துரதிர்ஷ்டமா?

இஸ்ரவேல் ஜனங்கள் தங்கள் இன்னல்கள் பற்றி மாத்திரம் கவலைப்பட்டனர் (எண்ணாகமம் 11: 1).  அவர்கள் அதிசயமாக தங்களை  வழி நடத்தும் தேவன் மீது கவனம் செலுத்தவில்லை ஆனால் மோசேயிடம் ஏதோ ஒரு மந்திரக்கோல் இருப்பதாக நினைத்தனர். மேலும் அவர்கள் தங்களுக்கென்று தலைவர்களை ஏற்படுத்திக் கொண்டு மீண்டும் எகிப்திற்கு திரும்பிச் செல்லவே விரும்பினர் (எண்ணாகமம் 14: 4). தேவ மகிமையும் வல்லமையும் அவர்களுக்குக் காட்டப்பட்ட பின்னரும்;  தேவனுடைய எதிர்பார்ப்புகள் மற்றும் நியமங்களின் அளவை தர அவர்களால் இயலவில்லை. அவர்களின் முணுமுணுப்பு மீண்டும் மீண்டும் அவர்களின் நோக்கங்களையும் இதயத்தையும் வெளிப்படுத்தியது.

1) சுயாதீனமா அல்லது உணவா?

அவர்கள் சுதந்திரமான வாழ்வை விட உணவிற்கு தான் அதிகம் மதிப்பளித்தார்கள். "எகிப்திலே கிரயமில்லாமல் சாப்பிட்ட மச்சங்களையும், வெள்ளரிக்காய்களையும், கொம்மட்டிக்காய்களையும், கீரைகளையும், வெண்காயங்களையும், வெள்ளைப்பூண்டுகளையும் நினைக்கிறோம்" என்றனர் (எண்ணாகமம் 11:5). அடக்குமுறை அடிமைத்தனத்தின் துன்பத்தை அவர்கள் மறந்துவிட்டார்கள்.  இன்றும் கூட, பலர் பாவத்திலிருந்து விடுபடுவதை விட உணவிற்கு அடிமையாக இருக்க விரும்புகிறார்கள்.

2) எகிப்தின் மகிமையா அல்லது தேவ மகிமையா?

அவர்கள் எகிப்தில் அடிமைகளாக இருந்தபோதிலும், அவர்கள் எகிப்தை தங்கள் சொந்தமாக கருதினர்.  உண்மையில், தேவ செயலின் அடையாளங்கள், அதிசயங்கள் மற்றும் செங்கடலில் எகிப்தின் இராணுவத்தை மூழ்கியதில் காணப்பட்ட அவருடைய மகிமையை அவர்கள் புறக்கணித்தனர்.  தேவன் அவர்களுடன் இருப்பது அற்பமானதாகவும் ஆனால் எகிப்து அவர்களுக்கு அமோகமானதாகவும் (முக்கியமானதாகவும்) தெரிந்தது.

3) தெரியாத எதிர்காலமா அல்லது அறியப்பட்ட கடந்த காலமா?

அவர்களுக்கு எதிர்கால வாழ்க்கை என்னவென்று தெரியவில்லையே என்ற பயம் இருந்தது, எனவே அவர்கள் தெரிந்த கடந்த காலத்திற்கு திரும்பிச் செல்ல விரும்பினர்.  அவர்களுக்கான தரிசனம், வாக்குத்தத்தம், எதிர்காலம் என எல்லாவற்றிற்குள்ளும்  விசுவாசக் குறைச்சலே ஆளுகை செய்தது.

4) வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசமா அல்லது நிரந்தர அடிமைத்தனமா?

பரிதாபமானது என்னவெனில்,  அவர்கள் வாக்குப்பண்ணப்பட்ட  தேசத்தை நிராகரித்து நிரந்தர அடிமைத்தனத்தை தேர்ந்தெடுத்தனர்.  தேவன் வாக்குத்தத்தம் பண்ணின தேசத்தை எந்தவித தியாகமின்றி அல்லது அர்ப்பணிப்பின்றி அல்லது போராட்டமின்றி தங்களிடம் அவரே ஒப்படைக்க வேண்டும் என்று எதிர்பார்த்தனர்.

அவர்களுக்கு இருந்த விசுவாசக் குறைச்சல் மன்னாவை தேவனிடமிருந்து நன்றியுடன் பெறுவதற்குப் பதிலாக சலிப்பாகவும் ஒரு வழக்கமான உணவாகவும் பார்க்க வைத்தது. அவர்களை விடுவிப்பதற்காக தேவன் அவர்களின் முனகல்களைக் கேட்டார், ஆனால் அவர்கள் நிலைமையை தேவன் அறிந்திருக்கவில்லை என்று அவர்கள் நினைத்தனர் (யாத்திராகமம் 2:24). எகிப்திலிருந்து விடுதலைக்கான வழி உடனடியாக கிடைத்ததில் மூழ்கி, வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்தைப் பற்றி அவர்களால் கனவு காண முடியவில்லை.  தேவன் அவர்கள் மீது அக்கறை காட்டவில்லை என்றும் அவர் தங்களை கைவிட்டார் என்றும் நினைத்தார்கள்.  எல்லாவற்றிற்கும் மேலாக, அவர்கள் பிரச்சனை அல்லது சோதனை அல்லது உபத்திரவம் இல்லாத வாழ்க்கையை விரும்பினர்.  எனவே, அவர்கள் தங்கள் வாழ்க்கையை பெருந்துன்பமாக பார்த்தார்கள்.

அவருடைய அருட்பணிக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட எனது வாழ்க்கையை நான் துரதிர்ஷ்டமாக பார்க்கிறேனா அல்லது பாக்கியமாக பார்க்கிறேனா?

Author: Rev. Dr. J. N. Manokaran



Topics: Daily Devotions bible study

tamil bible, tamil Bible search,tamil bible online , tamil bible download, tamil bible study, tamil bible free download