கர்த்தர் நமக்காக யாவையும் செய்கிறவர்

சங்கீதம் 138:8 கர்த்தர் எனக்காக யாவையும் செய்து முடிப்பார்; கர்த்தாவே, உமது கிருபை என்றுமுள்ளது; 
சங்கீதம் 57:2 எனக்காக யாவையும் செய்து முடிக்கப்போகிற தேவனாகிய உன்னதமான தேவனை நோக்கிக் கூப்பிடுவேன். யோபு 42:2  

1. கர்த்தர் நமக்காக வேண்டுதல் செய்கிறவர் 
ரோமர் 8:26,34 ஆவியானவர்தாமே வாக்குக்கடங்காத பெருமூச்சுகளோடு நமக்காக வேண்டுதல்செய்கிறார். ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கிறவன் யார்? கிறிஸ்துவே மரித்தவர்; அவரே எழுந்துமிருக்கிறவர்; அவரே தேவனுடைய வலதுபாரிசத்திலும் இருக்கிறவரும்; நமக்காக வேண்டுதல் செய்கிறவரும் அவரே. யோவான் 17:1-26 

2. கர்த்தர் நமக்காக பரிந்து பேசுகிறவர் 
1யோவான் 2:1  ஒருவன் பாவஞ்செய்வானானால் நீதிபரராயிருக்கிற இயேசு கிறிஸ்து நமக்காகப் பிதாவினிடத்தில் பரிந்து பேசுகிறவராயிருக்கிறார்
லூக்கா 23:34  இயேசு: பிதாவே, இவர்களுக்கு மன்னியும் தாங்கள் செய்கிறது இன்னதென்று அறியாதிருக்கிறார்களே என்றார்.

3. கர்த்தர் நமக்காக வாய்க்கச் செய்கிறவர் 
ஆதியாகமம் 39:3 கர்த்தர் யோசேப்போடே இருக்கிறார், அவன் செய்கிற யாவைûயும் கர்த்தர் வாய்க்கப்பண்ணுகிறார் என்று எஜமான் கண்டான் 
சங்கீதம் 37:5 உன் வழியைக் கர்த்தருக்கு ஒப்புவித்து, அவர்மேல் நம்பிக்கையாயிரு; அவரே காரியத்தை வாய்க்கப்பண்ணுவார்.

4. கர்த்தர் நமக்காக யுத்தம் செய்கிறவர் 
யோசுவா 23:3 உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களுக்கு முன்பாக இந்தச் சகல ஜாதிகளுக்கும் செய்த யாவையும் நீங்கள் கண்டீர்கள்; உங்கள் தேவனாகிய கர்த்தர் தாமே உங்களுக்கு யுத்தம்பண்ணினார். 
நெகேமியா 4:20 நம்முடைய தேவன் நமக்காக யுத்தம் பண்ணுவார்

5. கர்த்தர் நமக்காக வழக்காடி மீட்கிறவர் 
1சாமுவேல் 24:1-22 தாவீது சவுலைப் பார்த்து: கர்த்தர் நியாயாதி பதியாயிருந்து, எனக்கும் உமக்கும் நியாயந்தீர்ந்து, எனக்காக வழக்காடி, நான் உம்முடைய கைக்குத் தப்ப என்னை விடுவிப்பீராக என்றான் 
சங்கீதம் 119:154 எனக்காக நீர் வழக்காடி என்னை மீட்டுக்கொள்ளும், உம்முடைய வார்த்தையின்படியே என்னை உயிர்ப்பியும். மீகா 7:9
Author: Rev. M. Arul Doss 



Topics: தமிழ் கிறிஸ்தவ பிரசங்கம் (Tamil Christian Sermon) பிரசங்க குறிப்புகள் Perasanga Kurippugal Tamil Sermon Outlines

tamil bible, tamil Bible search,tamil bible online , tamil bible download, tamil bible study, tamil bible free download