மத்தேயு 27:46; மாற்கு 15:34 ஏலி, ஏலி, லாமா சபக்தானி என்று மிகுந்த சத்திமிட்டுக் கூப்பிட்டார்; அதற்கு என் தேவனே, என் தேவனே, ஏன் என்னைக் கைவிட்டீர் என்று அர்த்தமாம்.
சங்கீதம் 22:1 என் தேவனே, என் தேவனே, ஏன் என்னைக் கைவிட்டீர்? என் வார்த்தைகளை கேளாமல் ஏன் தூரமாயிருக்கிறீர்?
1. பாவமறியாதவர் நமக்காக பாவமானார்
2கொரிந்தியர் 5:21 நாம் அவருக்குள் தேவனுடைய நீதியாகும்படிக்கு, பாவம் அறியாத அவரை நமக்காகப் பாவமாக்கினார்.
எபிரெயர் 4:15 எல்லாவிதத்திலும் நம்மைப்போல் சோதிக்கப்பட்டும், பாவமில்லாதவராயிருக்கிற பிரதான ஆசாரியரே நமக்கிருக்கிறார்.
1யோவான் 3:5 அவர் நம்முடைய பாவங்களைச் சுமந்து தீர்க்க வெளிப்பட் டாரென்று அறிவீர்கள்; அவரிடத்தில் பாவமில்லை.
ரோமர் 8:3 தம்முடைய குமாரனைப் பாவ மாம்சத்தின் சாயலாகவும், பாவத்தைப் போக்கும் பலியாகவும் அனுப்பி, மாம்சத்திலே பாவத்தை ஆக்கினைக்குள்ளாகத் தீர்த்தார்.
யோவான் 1:29 உலகத்தின் பாவத்தை சுமந்து தீர்க்கிற தேவாட்டுக்குட்டி
2. ஒன்றாயிருந்தவர் நமக்காக தனிமையானார்
ஏசாயா 59:2 உங்கள் அக்கிரமங்களே உங்களுக்கும் உங்கள் தேவனுக்கும் நடுவாகப் பிரிவினை உண்டாக்குகிறது; உங்கள் பாவங்களே அவர் செவிகொடாதபடிக்கு அவருடைய முகத்தை உங்களுக்கு மறைக்கிறது.
யோவான் 10:30 நானும் பிதாவும் ஒன்றாயிருக்கிறோம் என்றார்.
யோவான் 8:29 என்னை அனுப்பினவர் என்னுடனேகூட இருக்கிறார்... அவர் என்னைத் தனியே இருக்கவிடவில்லை என்றார்.
யோவான் 16:32 நான் தனித்திரேன், பிதா என்னுடனே இருக்கிறார்.
3. அருகிலிருந்தவர் நமக்காக தூரமானார்
சங்கீதம் 22:11 என்னைவிட்டுத் தூரமாகாதேயும்; ஆபத்து நெருங்கி யிருக்கிறது; சகாயரும் இல்லை.
சங்கீதம் 22:19 கர்த்தாவே, தூரமாகாதேயும்; சகாயம்பண்ணத் தீவிரியும்
சங்கீதம் 38:21 என்னைக் கைவிடாதேயும்; எனக்குத் தூரமாகாதேயும்
அப்போஸ்தலர் 17:27 அவர் நம்மில் ஒருவருக்கும் தூரமானவரல்லவே.
Author: Rev. M. Arul Doss