சங்கீதம் 121:1-8 கர்த்தர் உன்னைக் காக்கிறவர்; கர்த்தர் உன் வலது பக்கத்திலே உனக்கு நிழலாயிருக்கிறார். பகலிலே வெயிலாகிலும் இரவிலே நிலவாகிலும் உன்னைச் சேதப்படுத்துவதில்லை.
1. அக்கினியால் சேதம் வராமல் காத்தார்
தானியேல் 3:1-30 சாத்ராக், மேஷாக் ஆபேத்நேகோ என்பவர்கள் எரிகிற அக்கினி சூளையின் நடுவிலே விழுந்தார்கள். அதற்கு நேபுகாத் நேச்சார்: இதோ, நாலுபேர் விடுதலையாய் அக்கினியின் நடுவிலே உலாவுகிறதைக் காண்கிறேன். அவர்களுக்கு ஒரு சேதமில்லை; நாலாம் ஆளின் சாயல் தேவபுத்திரனுக்கு ஒப்பாயிருக்கிறது என்றான்.
2. சிங்கத்தினால் சேதம் வராமல் காத்தார்
தானியேல் 6:1-28 சிங்கங்கள் என்னைச் சேதப்படுத்தாதபடிக்கு தேவன் தம்முடைய தூதனை அனுப்பி, அவைகளின் வாயைக் கட்டிப் போட்டார்... அவன் தன் தேவன்பேரில் விசுவாசித்திருந்தபடியால், அவனில் ஒரு சேதமும் காணப்படவில்லை.
3. பிசாசினால் சேதம் வராமல் காத்தார்
லூக்கா 4:33-37 ஜெப ஆலயத்திலே அசுத்த ஆவி பிடித்திருந்த ஒரு மனுஷன் இருந்தான். இயேசு: நீ பேசாமல் இவனை விட்டுப் புறப் பட்டுப்போ என்று அதை அதட்டினார்; அவனுக்கு ஒரு சேதமுஞ்செய் யாமல், அவனை விட்டுப் போய்விட்டது.
4. பாம்பினால் சேதம் வராமல் காத்தார்
அப்போஸ்தலர் 28:1-6 மெலித்தா தீவில் பவுல் விறகுகளை வாரி நெருப்பின் மேல் போடுகையில் ஒரு விரியன்பாம்பு அவனுடைய கையைக் கவ்விக்கொண்டது... அவன் சடிதியாய் விழுந்து சாவானென்று அவர்கள் பார்த்துக்கொண்டிருந்தார்கள்; ஒரு சேதமும் வராததைக் கண்ட போது, வேறு சிந்தையாகி, இவன் தேவனென்று சொல்லிக்கொண்டார்கள்
5. பசியினால் சேதம் வராமல் காத்தார்
அப்போஸ்தலர் 27:1-44 அநேக நாள் போஜனம்பண்ணாமல் இருந்த போது, பவுல் அவர்கள் நடுவிலே நின்று: மனுஷரே, இந்த வருத்தமும் சேதமும் வராதபடிக்கு என் சொல்லைக் கேட்டு... திடமனதாயிருங்கள் என்று இப்பொழுது உங்களுக்குச் சொல்லுகிறேன்; கப்பற்சேதமேயல் லாமல் உங்களில் ஒருவனுக்கும் பிராணச் சேதம் வராது.
Author: Rev. M. Arul Doss