முட்டாள்தனமான கவனம்

இரண்டு முயல்களை துரத்துபவர்கள் ஒன்றையும் பிடிக்க மாட்டார்கள் என்பது பழமொழி. ஒரு ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் கடுமையாக உழைத்து லாரி ஓட்டுனராக மாறினார். ஓட்டுனர் உரிமம் இருந்தது, ஆனால் அனுபவம் இல்லை. ஆனாலும், மலைப்பாங்கான நிலப்பரப்பில் பயணிக்கும் ஒரு பெரிய சரக்கு வாகனத்தில் சரக்குகளை ஏற்றிச் செல்லும் பொறுப்பு அவரிடம் ஒப்படைக்கப்பட்டது. ஓட்டிச் சென்றபோது, சாலையில் முயல் ஒன்று தென்பட்டது. ஒரு ஏழை குடும்பத்தில் வளர்க்கப்பட்டவருக்கு, அத்தகைய முயல்கள் உண்மையில் ஒரு விருந்து. சரக்கு வண்டியை அவசரமாக ஓட்டி முயலைத் துரத்திப் பிடித்துவிடலாம் என்று நினைத்தார். பயந்து ஓடிய முயல் மலையின் விளிம்பிலிருந்து கீழே குதித்தது; இந்த முட்டாள் ஓட்டுனர் அவரது வாகனத்தை விபத்துக்குள்ளாக்கினார். சரக்கு வாகனம் அழிக்கப்பட்டது, அவரோ தனது முட்டாள்தனமான இந்த நாட்டத்தைப் பற்றிச் சொல்ல காயங்களுடன் தப்பினார்.

வாழ்க்கைப் பயணம்: 
மனித வாழ்க்கை ஒரு பயணம், விரும்பிய இலக்கான தேவ பிரசன்னமாகிய பரலோகத்தைச் சென்று அடைய சரியான பாதையைத் தேர்ந்தெடுக்க வேண்டும். கர்த்தர் மனிதர்களுக்கு முன் ஜீவன் மற்றும் மரணம் என இரண்டு தேர்வுகளை வைக்கிறார். ஜீவனைத் தேர்ந்தெடுக்கிறவர்கள் நித்திய ஜீவனைப் பெறுவார்கள். (உபாகமம் 30:19) ஒரு சிலர் சரியான தேர்வு செய்கிறார்கள், ஆனால் பாதையைத் தொடராமல், அந்த புதிய ஓட்டுநரைப் போல திசை திருப்பப்படுகிறார்கள்.

வழி விலகல்கள்: 
அதிகாரத்தைப் பின்தொடர்வது ஒரு நபர் எடுக்கக்கூடிய மிகவும் முக்கியமான வழிவிலகல்களில் ஒன்றாகும். மற்றவர்களை ஆதிக்கம் செலுத்துவது, ஆணையிடுவது மற்றும் வழிநடத்துவது என்பது எல்லா மனிதர்களின் பொதுவான விருப்பமாகும். ஊழியக்காரர்கள் மற்றும் உக்கிராணக்கரர்கள் என்கிற கிறிஸ்தவ விழுமியங்களில் வளருவதற்குப் பதிலாக, பலர் முதலாளிகளாகவும் சர்வாதிகாரிகளாகவும் மாற விரும்புகிறார்கள். உள்ளூர் தேவாலயங்கள் மற்றும் சபைப்பிரிவுகளில் தலைவர்களாக மாறுவதற்கு சாதாரன விசுவாசிகள் அனைத்து அநீதியான முறைகளையும் பயன்படுத்துகின்றனர். திருச்சபை குருமார்களும் பேராயர்களாக தேர்ந்தெடுக்கப்பட்ட அரசியல்வாதிகளின் முறைகளையும் பயன்படுத்துகின்றனர். அவர்கள் அத்தகைய பதவிகளால் வரும் பலத்தைப் பெறலாம், ஆனால் ஆவிக்குறிய வல்லமையையும் தார்மீக அதிகாரத்தையும் இழக்க நேரிடும். செல்வத்தைப் பின்தொடர்வதும் ஒரு நபரை பூமிக்குரிய எண்ணம் கொண்டவனாக மாற்றும் மற்றொரு வழிவிலகலாகும். ஒருவனின் செல்வம் எங்கேயோ அங்கே அவனுடைய இதயமும் இருக்கும் என்று ஆண்டவர் இயேசு எச்சரித்தார். (மத்தேயு 6:21)

கவனச்சிதறல்கள்: 
ஆசைகள்/ இச்சைகளைப் போன்ற பாவம்நிறைந்த கவனச்சிதறல்களைப்  பின்தொடர்வது. முயல், அந்த ஓட்டுனரை திசை திருப்பியது போல், பேராசை, பண ஆசை, விபச்சாரம் அல்லது ஆபாச படங்கள் ஆகியவை விசுவாசமாகிய  கப்பலை சிதைக்கும். பவுல் கிறிஸ்துவின் பரலோக அழைப்பிலிருந்து திசைதிருப்ப மறுத்துவிட்டார். (பிலிப்பியர் 3:14)

நான் இலக்கைத் தொடருகிறேனா?

Author: Rev. Dr. J .N. மனோகரன்



Topics: Daily Devotions bible study Rev. Dr. J .N. மனோகரன்

tamil bible, tamil Bible search,tamil bible online , tamil bible download, tamil bible study, tamil bible free download