ஒவ்வொரு விசுவாசியும் தனக்கு மாற்றத்தை ஏற்படுத்திய ஆவிக்குரிய அனுபவத்தைப் பகிர்ந்து கொள்வது அவசியம். சாட்சியமளிப்பதும், பகிர்வதும், தனிப்பட்ட மாற்றத்தை முன்வைப்பதும் என்பது ஞானமாக செய்யப்பட வேண்டும். பவுலின் மாற்றம் வியத்தகு முறையில் இருந்தது, அது புதிய ஏற்பாட்டில் வெவ்வேறு வடிவங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது. பொதுவாக, மாற்றம் என்பது ஒரு விஷயம் தான் ஆனால் அது மூன்று பிரிவுகளைக் கொண்டுள்ளது; முதலில், மாற்றத்திற்கு முந்தைய வாழ்க்கை, இரண்டாவது, மாற்றத்தின் நிகழ்வு மற்றும் மூன்றாவது, மாற்றப்பட்ட வாழ்க்கை. குறிப்பிட்ட நோக்கத்துடன் வெவ்வேறு வகையான பார்வையாளர்களுக்கு வழங்கப்பட்ட ஐந்து மாதிரிகள் இங்கே உள்ளன.
1) வர்ணனை (விவரிப்பு) மாதிரி (அப்: 1:1-9):
என்ன நடந்ததோ அந்த நிகழ்வை அப்படியே லூக்கா வழங்குகிறார். பவுலின் பயணத்திற்கான காரணம், பின்பதாக அவருக்கு கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவோடு ஏற்பட்ட தனிப்பட்ட சந்திப்பு அதாவது ஆண்டவர் அளித்த சிட்சை, பின்பு குணமாகுதல், அர்ப்பணிப்பு மற்றும் மாற்றம் பெற்ற வாழ்க்கை.
2) யூதர்கள்:
தன்னைக் கொல்ல விரும்பிய விரோதமான சபையாரிடம் பவுல் தனது சாட்சியத்தை எப்படிப் பகிர்ந்து கொள்கிறார் என்பதை லூக்கா பதிவு செய்கிறார் (அப்போஸ்தலர் 22: 1-21). இங்கே பவுல் நியாயப்பிரமாணத்தின் மீதான வைராக்கியம் மற்றும் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் சீஷர்களிடம் காணப்படும் வன்முறை மனப்பான்மை ஆகியவற்றை விளக்குகிறார். பின்னர் புறஜாதிகள் உட்பட அனைவருக்குமான சுவிசேஷ அருட்பணியைப் பற்றியும், அதைத் தொடர்ந்து தனது மனமாற்ற அனுபவத்தையும் வழங்குகிறார்.
3) புறஜாதிகள்:
ரோமானியப் பேரரசின் முக்கியஸ்தர்கள் முன் தனது வாதத்தை முன்வைக்க பவுல் அழைக்கப்பட்டார் (அப்போஸ்தலர் 26:1-29). இதிலும், பவுல் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவைப் பின்பற்றுபவர்களுக்கு எதிரான தனது விரோதத்தையும், தமஸ்கு சாலையில் ஏற்பட்ட வியத்தகு அனுபவத்தையும், பரலோக தரிசனத்திற்குக் கீழ்ப்படிந்ததையும் விளக்குகிறார்.
4) இறையியல் புரிதல்:
பிலிப்பி நகரத்தில் உள்ள விசுவாசிகளிடம் அவர் நியாயப்பிரமாணத்தைப் பற்றி எவ்விதம் பெருமிதம் கொண்டார் என்றும், பின்னர் இவையெல்லாம் வெறும் குப்பை அல்லது நஷ்டம் என்று புரிந்துகொண்டதைக் குறித்தும் விளக்குகிறார். அவருடைய உயிர்த்தெழுதலின் வல்லமையை அனுபவிக்க அவர் பாடுபடவும் தன் விருப்பத்தை தெரிவித்தார் (பிலிப்பியர் 3:1-11).
5) திருத்தங்கள்:
கர்த்தராகிய இயேசு கிறிஸ்து எவ்வாறு பாவிகளை இரட்சிக்க வந்தார் என்ற நற்செய்தியின் சாராம்சத்தை பவுல் விளக்குகிறார். மேலும் எப்படி பாவி பரிசுத்தவானாய் மாற முடியும் என்பதற்கு தன்னையே சாட்சியாக மிக ஞானமாக முன் வைக்கிறார் (நிறுத்துகிறார்) (1 தீமோத்தேயு 1:12-17).
சாட்சியத்தைப் பகிர்வது தன்னியல்பானதாக இருக்க வேண்டும், ஆனால் நம் மனதில் முன்கூட்டியே சிந்தித்து ஆயத்தப்பட வேண்டும். “கர்த்தராகிய தேவனை உங்கள் இருதயங்களில் பரிசுத்தம்பண்ணுங்கள்; உங்களிலிருக்கிற நம்பிக்கையைக்குறித்து உங்களிடத்தில் விசாரித்துக் கேட்கிற யாவருக்கும் சாந்தத்தோடும் வணக்கத்தோடும் உத்தரவுசொல்ல எப்பொழுதும் ஆயத்தமாயிருங்கள்" (1 பேதுரு 3:15).
எனது விசுவாசத்தை எப்போதும் அனைவருக்கும் பகிர்ந்து கொள்ள நான் ஆயத்தமா?
Author: Rev. Dr. J. N. Manokara