மக்கள் பிரபலமாகவும், வளமாகவும் வாழ விரும்புகிறார்கள். கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் சீஷர்களில் இருவர் அபிலாஷைகள் (விருப்பம்), லட்சியங்கள் மற்றும் ஆசைகளால் உந்தப்பட்டதில் ஆச்சரியமில்லை. ஆம், அவர்கள் ஒரு உயர்ந்த பதவியை விரும்பினர். செபதெயுவின் குமாரர்கள் நேரடியாக ஆண்டவரிடம் கேட்காமல், தங்கள் தாயின் மூலம் மத்தியஸ்தம் செய்ய முயன்றனர். "அவள்: உம்முடைய ராஜ்யத்திலே என் குமாரராகிய இவ்விரண்டுபேரில் ஒருவன் உமது வலது பாரிசத்திலும், ஒருவன் உமது இடதுபாரிசத்திலும் உட்கார்ந்திருக்கும்படி அருள் செய்யவேண்டும் என்றாள். இயேசு பிரதியுத்தரமாக: நீங்கள் கேட்டுக்கொள்ளுகிறது இன்னது என்று உங்களுக்குத் தெரியவில்லை. நான் குடிக்கும் பாத்திரத்தில் நீங்கள் குடிக்கவும், நான் பெறும் ஸ்நானத்தை நீங்கள் பெறவும் கூடுமா என்றார். அதற்கு அவர்கள் கூடும் என்றார்கள். அவர் அவர்களை நோக்கி: என் பாத்திரத்தில் நீங்கள் குடிப்பீர்கள், நான் பெறும் ஸ்நானத்தையும் நீங்கள் பெறுவீர்கள்; ஆனாலும் என் வலது பாரிசத்திலும் இடது பாரிசத்திலும் உட்கார்ந்திருக்கும்படி என் பிதாவினால் எவர்களுக்கு ஆயத்தம்பண்ணப்பட்டிருக்கிறதோ அவர்களுக்கேயல்லாமல், மற்றொருவருக்கும் அதை அருளுவது என் காரியமல்ல என்றார்" (மத்தேயு 20:20-24). துரதிர்ஷ்டவசமாக, ராஜ்யத்திற்கு எதிரான மதிப்பீடுகளாக கருதப்படும் மரியாதை அந்தஸ்து எனும் மதிப்புகளை உலகம் அனுபவிக்கவும் நாடி தேடவும் விளைகின்றது.
1) பதவியும் மேன்மையும்:
தேர்ந்தெடுக்கப்பட்ட பன்னிரண்டு அப்போஸ்தலர்களில் தங்களுக்கே அதிக முக்கியத்துவம் அல்லது தங்களுக்கே முதன்மை என்பது அவர்களின் விருப்பமாக இருந்தது.
2) அதிகாரமும் ஆடம்பரமும்:
அவர்கள் மக்கள் மீதும் தேவனின் முழு ராஜ்யத்தின் மீதும் அதிகாரம் செலுத்த நாடினார்கள். மக்கள் மற்றும் நிதி உள்ளிட்ட வளங்களின் மீதும் அதிகாரம்.
3) நெருக்கம்:
அவர்களின் நெருக்கம் அவர்களுக்கு எல்லா இடங்களிலும் எப்போதும் முன்னுரிமை அளிக்கும். இப்படியான நெருக்கம் மக்களை தவறாக கையாளுவதற்கான வாய்ப்பைக் கொடுக்கும்.
4) முன்னுரிமை:
தேவ ராஜ்யத்திற்கு மாறாக அவர்களின் சுயமே முதன்மையானது. விமானங்களில் முதன்மை வகுப்பு பயணிகளைப் போல, அவர்களுக்கும் முன்னுரிமை கிடைக்கும்.
5) புகழ்:
மக்கள் மத்தியில் பிரபலம் அடைய வாய்ப்பு இருந்தது. இன்னும் சொல்லப்போனால், அவர்களுக்கு தேவர்கள் அளவுக்கு அந்தஸ்து கொடுக்கப்படும்.
6) உடைமைகள்:
இவை அனைத்தும் உடைமைகளை பெருக்கிக் கொள்ள உதவி செய்யும். அது ஆடம்பரமான வாழ்க்கை முறையையும் எதிர்கால பாதுகாப்பையும் உறுதி செய்யும்.
7) தனிப்பட்ட நன்மை:
யோவான் மற்றும் யாக்கோபுக்கு தனிப்பட்ட நன்மைகள் இருக்கும், அது அவர்களின் குடும்ப உறுப்பினர்களிடையே அந்தஸ்தைப் பெற உதவும்.
உலகின் மதிப்புகளுக்கு மாறானது ராஜ்யத்தின் மதிப்புகள். ராஜ்யத்தின் பிள்ளைகள் ஊழியக்காரர்களாக இருப்பதை விரும்புகிறார்கள், பதவிகளைத் தேடுவதில்லை. அவர்கள் அதிகாரத்தை திரட்டுவதில்லை, ஆனால் மற்றவர்களுக்கு அதிகாரம் அளிக்கிறார்கள். ஏழை ஒடுக்கப்பட்டவர்கள் அவர்களின் இதயத்திற்கு நெருக்கமானவர்களாகவும் மற்றும் முதன்மையானவர்களாகவும் காணப்படுகிறார்கள். மக்கள் கவனம் அவர்களின் விருப்பம் அல்ல, ஆனால் திரைமறைவில் ஊழியம் செய்வதை விரும்புவார்கள். ராஜ்யத்தில், பெறுவதை விட கொடுப்பது அதிக பாக்கியம் என்பதை அறிந்தவர்கள். ராஜ்யத்தின் மக்கள் சுயநலம் கொண்டவர்கள் அல்ல, ஆனால் மற்றவர்களின் முன்னேற்றம் மற்றும் நலனில் அக்கறை கொண்டவர்கள். யாக்கோபும் யோவானும் காலங்கள் செல்ல செல்ல ராஜ்யத்தின் சத்தியத்தை உணர்ந்தவர்களாய் அதைக் கொண்டாடினர்.
தேவ ராஜ்யத்தின் மதிப்புகளால் என் வாழ்க்கை நிர்வகிக்கப்படுகிறதா?
Author: Rev. Dr. J. N. Manokaran