1. இழக்கப்போகிறோம் என்று தெரிந்தும்
விசுவாசித்த ஆபிரகாம், தானியேல்
ஆதியாகமம் 22:1-14 ஆபிரகாம் தன் வேலைக்காரரை நோக்கி: நீங்கள் கழுதையை நிறுத்தி இங்கே காத்திருங்கள், நானும் பிள்ளையாண்டானும் அவ்விடமட்டும் போய், தொழுதுகொண்டு, உங்களிடத்துக்குத் திரும்பி வருவோம் என்றான்.
ஆதியாகமம் 22:8 ஆபிரகாம்: என் மகனே, தேவன் தமக்குத் தகன பலிக்கான ஆட்டுக்குட்டியைப் பார்த்துக்கொள்ளுவார் என்றான்.
தானியேல் 6:10 தானியேலோவென்றால், அந்தப் பத்திரத்துக்குக் கையெ ழுத்து வைக்கப்பட்டதென்று அறிந்தபோதிலும், தன் வீட்டுக்குள்ளேபோய் தன் மேல் அறையிலே எருசலேமுக்கு நேராக பலகணிகள் திறந்திருக்க, தினம் மூன்றுவேளையும் தன் தேவனுக்கு முன்பாக முழங்காற்படியிட்டு ஜெபம்பண்ணி, ஸ்தோத்திரம் செலுத்தினாôன்
2. இழந்துகொண்டிருக்கிறோம் என்று தெரிந்தும்
விசுவாசித்த யோபு
யோபு 2:7-10 சாத்தான் கர்த்தருடைய சந்நிதியைவிட்டுப் புறப்பட்டு, யோபின் உள்ளங்கால் தொடங்கி அவன் உச்சந்தலைமட்டும் கொடிய பருக்கலால் வாதித்தான். அவன் ஒரு ஓட்டை எடுத்து, தன்னைச் சுறண்டிக் கொண்டு சாம்பலில் உட்கார்ந்தான்... நீ பயித்தியகாரி பேசுகிறதுபோலப் பேசுகிறாய்; தேவன் கையிலே நன்மையைப் பெற்ற நாம் தீமையையும் பெறவேண்டாமா? என்றான்; இவைகள் எல்லாவற்றிலும் யோபு பாவஞ்செய்யவில்லை
யோபு 13:15 அவர் என்னைக் கொன்றுபோட்டாலும், அவர்மேல் நம்பிக் கையாயிருப்பேன்
3. இழந்துவிட்டோம் என்று தெரிந்தும்
விசுவாசித்த சாத்ராக் மேஷாக் ஆபேத்நேகோ
தானியேல் 3:1-25 நாங்கள் ஆராதிக்கிற எங்கள் தேவன் எங்களைத் தப்புவிக்க வல்லவராயிருக்கிறார்; அவர் எரிகிற அக்கினிச் சூளைக்கும், ராஜாவாகிய உம்முடைய கைக்கும் நீங்கலாக்கி விடுவிப்பார். விடுவிக் காமற்போனாலும், நாங்கள் உம்முடைய தேவர்களுக்கு ஆராதனை செய்வதுமில்லை, நீர் நிறுத்தின பொற்சிலையைப் பணிந்தகொள்ளுவது மில்லை
Author: Rev. M. Arul Doss