் செல்வாக்கின் காரணமாக உரியா யெகோவாவைப் பின்பற்றியிருக்கலாம். தாவீதின் இந்த பாவம் நடந்தபோது நம்பகமான போர்வீரர்களில் ஒருவனாக உரியா யோவாபோடு இருந்தான்.
ஒருமைப்பாடு:
உரியா உத்தமமான மனிதன், தாவீதுக்கும், இஸ்ரவேலுக்கும், யெகோவாவுக்கும் உண்மையுள்ளவன்.
சட்டங்கள் மற்றும் மரபுகள்:
முதலில் தாவீது ஏழாவது கட்டளையை மீறினான், அதாவது தான் தவறு செய்கிறோம் என அறிந்தே அக்கட்டளையை மீறினான், பாவம் செய்தான் (யாத்திராகமம் 20:14). உரியா இராணுவத்தின் மதிப்புகளையும் பாரம்பரியங்களையும் நிலைநாட்டினான். போரின் போது, அதாவது சக ஊழியர்கள் போரில் ஈடுபடுவதால், அவன் தனது திருமண உரிமைகள், சொகுசு வாழ்க்கை மற்றும் வீட்டின் வசதியை மறுக்கிறான்.
குடிபோதை:
தாவீது குடிபோதையில் இரண்டாவது முறையாக அவனை வீட்டிற்கு அனுப்ப விரும்பினான். குடிபோதையில் இருந்தாலும், வீட்டிற்குச் செல்வதை விட முகாமில் தங்குவதற்கான நெறிமுறையைப் பின்பற்றும் அளவுக்கு அவன் நிதானமாக இருந்தான். இதற்கு நேர்மாறாக, தாவீது பேராசை, விபச்சாரம் மற்றும் கொலை ஆகியவற்றின் மிதப்பில் இருந்தான்.
பாதிக்கப்பட்ட ஒரு நபர்:
அவன் பரிதாபமாக இறந்தாலும், அவனது பெயர் மேசியாவின் வம்சவரலாற்றில் காணப்படுவதன் மூலம் தேவன் அவனைக் கனப்படுத்தினார் (மத்தேயு 1:6).
அநீதியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவன் நியாயம் செய்கிறார் என்று நான் நம்புகிறேனா?
Author: Rev. Dr. J .N. மனோகரன்
ஒரு இளம் தந்தை ஒரு ஆலோசகரிடம் வந்தார். ஆண் குழந்தை பிறக்கும் என்று எதிர்பார்த்திருந்து, பெண் குழந்தை பிறந்தது. அந்த எதிர்பார்ப்பு ஒரு தன்னைத் தானே தீர்க்கதரிசியாக அறிவித்தவரின் தீர்க்கதரிசனத்தை அடிப்படையாகக் கொண்டது; எனவே அந்த பெண் குழந்தையை ஏற்றுக்கொள்ள முடியாமல் மன உளைச்சலுக்கு ஆளாகி அவருக்கு உதவி தேவைப்பட்டதால் ஆலோசகரிடம் வந்து நிற்க வேண்டியதாயிற்று. மற்றொரு இடத்தில் தீர்க்கதரிசி என்று அழைக்கப்படும் ஒருவர், முடங்கிய மனிதனுக்காக ஜெபம் செய்தார், அவர் நன்கு நடந்து அவரே தேவனை ஆராதிப்பதற்காக திருச்சபைக்கு செல்வார் என உறுதியளித்தார். ஆனால் துரதிர்ஷ்டவசமாக, அடுத்த நாளே அவர் இறந்தார். அந்த தீர்க்கதரிசி அதற்கு பதிலளிக்கும் விதமாக, தன்னுடைய தீர்க்கதரிசனம் இரட்டிப்பான ஆசீர்வாதமாகியுள்ளது என்றார். ஆம், முடக்குவாதமான மனிதன் பரலோகத்தில் நடந்து அலைந்து திரிகிறான் என கூறினார். தினம் ஒரு ஆப்பிள் பழம் மருத்துவரை விட்டு தூரப்படுத்தும் என்ற கட்டுக்கதையைப் போல; ஒரு நாளுக்கு ஒரு தீர்க்கதரிசனம் சாத்தானை தூரப்படுத்துகிறதா என்ன!.
