1சாமுவேல் 16:7 மனுஷன் பார்க்கிறபடி நான் பாரேன்; மனுஷன் முகத்தைப் பார்ப்பான்; கர்த்தரோ இருதயத்தைப் பார்க்கிறார்.
எரேமியா 20:11,12 உள்ளந்திரியங்களையும் இருதயத்தையும் பார்க்கிற சேனைகளின் கர்த்தாவே...
1. உங்கள் இருதயம் கலங்கவேண்டாம்
யோவான் 14:1 உங்கள் இருதயம் கலங்காதிருப்பதாக; தேவனிடத்தில் விசுவாசமாயிருங்கள்; என்னிடத்திலும் விசுவாசமாயிருங்கள்
யோசுவா 1:9 கலங்காதே, கர்த்தர் உன்னோடே இருக்கிறார்.
1நாளாகமம் 28:20 நீ பயப்படாமலும் கலங்காமலும் இரு
2நாளாகமம் 20:15,17; 32:7 பயப்படாமலும் கலங்காமலும் இரு
2. உங்கள் இருதயம் பயப்படவேண்டாம்
யோவான் 14:27 சமாதானத்தை உங்களுக்கு வைத்துப்போகிறேன், என்னுடைய சமாதானத்தையே உங்களுக்குக் கொடுக்கிறேன்; உலகம் கொடுக்கிறபிரகாரம் நான் உங்களுக்குக் கொடுக்கிறதில்லை. உங்கள் இருதயம் கலங்காமலும் பயப்படாமலும் இருப்பதாக
ஏசாயா 41:10,13,14 நீ பயப்படாதே, நான் உன்னுடனே இருக்கிறேன்; திகையாதே, நான் உன் தேவன்.
ஏசாயா 43:1,5 பயப்படாதே, உன்னை மீட்டுக்கொண்டேன்.
ஏசாயா 54:4 பயப்படாதே, நீ வெட்கப்படுவதில்லை
வெளிப் 2:10 நீ எவ்வளவும் பயப்படாதே, மரணபரியந்தம் உண்மையாயிரு, அப்பொழுது ஜீவிகிரீடம் தருவேன். (சிமிர்னா)
3. உங்கள் இருதயம் துவளவேண்டாம்
உபாகமம் 20:3 இஸ்ரவேலே, கேளுங்கள்; இன்று உங்கள் சத்துருக் களுடன் யுத்தஞ்செய்யப் போகிறீர்கள்; உங்கள் இருதயம் துவள வேண்டாம்; நீங்கள் அவர்களைப் பார்த்துப் பயப்படவும் கலங்கவும் தத்தளிக்கவும் வேண்டாம்
எரேமியா 51:46 உங்கள் இருதயம் துவளாமலும், தேசத்தில் கேட்கப்படும் செய்தியினால் நீங்கள் பயப்படாமல் இருங்கள்.
Author: Rev. M. Arul Doss