நன்றி என்னும் நெடுந்தகைமை

நைந்து கிழிந்த அலங்கோலமான
ஆடையில் முதியவர் ஒருவர், நன்கு உடையணிந்த ஒரு இளைஞரால் முதியோர் இல்லத்திற்கு அழைத்து வரப்பட்டார்.  இந்த முதியவர் ஊர் பெயர் தெரியாமல் சுற்றித்திரிவதை தான் பார்த்ததாகவும், அனாதை என்றும், இலவச சேவை வழங்கும் முதியோர் இல்லத்தில் அவரை சேர்க்க வந்ததாகவும் அந்த இளைஞன் கூறினான். மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு அந்த முதியவர் இறந்தார். அப்போதுதான் அந்த முதியோர் இல்லத்திற்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. அது என்னவென்றால், இந்த முதியவரை அன்று இந்த இல்லத்தில் சேர்த்தது அவரது மகன். இறந்த பெரியவரின் வங்கி இருப்பு, நிலம், சொத்து உடைமைகள் என அனைத்தும் மகனுக்கு சொந்தமானது. தந்தையை கவனித்துக் கொள்ளாமல் ஒரு முதியோர் இல்லத்தில் விட்ட மகனுக்கு தான் தன் அனைத்து சொத்தையும் கொடுத்தாரேயன்றி, அந்த முதியோர் இல்லத்தில் தன் இறுதிகாலம் வரை இலவசமாக அனுபவிக்க மாத்திரமே செய்தார். அவரை பராமரித்த நன்றிக்காக கூட அந்த முதியோர் இல்லத்திற்கு எதுவுமே செய்யவில்லை. அப்போது அந்த இல்லத்தை நடத்தும் சமூக ஆர்வலர் கூறியதாவது; முதியவருக்கு, தன்னை நன்கு கவனித்த இல்லத்தை விட கைவிட்ட மகன் மீது விசுவாசம் அதிகம். இது நமது கலாச்சாரத்தின் அமைப்பு என்றால், இதுபோன்ற ஒரு நிறுவனத்தை நாம் நடத்த முடியாது. ஆம், அது எவ்வளவு உண்மை? இதுபோன்று சேவை செய்யும் இல்லத்தில் நன்கு அதன் பயனை அனுபவித்து விட்டு அதற்கு தங்கள் ஆதரவை அளிக்க தயாராக இல்லையென்றால் அத்தகைய நிறுவனங்கள் எவ்வாறு பிழைக்க முடியும்?

குழந்தைகள் நலனுக்காக ஆரம்பிக்கப்பட்ட அநேக கிறிஸ்தவ நிறுவனங்கள், அவர்கள் பெரியவர்களாக மாறி நன்றாக சம்பாதிக்க ஆரம்பித்த பின்னர் தாங்கள் உருவாக்கிய குழந்தைகளிடமிருந்து ஆதரவைப் பெறவில்லை. எகிப்து ராஜ்ஜியத்திற்கான யோசேப்பின் பங்களிப்பு, ராஜ்யத்தின் அனைத்து குடிமக்களுக்கும் மறக்கப்பட்டது. "யோசேப்பை அறியாத புதிய ராஜன் ஒருவன் எகிப்தில் தோன்றினான்" (யாத்திராகமம் 1:8). புதிய தலைமுறையினர் யோசேப்பைப் பற்றி அறிந்திருக்கவில்லை, அவருக்கும் அவருடைய மக்களான இஸ்ரவேலுக்கும் நன்றி தெரிவிக்கவில்லை.  

யோவாஸ் படுகொலையிலிருந்து பாதுகாக்கப்பட்டு ஏழு வயதாக இருந்தபோது யோய்தா ஆசாரியனால் ராஜாவாக அபிஷேகம் செய்யப்பட்டான்.  யோவாஸ் யோய்தாவால் வழிநடத்தப்பட்ட ஒரு நல்ல ராஜா.  அவனுடைய வழிகாட்டியான யோய்தாவின் மரணத்திற்குப் பிறகு, யோவாஸ் கர்த்தரை விட்டு விலகிச் சென்றான். யோய்தாவின் மகன் சகரியா யோவாசைக் கண்டித்தான்.  தேவனுடைய சத்தத்திற்கு செவிசாய்க்காமல், யோவாஸ் சதி செய்து சகரியாவை கல்லெறிந்துக் கொல்லும்படி செய்தான்.  "அப்படியே அவனுடைய தகப்பனாகிய யோய்தா தனக்குச் செய்த தயையை ராஜாவாகிய யோவாஸ் நினையாமல் அவனுடைய குமாரனைக் கொன்றுபோட்டான்" (2 நாளாகமம் 24:22). இதில் வருத்தம் என்னவெனில், சகரியா எந்த இடத்தில் கொல்லப்பட்டானோ, அந்த இடத்தில் தான் அவனுடைய தந்தை யோய்தா யோவாசை ராஜாவாக அபிஷேகம் செய்தார் (2 நாளாகமம் 23:10-11).

நன்றியுணர்வு என்பது மேன்மையை ஈட்டித் தரும் ஆவிக்குரிய செயலாகும்.  நன்றியுணர்வு இல்லாதது பேராசை, ஊழல் மற்றும் வன்முறையை வளர்க்கிறது.

 தேவனுக்கும் மற்றவர்களுக்கும் நான் நன்றியுள்ள நபராக இருக்கிறேனா?

  Author: Rev. Dr. J .N. மனோகரன்



Topics: Daily Devotions bible study Rev. Dr. J .N. மனோகரன்

tamil bible, tamil Bible search,tamil bible online , tamil bible download, tamil bible study, tamil bible free download