"இந்த டூத்பேஸ்ட்டைக் கொண்டு நீங்கள் பல்துலக்கினால், உங்கள் வாயிலிருந்து நல்ல பேச்சுதான வரும்" என்பதாக சமீபத்தில் ஒரு பிரபலமான பற்பசை விளம்பரத்தை காண முடிகிறது. ஆனால் பற்பசை எப்படி ஒருவரின் மனம், இதயம், நாக்கு மற்றும் வாய் என நல்ல வார்த்தைகளை மட்டும் பேசுவதற்கு மாற்றும்? வருத்தம் கொள்ள வேண்டியது என்னவெனில், உலகம் எல்லா பொய்யான வாக்குறுதிகளாலும் மக்களை ஏமாற்றுகிறது. ஆம், நமக்கெல்லாம் தெரியும்; “ஏற்ற சமயத்தில் சொன்ன வார்த்தை வெள்ளித்தட்டில் வைக்கப்பட்ட பொற்பழங்களுக்குச் சமானம்" (நீதிமொழிகள் 25:11). ஆனால் ஒருவன் தேவனிடம் சரணடைந்து, வேதத்தின்படி வாழ்ந்தாலொழிய, அந்த நபரால் நாக்கை ஒருபோதும் அடக்க முடியாது என்பதை அறிவோம்.
1) எண்ணங்கள்:
ஒரு கிறிஸ்தவ மனம் புதுப்பிக்கப்பட்டு, உண்மையான, கண்ணியமான, நீதியான, தூய்மையான, அழகான, பாராட்டுக்குரிய, சிறந்த, மற்றும் துதிக்கப்படத்தக்க எண்ணங்களால் நிரப்பப்பட வேண்டும் (ரோமர் 12:2; பிலிப்பியர் 4:8). எண்ணங்கள் நன்றாக இருக்கும்போது, வார்த்தைகள் உட்பட செயல்களும் நன்றாக இருக்கும்.
2) இதயம்:
கடினமான, பிடிவாதமான, கலகத்தனமான மற்றும் மோசமான இதயம் நல்ல வார்த்தைகளை உருவாக்க முடியாதே. அது சாபங்கள், தீய எண்ணம், முணுமுணுப்பு மற்றும் நிந்தனை போன்ற வார்த்தைகளை வேண்டுமானால் உருவாக்கலாம். கர்த்தராகிய இயேசு கிறிஸ்து போதித்தார்; "நல்ல மனுஷன் தன் இருதயமாகிய நல்ல பொக்கிஷத்திலிருந்து நல்லதை எடுத்துக் காட்டுகிறான்; பொல்லாத மனுஷன் தன் இருதயமாகிய பொல்லாத பொக்கிஷத்திலிருந்து பொல்லாததை எடுத்துக்காட்டுகிறான் இருதயத்தின் நிறைவினால் அவனவன் வாய் பேசும்" (லூக்கா 6:45). ஆம், ஒரு சீஷனின் இருதயம் கர்த்தருடைய அன்பினாலும் மகிழ்ச்சியினாலும் நிறைந்திருக்கும்போது, அது அழகான வார்த்தைகளை வெளிப்படுத்தும்.
3) நாக்கு:
“நாவை அடக்க ஒரு மனுஷனாலும் கூடாது; அது அடங்காத பொல்லாங்குள்ளதும் சாவுக்கேதுவான விஷம் நிறைந்ததுமாயிருக்கிறது" (யாக்கோபு 3:8). தெய்வீக உதவியும் ஞானமும் இல்லாமல் நாவைக் கட்டுப்படுத்தவோ அடக்கவோ முடியாது. நாவைக் கட்டுப்படுத்த தெய்வீக ஞானம் அவசியம் என்று யாக்கோபு எழுதுகிறார். "பரத்திலிருந்து வருகிற ஞானமோ முதலாவது சுத்தமுள்ளதாயும், பின்பு சமாதானமும் சாந்தமும் இணக்கமுமுள்ளதாயும், இரக்கத்தாலும் நற்கனிகளாலும் நிறைந்ததாயும், பட்சபாதமில்லாததாயும், மாயமற்றதாயுமிருக்கிறது" (யாக்கோபு 3:17).
4) வாய்:
"கர்த்தாவே, என் வாய்க்குக் காவல் வையும்; என் உதடுகளின் வாசலைக் காத்துக்கொள்ளும்" (சங்கீதம் 141:3) என்பதாக தாவீது ஜெபிக்கிறான். "உன் மாம்சத்தைப் பாவத்துக்குள்ளாக்க உன் வாய்க்கு இடங்கொடாதே" என்பதாக (பிரசங்கி 5:6) ல் வாசிக்கிறோம். சீஷர்கள் தவளைகளைப் போல முட்டாள்களாக இருக்கக் கூடாது, அது மழைக்காலத்தில் சத்தமிடுவதன் மூலம் தங்களைக் கொல்லும் பாம்புகளைப் போன்ற வேட்டையாடுபவர்களை தாங்களே வருவித்துக் கொள்கிறதே.
என்னுடைய நாவைக் கட்டுக்குள் வைத்திருக்கும்படியாக அல்லது காவல் வைக்கும்படியாக தேவனிடம் ஜெபிக்கிறேனா?
Author: Rev. Dr. J .N. மனோகரன்