சங்கீதம் 126:1-6 கர்த்தர் நமக்குப் பெரிய காரியங்களைச் செய்தார்; இதினிமித்தம் நாம் மகிழ்ந்திருக்கிறோம்
1. கர்த்தர் அதிசயமான காரியங்களைச் செய்கிறார்
யோபு 9:10; யோபு 5:9 ஆராய்ந்து முடியாத பெரிய காரியங்களையும், எண்ணி முடியாத அதிசயங்களையும் அவர் செய்கிறார். (யோபும், எலிப்பாசும்)
எரேமியா 33:3 என்னை நோக்கிக் கூப்பிடு...நீ அறியாததும் உனக்கு எட்டாததுமான பெரிய காரியங்களை உனக்கு அறிவிப்பேன்
எரேமியா 32:17,27 உம்மாலே செய்யக்கூடாத அதிசயமான காரியம் ஒன்றுமில்லை
2. கர்த்தர் ஆச்சரியமான காரியங்களைச் செய்கிறார்
யோபு 37:1-14 தேவன் தம்முடைய சத்தத்தை ஆச்சரியமாய்க் குமுறப் பண்ணுகிறார்; நாம் கிரகிக்கக்கூடாத பெரிய காரியங்களை அவர் செய்கிறார்
யோவேல் 2:21 தேசமே, பயப்படாதே, மகிழ்ந்து களிகூரு; கர்த்தர் பெரிய காரியங்களைச் செய்வார்
3. கர்த்தர் மகத்துவமான காரியங்களைச் செய்கிறார்
உபாகமம் 11:1-15 கர்த்தர் செய்த மகத்துவமான கிரியைகளை யெல்லாம் உங்கள் கண்கள் அல்லவோ கண்டது
சங்கீதம் 86:10 தேவரீர் மகத்துவமுள்ளவரும் அதிசயங்களைச் செய்கிறவர்
சங்கீதம் 92:5 கர்த்தாவே, உமது கிரியைகள் எவ்வளவு மகத்துவமானவை
சங்கீதம் 111:3; ஏசாயா 12:5; ஏசாயா 28:29; வெளிப். 15:3
4. கர்த்தர் மகிமையான காரியங்களைச் செய்கிறார்
1சாமுவேல் 12:16-25 கர்த்தர் உங்கள் கண்களுக்கு முன்பாகச் செய்யும் பெரிய காரியத்தை நின்று பாருங்கள்... அவர் உங்களிடத்தில் எவ்வளவு மகிமையான காரியங்களைச் செய்தார் என்பதைச் சிந்தித்துப்பாருங்கள்.
5. கர்த்தர் பயங்கரமான காரியங்களைச் செய்கிறார்
யாத்திராகமம் 34:10 பூமியெங்கும் எந்த ஜாதிகளிடத்திலும் செய்யப்படாத அதிசயங்களை உன் ஜனங்களுக்கு முன்பாக செய்வேன்... உன்னோடே கூட இருந்து, நான் செய்யும் காரியம் பயங்கரமாயிருக்கும்
உபாகமம் 10:21 உன் கண் கண்ட இந்த பெரிய பயங்கரமான காரியங்களை உன்னிடத்தில் செய்த உன் தேவன் அவரே 2சாமுவேல் 7:23-24
Author: Rev. M. Arul Doss