ஆவிக்குரிய இரத்த சோகை:
உடலில் போதுமான இரத்தம் இல்லாதபோது, சோர்வு, தூக்கமின்மை மற்றும் தொற்று பாதிப்பு ஏற்படும். அதேபோல், ஆவிக்குரிய பலம் இல்லாதவர்கள் பொய்யான தீர்க்கதரிசிகளின் சூழ்ச்சிக்கு ஆளாகிறார்கள். தேவ வார்த்தையின் அடிப்படையில் புதுப்பிக்கப்பட்ட மனம் இல்லாதவர்கள், பொய்யான தீர்க்கதரிசிகளிடம் ஆறுதல் தேடுவார்கள் (ரோமர் 12:2).
மத்தியஸ்தர்கள்:
பல நாடுகளில், அரசாங்கத்துடன் வேலை செய்ய ஒரு இடைத்தரகர் தேவை. இந்த முறைக்கு பழக்கப்பட்டவர்கள் தேவனிடம் பேச்சுவார்த்தை நடத்த ஒரு இடைத்தரகர் தேவை என்று நினைக்கிறார்கள். எனவே, அவர்கள் தீர்க்கதரிசிகள், போதகர்கள், பிரசங்கியார்கள் மற்றும் உயிருள்ள அல்லது இறந்த புனிதர்களை மத்தியஸ்தராகத் தேடுகிறார்கள். தேவனுக்கும் மனிதர்களுக்கும் இடையில் ஒரே ஒரு மத்தியஸ்தம் மட்டுமே உள்ளது என்று பவுல் எச்சரிக்கிறார், ஆம், அவரே கர்த்தராகிய இயேசு கிறிஸ்து. ஒரே ஒரு தேவனே இருக்கிறார். மனிதர்கள் தேவனை அடைவதற்கும் ஒரே ஒரு வழிதான் உள்ளது. அவ்வழி மனிதனாகப் பிறந்த கிறிஸ்துவாகிய இயேசுவின் மூலம் உருவாகிறது (1 தீமோத்தேயு 2:5).
அவுட்சோர்சிங்:
கடினமான பணிகள் சேவைகளை வழங்குவோருக்கு ஒப்பந்த சேவைகளாக அல்லது வெளியில் உதவிப் பெற்று செய்யப்படுகின்றன. உணவை வெளியிலிருந்து வாங்கலாம், அதுபோல ஒரு நிகழ்வை நிர்வகிப்பதற்கு வெளி உதவி நாடலாம். துரதிர்ஷ்டவசமாக, சிலர் ஜெபங்கள், விண்ணப்பங்கள் மற்றும் பரிந்துரைகள் எல்லாம் ஒரு ஆள் வைத்து செய்யப்படலாம் என்று நினைக்கிறார்கள். எனவே, அவர்கள் எளிதான ஆவிக்குரிய காரியங்களை வழங்குநர்களைத் தேடுகிறார்கள் மற்றும் ஒரு பொய்யான தீர்க்கதரிசியின் பிடியில் சிக்கிக் கொள்கிறார்கள்.
ஆவிக்குரிய பகுத்தறிவு:
பவுல் பெரேயா நகருக்குப் பிரசங்கிக்கச் சென்றபோது, அங்கு வாழ்ந்த பக்தியுள்ள யூதர்கள் மட்டும் இவரை நம்பவில்லை. பவுல் பிரசங்கித்தது பழைய ஏற்பாட்டில் உள்ளதா என்பதை உறுதிப்படுத்த அவர்கள் வேதத்தை ஆராய்ந்தனர் (அப்போஸ்தலர் 17:11). வேதாகமத்தைப் படிக்கவும், தியானிக்கவும், பிரயோகிக்கவும் தினசரி ஒழுக்கம் இல்லாததால், பல விசுவாசிகளுக்கு ஆவிக்குரிய பகுத்தறிவு இல்லை.
வார்த்தையின்படி நடக்கும் சரியான ஊழியர்களை நான் பகுத்தறிகிறேனா?
Author: Rev. Dr. J .N. மனோகரன்