தன்னை ஆராதனை வீரர் என்று அழைத்துக் கொள்ளும் நடனக் கலைஞர் ஒருவர், சினிமா நட்சத்திரங்களுடன் போட்டியிடுவதாக அறிவித்தார். அவர் அவர்களை விட பிரபலமாக வேண்டும் என்று எண்ணுகிறார், பின்னர் அவர் தேவ நாம மகிமைக்காக இவை அனைத்தையும் செய்வதாக கூறுகிறார். விசித்திரமாக, வேதத்தை ஒழுங்காக படிக்காத கிறிஸ்தவர்கள் இத்தகைய தவறான தலைவர்களைப் பின்பற்றுகிறார்கள். முதலில் , அவருடைய புகழ்தான் முன்னுரிமை என்பதால், அவர் தேவனின் பெயரை வீணாக எடுத்துக்கொள்கிறார். இரண்டாவது , அவர் மனிதர்களின் கைதட்டலுக்கு ஆசைப்படுகிறார்; இதனால் பத்தாவது கட்டளையை மீறுகிறார். மூன்றாவது , தேவனுக்கு மகிமையைக் கொடுப்பதாகக் கூறி அவருடைய மகிமையைக் கொள்ளையடிக்கிறார் (யாத்திராகமம் 20:7,17; ஏசாயா 42:8) நான்காவது, தேவனுடைய இராஜ்யத்தில் குடிப்பதும் உண்பதும் முக்கியமல்ல. தேவனுக்கேற்ற நீதிமானாக இருப்பதும், பரிசுத்த ஆவியானவருக்குள் சமாதானமும் சந்தோஷமும் அடைவதுமே முக்கியம் என்பதை அவர் மறந்துவிடுகிறார் (ரோமர் 14:17).
தேவன் மீதுள்ள புனிதமான அன்பு:
சிறந்த, பொருத்தமான மற்றும் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒப்பீடு என்னவென்றால்; நான் மற்றவர்களை விட தேவனை அதிகமாக நேசிக்கிறேனா? என்பதே. மற்ற எல்லா ஒப்பீடுகளும்; நான் தேவனுக்கு சிறப்பாக ஊழியம் செய்கிறேனா? நான் கர்த்தருக்கு அதிகமாக கொடுக்கிறேனா? நான் சிறப்பாகப் பிரசங்கிக்கிறேனா அல்லது போதிக்கிறேனா? எனது YouTube சேனலில் மற்றவர்களை விட கோடிக்கணக்கான சந்தாதாரர்கள் உள்ளதா? ஆனால் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து சீஷர்களுக்குக் கற்பித்தார், அவர்மீதான அன்பின் அளவுகோல் அவருடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படிவதாகும் (யோவான் 14:15). கர்த்தரை நேசிப்பவர்கள் கர்த்தருக்கு உண்மையாகவே தெய்வபக்தியுடனும் அர்ப்பணிப்புடனும் ஊழியம் செய்வார்கள்.
ஊழியத்தில் பலி:
பலி தேவனுக்கான சேவையைக் குறிக்கிறது. ஒரு தனிப்பட்ட, தினசரி, விருப்பமான மற்றும் ஜீவ பலி தேவனுக்கு ஊழியம் செய்வதற்கான தரமான மற்றும் நியாயமான அளவீடு ஆகும் (ரோமர் 12:1).
ஊழியத்தில் துன்பம்:
சீஷர்கள் அவருடைய நாமத்தினிமித்தம் துன்பப்படுவார்கள், அவர்கள் துன்புறுத்தப்படுவார்கள், அதனால் ஆசீர்வதிக்கப்படுவார்கள். கனி கொடுக்கும் தலைவர்கள் காரணமின்றி வெறுக்கப்படுவார்கள், பிரபலமாக மாட்டார்கள் (யோவான் 15:25). தேவ பிள்ளைகள் துன்பங்களைச் சகிக்க அழைக்கப்பட்டிருக்கிறார்கள் என்று பவுலும் பேதுருவும் எழுதுகிறார்கள் (பிலிப்பியர் 1:29; 1 பேதுரு 2:21).
ஊழியத்தில் உறுதி:
தாழ்மையான ஊழியர்கள் தேவனுக்கு ஊழியம் செய்வதில் உறுதியாக உள்ளனர். செல்வம், ஆரோக்கியம், குழந்தைகள் என அனைத்தையும் இழந்தபோது கூட யோபு தேவனை வணங்கினார் (யோபு 1:21). அது உறுதியான ஆராதனையாகும்.
ஊழியத்தில் ஆவியின் கட்டுப்பாடு:
இது ஒரு நாளில் ‘உயர்வாகவும்’ மற்றொரு நாளில் ‘குறைவாகவும்’ இருப்பது அல்ல. எப்படியென்றால் போதைப்பொருள் மற்றும் மது போன்ற போதைப் பழக்கங்களால் தூண்டப்பட்டவர்கள் எப்போதும் அதில் ஈர்ப்புடன் இருப்பதைப் போன்றது. தேவனுக்காக செய்யும் ஊழியத்தில் எப்போதும் முழு ஈடுபாட்டுடனும் ஈர்ப்புடனும் இருக்க வேண்டும். பவுல் ஆவியால் நிரப்பப்படுங்கள் என எழுதுகிறார் (எபேசியர் 5:18).
நான் வேதாகமத்தில் முதிர்ச்சியடைந்தவனா அல்லது படிப்பறிவில்லாதவனா?
Author: Rev. Dr. J .N. மனோகரன்