திருந்தாத மனமா?

 

கிறிஸ்துவுக்கு எதிராக எழும் ஒவ்வொரு எண்ணத்தையும் அகற்றி ஒரு புதுப்பிக்கப்பட்ட மனதை விசுவாசிகள் வளர்க்க வேண்டும் என்று பவுல் எழுதுகிறார். "நீங்கள் இந்தப் பிரபஞ்சத்திற்கு ஒத்த வேஷந்தரியாமல், தேவனுடைய நன்மையும் பிரியமும் பரிபூரணமுமான சித்தம் இன்னதென்று பகுத்தறியத்தக்கதாக, உங்கள் மனம் புதிதாகிறதினாலே மறுரூபமாகுங்கள்" (ரோமர் 12:2; 2 கொரிந்தியர் 10:5). வருத்தம் என்னவெனில், பல விசுவாசிகளுக்கும் தலைவர்களுக்கும் கூட கிறிஸ்துவின் சிந்தை இல்லை (பிலிப்பியர் 2:5). மனதைப் புதுப்பிப்பதை சீர்குலைப்பதன் மூலம் சாத்தான் தேவ ஜனங்களை வஞ்சிக்கிறான்.

1) ஊழல் மனப்பான்மை:
இது சீஷர்களை நெறிமுறையற்ற முறைகளிலும் செல்வத்தைப் பின்தொடர்வதிலும் திசைதிருப்பியுள்ளது.  தேவாலயங்கள், மிஷன் அமைப்புகள் மற்றும் தேவாலய நிறுவனங்களுக்கு சொந்தமான சொத்துக்கள் நேர்மையற்ற தலைவர்களால் விற்கப்படுகின்றன.

 2) குற்ற மனப்பான்மை:
 பல இயக்குனர்  குழுமம் மற்றும் பொதுக்குழு கூட்டங்கள் போலீஸ் பாதுகாப்புடன் நடத்தப்படுகின்றன. சத்தியம் பேசுவோரையும் அறிவோடு பேசும் உறுப்பினர்களையும் அவ்விடத்திலிருந்து அகற்ற குண்டர்கள் எப்போதும் உடனிருக்கின்றனர். 

3) அகநிலை மனப்பான்மை:
சிற்றின்ப மனப்பான்மை கொண்ட சீஷர்கள் தங்களை தெய்வமாக்கிக்  கொள்கிறார்கள் மற்றும் அனைத்து ஊழிய சலுகைகளையும் தீய நோக்கங்களுக்காக தவறாக பயன்படுத்துகிறார்கள். ஒரு போதகர் தனது மனைவியின் மரணத்தை காரணம் காட்டி, தனது கள்ளக்காதலியை மணக்கிறார்.

4) சதி மனப்பான்மை:
தங்கள் வாரிசுகளையே தொடர்ந்து தலைவராக்குவது மற்றும் புதிதாக உருவாகி வரும் தலைவர்களை வளர விடாமல் தடுப்பது என்பது மற்றவர்களை கவிழ்க்க நினைக்கும் மனப்பான்மை ஆகும். ஒரு அமைப்பின் தலைவர் தனது மருமகனை அரியணையில் அமர்த்துவதற்காக 17 தலைவர்களை ஒழிக்க சதி செய்கிறார்.

 5) சமரச மனப்பான்மை:
சமரச மனப்பான்மை சீஷர்களை மாற்று ஆவிக்குரிய வாழ்வு என்று கூறும் ஒத்திசைவைப் பயிற்சி செய்ய வைத்துள்ளது.  வேதாகமக் கோட்பாடுகள் மதிப்பு அற்றதாகி;   கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் தனித்துவம் மறுக்கப்படுகிறது.

6) சாதிய மனப்பான்மை:
இனவெறி மனப்பான்மை படிநிலையை கொண்டாடுகிறது மற்றும் கிறிஸ்துவின் சரீரத்திற்கு தீங்கு விளைவிக்கிறது.  இந்த மனநிலையால் பல இளைஞர்கள் மற்றும் பெண்கள் திருமணம் செய்து கொள்ளவில்லை.

7) இரக்கமற்ற மனப்பான்மை:
கடின மனப்பான்மை கொண்டோர்  தேவைகளில் உள்ளோரை புறக்கணித்து  தாங்கள் வசதியாக வாழ்வதை மட்டுமே கண்ணோக்குகிறார்கள்.  அவர்கள் தங்கள் ஊழிய முன்னுரிமைகளில் அலட்சியமாகவும், செயலில் மந்தமாகவும் உள்ளனர்.

 8) வெற்றி மனப்பான்மை:
தங்களின் ஜெபங்கள் வல்லமையுள்ளது  மற்றும் ஜெயம் தரக்கூடியது என்று அவர்கள் செய்யும் ஜெபத்தைப் பற்றி தவறான புரிதலைக் கொண்டுள்ளனர்.  ஒன்றை மறைந்தார்கள்;  ஜெபம் அல்ல,   ஜெபத்திற்கு பதிலளிக்கும் தேவனே வெற்றி அல்லது ஜெயத்தைத் தருகிறவர்.

9) நுகர்வோர் மனநிலை:
ஒரு போதகர் நுகர்வோர் மனநிலையின் காரணமாக உள்ளூர் சபை உட்பட விற்றார், இப்போது சிறையில் அடைக்கப்பட்டார்.

10) பேராசை மனப்பான்மை:
விசுவாசிகள் மற்ற விசுவாசிகள் மீது பொறாமைப்படுகிறார்கள்; அதுபோல  தலைவர்கள் மற்ற நிறுவனங்களின் வெற்றி, விளம்பரதாரர்கள் அல்லது சொத்துக்களை விரும்புகிறார்கள்.

தேவன் மனந்திரும்புதலைக் கோருகிறார், இல்லையெனில் சபையில் அவருடைய தீர்ப்பு அனைத்து அசுத்தங்கள், பாவங்கள் மற்றும் நிந்தனைகளிலிருந்து சுத்தம் செய்யும்.

 கிறிஸ்துவின் சிந்தை எனக்கு இருக்கிறதா?

Author: Rev. Dr. J .N. மனோகரன்



Topics: Daily Devotions bible study Rev. Dr. J .N. மனோகரன்

tamil bible, tamil Bible search,tamil bible online , tamil bible download, tamil bible study, tamil bible free download